(Reading time: 13 - 25 minutes)

"விடு விடு!விட்டுவிடு!"-அவன் நிறுத்தினான்.

"இதோப்பாரும்மா நிலா!எனக்கு உன்னை பிடித்திருக்கு!நான் ரஞ்சித் கல்யாணம் பண்ணிக்கலைன்னு தான் அவன் கூட சண்டை போடுவேன்.இந்த திருடன் முதலிலே இவ்வளவு காரியத்தை பண்ணி இருந்தான்னு தெரிந்திருந்தா நான் ஊரறிய என்னிக்கோ உங்க கல்யாணத்தை முடித்திருப்பேன்!"-நிலாவின் முகம் திகைத்தது.

"உ...உங்களுக்கு என் மேலே கோபம் இல்லையா?"

"உன் மேலே எதுக்கு கோபம் வரணும்?நியாயப்படி உன் அப்பாம்மாக்கு இவன் மேலே கோபம் வரணும்!அவங்களே ஏத்துக்கிடும் போது நான் எப்படி தடங்கல் சொல்வேன்?"-அவர் நிலாவின் முகத்தை நிமிர்த்தினார்.

"ரஞ்சித் எல்லாத்தையும் சொன்னான்!உண்மையிலே நீ ரொம்ப தைரியசாலி தான்!"-நிலா ஒரு புன்னகையோடு அவர் பாதம் பணிந்தாள்.

"நல்லா இரும்மா!உண்மையிலே உன் பெற்றவங்களும்,வளர்த்தவங்களும் பாக்கியசாலி தான்!"

"நான் கிளம்புறேன்!ரஞ்சித் வாடா..."

"நீ போம்மா வரேன்!"அவர் ரஞ்சித்தை மேலும் கீழுமாய் பார்த்தார்.

"கோவில் ஞாபகமிருக்கட்டும்!"அவன் அசடு வழிந்தான்.

"நான் வரேன்மா!"-அவர் கிளம்பியபின்,ரஞ்சித் நிலாவிடம்,

"டாக்டர் மேடமுக்கு சந்தோஷமா?"என்று கேட்டான்.அவள் கண்கள் ஒரு துளி கண்ணீரை கீழே சிந்தின.ரஞ்சித் அதை தாங்கினான்.நிலாவின் கண்களை துடைத்தவன்,

"இனி இதுக்கு வேலை இல்லை!"என்றான்.அது மட்டும் ஆலயமாக இராமல் வேறு இடமாக இருந்திருந்தால் அவள் அவனது நெஞ்சில் முகம் புதைத்து தன் காதலை கூறி இருப்பாள்.இடையில் தேவி துர்கை வந்து தடுத்துவிட்டார்.

தனிமையில் அந்த இல்லமே சூன்யமாய் போனது அவருக்கு!!

"சித்தப்பா!ஒழுங்கா மாத்திரை சாப்பிடுங்க!அடம் பிடிக்காதீங்க!"-உண்மையில் வைஷ்ணவியின் பிரிவு ராஜசேகருக்கு வலித்தது!!மலையளவு குவிந்திருந்த செல்வங்கள் மண்ணளவாய் தெரிந்தன.

"எனக்கு நீ முக்கியமில்லை!உன் சொத்து தான் முக்கியம்!!"எவ்வளவு வேதனையை அடைந்திருப்பாள்!!கண்ணீர் திரண்டது கண்களில்!!!

இறைவா!நான் செய்தது பாவமே!!என்னை மன்னித்து என் மகளை எனக்கு திருப்பி கொடு!!!மனமுருக வேண்டினார்.அவள் சிறு வயதில் விளையாடிய பொம்மைகளிடம் மன்னிப்பை வேண்டினார்.அந்த நரகத்தில் இருந்து முக்தி அளிக்க வேண்டினார்!!!

ஆனால் யாரும் அவர் வேண்டியதை நல்கவில்லை.

திடீரென்ற கார் சப்தம் அவர் சிந்தனையை கலைத்தது.அவர் கண்கள் திறக்கவில்லை.

"என்னை மன்னிச்சிடு வைஷூ!"அவர் மந்திரத்தை போல இதையே உச்சரித்து கொண்டிருந்தார்.அவர் அருகே யாரோ நிற்பது போல தோன்ற கண் திறந்தார்!!!

அவள்...அவள்...வைஷ்ணவி!முகம் பூரிப்படைந்து புன்னகையை தந்தது.

திடீரென சோகமானார்.

