(Reading time: 12 - 23 minutes)

11. நேசம் நிறம் மாறுமா - தேவி

ற்றங்கரை யதனில் முன்னமொரு நாள் எனை

அழைத்து தனியிடத்தில் பேசியதெல்லாம்

தூற்றி நகர் முரசு சாற்றுவா னென்றே

சொல்லி வருவையடி தங்கமே தங்கம்

-      பாரதியார்

Nesam niram maaruma

ந்த ஞாயிறு விடியல் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. திருமண ஜோடிகள் தங்கள் கனவுகளோடு இருந்தனர் என்றால் ஆதிக்கு மதியின் அம்மா கூறிய மதி தன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்திருக்க மாட்டாள் என்ற வார்த்தையே அவன் மகிழ்ச்சிக்குக் காரணமாக இருந்தது. பெரியவர்களுக்கோ கிட்டத்தட்ட 15 வருட இடைவெளி கடந்து இணைந்த தங்கள் நட்பின் வலிமை மகிழ்ச்சியைக் கொடுத்தது.

இந்த மனநிலையில் தங்கள் துணைகளை அசத்த அதிதி புடவையிலும், சூர்யா வாணிக்குப் பிடித்த ஜீன்ஸ், டீ ஷர்ட்டிலும் வர, ஆதியோ நெடுநாட்கள் கழித்து குடும்பத்தோடு வெளியே செல்வதால் வழக்கமான கேஷ{வல் டிரஸ் என்றாலும் முகத்தில் இருந்த மலர்ச்சியால் அசத்தினான். முதலிலியே ரெடியான மதி, கீழே அவள் அத்தையின் மேற்பார்வையில் வழியில் சாப்பிட டிபன் மற்றும் கொஞ்சம் ஸ்நாக்ஸ் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

டிபன் சாப்பிட வழியில் நிப்பாட்டினால் ஒரு மணி நேரம் போய்விடும் என்பதால் நல்ல நேரத்தில் முகூர்த்த புடவை எடுக்க வேண்டும் என்று சற்று சீக்கிரமே புறப்பட்டனர். இவர்கள் அனைவரும் தயாராகி வரவும் பிரகாஷ் வீட்டினர், மதி வீட்டினர் வரவும் சரியாக இருந்தது. சூர்யா வாணியிடம் கண்ணால் அபிப்ராயம் கேட்க, அவள் வெட்கத்தோடு தலையாட்டினாள். அதிதியைப் பார்த்த பிரகாஷோ அவளிடமிருந்து கண்ணை எடுக்க முடியாமல் தவித்தான். இவர்களைப் பார்த்த ஆதி சிரித்துக் கொண்டே மதியைப் பார்க்க, அவளின் அழகில் தடுமாறினான்.

அவளை  இவ்வளவு அழகாக அவன் பார்த்ததில்லை. கருநீலத்தில் மெல்லிய பட்டுப் புடவையும், அவளின் நீண்ட பின்னலும், அதில் பாந்தமாக சூடியிருந்த மல்லிகையும் அவனை கிறக்க, வெளியே செல்வதால் அதிகப்படியாக போட்டுக் கொண்ட ஜிமிக்கியும், நெக்லஸ், கைகளில் அணிந்திருந்த வளையல்களும் பார்த்தவன் சொக்கிப் போனான். அவளின் மை தீட்டிய விழிகள் அவனை மயக்க, கனி இதழ்களோ அவனை அலைக்கழித்தது.

அவனின் தவிப்பை சூர்யா கண்டுவிட, தன்னை அடக்கியவன், அவள் புறம் திரும்பாமால் மற்றவர்களிடம் தன் கவனத்தைத் திருப்பினான். இதை அறியாத மதி வழக்கம்போல் எல்லோரிடமும் கலகலத்தபடி புறப்பட்டாள்.

ஏற்கனவே பேசியபடி பெரியவர்கள் அனைவரும் ஒரு காரில் டிரைவரோடு கிளம்ப, மற்றொரு காரில் இளையவர்கள் கிளம்பினர். பிரகாஷ் அதியை இழுத்துக் கொண்டு கடைசி சீட்டில் அமர, வாணியும், மதியும் நடு சுPட்டில் அமர்ந்தனர். ஆதி டிரைவர் சீட்டில் அமர, சூர்யா அவனருகில் அமர்ந்தான்.

சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள், பின்னால் ஒரு சத்தமும் காணோம் என்று திரும்ப பிரகாஷோ அதிதியின் தோளில் கை போட்டு அவளோடு ரகசிய குரலில் பேசி அவளை சிவக்க வைத்துக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த சூர்யா ஒரு பெருமூச்சோடு “டேய் ஆதி அண்ணா, இது உனக்கே ஞாயமா இருக்கா? நானும் அவனை மாதிரி புது மாப்பிள்ளைதான். என்னை மட்டும் இப்படி உன் கூட உட்கார வச்சிருக்pயே?” என்று பொரும,

அதைக் கண்டு கொள்ளாத ஆதி, ரிவர் வியூ கண்ணாடியை மதியின் புறம் திருப்பி அவளை சைட் அடித்துக் கொண்டிருந்தான்.

ட்டரை மணியளவில் ஒரிடத்தில் நிறுத்தி அனைவரும் கையோடு கொண்டு வந்த டிபன் சாப்பிட்டனர். மீண்டும் பயணம் துவங்கும் போது சூர்யா வேகமாக சென்று வாணியின் அருகில் அமர, மதியோ முழித்தாள். ஆதி தலையில் அடித்துக் கொண்டு அவளை முன்னால் ஏறச் சொன்னான்.