"எனக்கு தெரியும்!இது என் கற்பனைன்னு!நான் பண்ணதுக்கு என் வைஷூ என்னை மன்னிக்கவே மாட்டா!"-அவர் கண்களை மூடிக்கொண்டார்.சில நொடிகளில் அவர் கரத்தில் ஒருத்துளி நீர் விழ திடுக்கிட்டு எழுந்தார்.அது அவளது கண்ணீர்த்துளி!!

"வைஷூ!"-அவள் விசும்பியப்படி அவர் பாதம் பணிந்தாள்.

"கண்ணா!"-ராஜசேகர் அவளை நிமிர்த்தினார்.

"என்னை மன்னிச்சிடும்மா!"

"பெரிய வார்த்தையெல்லாம் பேசாதீங்கப்பா!ப்ளீஸ்!"-அவரால் பேச முடியவில்லை.தமிழ் சொற்கள் எதுவும் அவர் நாவிலிருந்து எழவில்லை.அவர் உணர்ச்சிகளை என்னாலும் தமிழ் இலக்கணத்தை கொண்டு வெளிப்படுத்த முடியவில்லை.ஏனெனில் அவர் பேசியது அன்பின் பாஷை!!

"நல்லா இருக்கியாம்மா?"

"ம்..."

"திரும்பி இந்த வீட்டுக்கு வந்துடும்மா!"

"ம்..."

"நிஜமாவா?நீ வருவியா?"

"வரேன்பா!"-அவர் முகம் இழந்த ஒரு பொக்கிஷத்தை கண்ட பாவனையை வெளிப்படுத்தியது!!!

"அப்பா!"

"என்னம்மா?"

"அவர் வந்திருக்காருப்பா!"-(இது உலக அதிசயம்டா சாமி!நம்ம விஷ்வாவா வந்திருக்கறது?)

"எங்கே?"

"வெளியே!"-அவர் வாசலுக்கு விரைந்தார்.விஷ்வா கார் மேல் சாய்ந்தப்படி கைக்கடிகாரத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

"தம்பி!"-அவன் சுற்றும் முற்றும் பார்த்தான்.பின் என்னையா?என்பது போல பார்த்தான்.அவர் ஆம் என தலையசைத்தார்.

"என்ன சார்?"

"எனக்காக ஒரு உதவி பண்றீங்களா?"

"சொல்லுங்க..."

"நான் உங்க அக்காக்கிட்ட நன்றி சொன்னதா சொல்லுங்க!"

"நன்றியா?"

"ம்...அவ எது உண்மையான சொத்துன்னு எனக்கு தெரியப்படுத்திட்டா!பண்ண பாவத்துக்கு எல்லாம் மன்னிப்பும் கேட்டேன்னு சொல்லுங்க!"-அவன் ஒன்றும் புரியாமல் விழித்தான்.

"சரி சார்!சொல்லிடுறேன்!"

"நல்லது தம்பி!உள்ளே வாங்க!வைஷூ கூட்டிட்டு வாம்மா!"-என்று அவர் உள்ளே சென்றார்.

"ஏ...என்னடி நடக்குது?"

"ஒண்ணுமில்லைங்க...நான் அப்பறமா சொல்றேன்!"

"சரி வா வீட்டுக்கு கிளம்பலாம்!"

"நான் வரலை!"

"என்ன?"

"நான் நம்ம கல்யாணம் முடியுற வரைக்கும் இங்கே தான் இருப்பேன்!"

"எது?அதெல்லாம் முடியாது...நிலா திட்டுவா!"

"நீங்க அக்காக்கிட்ட சொல்லி பாருங்க!அவங்க என் முடிவுக்கு சம்மதிப்பாங்க!"

"இல்லை...பாரு!"-என்று நிலாவிற்கு அழைப்பு விடுத்து விவரத்தை கூறினான்.

"விஷ்வா!வைஷூக்கு சரின்னு தோணுறதை செய்யட்டும்!கல்யாணத்துக்கு அப்பறம் உன் கூட தானே இருக்க போறா!விடேன்டா!"-என்பதே அவள் பதிலாய் இருந்தது.

என்ன இப்படி ஆயிடுச்சி!என்றப்படி கைப்பேசியை துண்டித்தவன்,வைஷ்ணவியை பார்த்தான்.

"என்ன சொன்னாங்க!"

"ம்...கீதை உபதேசம்!"-வைஷ்ணவி புன்னகைத்தாள்.

"உள்ளே வாங்க!"-அவன் சிணுங்கியப்படி அவள் முடிவை மறுத்தான்.அவனை சமாதானம் செய்ய அப்போது வைஷ்ணவி அவன் கன்னத்தில் அளித்த ஒரு முத்தமே போதுமானதாக இருந்தது!!!

தொடரும்

Episode # 19

Episode # 21

{kunena_discuss:821}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.