ஆதியும், மதியும் முன்னால் அமர, வாணியிடம் சற்று நேரம் திரும்பி பேசிக் கொண்டிருந்தாள் மதி. பொறுத்துப் பார்த்த சூர்யா “அண்ணி, நீங்கள் என் வாணிச் செல்லத்தை விட்டு விட்டு அண்ணனிடம் மொக்கை போடுங்கள்.” என்று நேரடியாக கூற,

ஆதியோ “டேய் சூர்யா, என்னடா இது?” என,

“ஆதி அண்ணி உன்ன பார்க்காததுனால நீ நல்லா சைட் அடிச்சுட்டே வண்டி ஓட்டுற.  என்னால சைட்டும் அடிக்க முடியல. பேசவும் முடியல. அதான்” என்று பொரும, மதி வேகமாக முன்னாடி திரும்பினாள்.

“பாரு. இங்க ஒருத்தன் இடியே விழுந்தாலும், அசராம கடலை வறுத்துட்டு இருக்கான்” என்று பிரகாஷை கேலி செய்தான். வாணி அவனை அடித்தாள்.

இதைப் பார்த்த ஆதி வாய் விட்டு சிரிக்க, இப்போது சைட் அடிப்பது மதியின் முறையாயிற்று. அவள் பார்ப்பதை உணர்ந்து, அவள் புறம் திரும்பி என்ன என்று வினவினான். மதி அவசரமாக  ஒன்றுமில்லை என்று தலையாட்ட, ஆதி அவள் கன்னத்தில் தட்டினான். மதி இது கனவா நனவா என்று விழித்தாள்.

தன் தடுமாற்றத்தை மறைக்க காரில் எஃப் எம் போட்டாள் மதி. அது சரியாக

“சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டா

கண்டவர்கள் சொன்னதுண்டா”

என்று பாட, மூன்று ஆண்களும் தங்கள் இணையைப் பார்த்து மயங்கியபடி கூட பாடினர். மதி வேகமாக அதை மாற்றப் போக, ஆதி அவள் கைப்பிடித்து தடுத்தான். மற்ற இருவரும் அவர்கள் துணையை நெருங்கி அமர, ஆதியோ மதியின் கைகளை தன்னுள் அடக்கிய படி வண்டி ஓட்டினான்.

மதி அவஸ்தையோடு நெளிந்தாள். அவள் அவஸ்தையைப் பார்த்த ஆதி சிரித்தான். இதமான மனநிலையில் கடையினுள் நுழைந்தனர்.

முதலில் மணமக்களுக்கு முகூர்த்த புடவை நல்ல நேரத்தில் எடுத்து விட்டால் மற்றதை மெதுவாக பார்க்கலாம் என்ற ஜானகியின் சொல்படி எல்லோரும் அந்த செக்ஷனுக்குச் சென்றனர்.

ஆதி எல்லோரிடமும் பொதுவாக “இரண்டு திருமணங்களும் ஒன்றாக நடப்பதால் முகூர்த்த சேலை, ரிசெப்ஷன் சேலை இரண்டும் ஒரே மாதிரி எடுத்து விடலாம். மற்றது அவரவர் விருப்பம் போல் எடுக்கட்டும்” என்று கூற எல்லோரும் ஆமோதித்தனர்.

பொதுவான கலராக அரக்கில் செல்ப் பார்டர் புடவைதான் என்றாலும், சின்ன சின்ன மாறுதல்கள் உள்ள மாதிரி இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் தேர்வு செய்தனர். பிறகு மணமகன்களுக்கு பட்டு வேட்டி சட்டையும் தேர்வு செய்தனர்.

அது முடிந்த பின்பு கொஞ்சம் டிஷ்யூ டைப்பில் பட்டு புடவை ரிசெப்ஷனுக்காக பார்க்க ஆரம்பித்தனர். இங்கு பெரியவர்கள் கொஞ்சம் சில கலர்களை மட்டும் ஒதுக்கி மற்றதை அவர்களை பார்க்கச் சொன்னர்.

பெரியவர்கள் அருகில் அமர்ந்திருந்தாலும் அவரவர் வருங்கால துணைவர்களின் விருப்பப்படியே தேர்வு செய்தனர்.

வாணி சூர்யாவிற்கு பிடித்த இள மஞ்சளும் தங்க கலரும் கலந்த டிஷ்யூ புடவையை தேர்வு செய்து அதை பெரியவர்களிடம் காட்டி ஒப்புதல் பெற்றாள்.

அதிதி பிரகாஷிற்கு பிடித்த மாதிரி மஜந்;தா கலரில் தோதான பார்டரில் உள்ள புடவையை செலக்ட் செய்தாள்.

இவை முடியவும் பெரியவர்கள் அவர்களுக்கு தகுந்த மாதிரி எடுக்கச் செல்ல, ஆதி மதியை அழைத்து அவளுக்கு ரிசெப்ஷனுக்கு புடவை இவர்கள் எடுத்த மாதிரியே பார்க்கச் சொன்னான். மணமகன்கள் அவர்கள் கோட் சூட் செலக்ட் செய்ய சென்று விட்டதால், அவர்களோடு அவர்கள் ஜோடிகளும் சென்று விட்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.