(Reading time: 13 - 25 minutes)

என்ன தவம் செய்து விட்டேன் – 20 - புவனேஸ்வரி கலைச்செல்வி

ந்த கண்ணாடி அறைக்கு வெளியில் நின்றபடி உள்ளே நடப்பதை வேடிக்கை பார்த்தான் சிவா ... அன்பினொளி இல்லத்தில்  அகில் வேலைக்கு வந்து இரண்டு  வாரம் கடந்து இருந்தது .. தன்னுடைய நண்பன் என்ற அறிமுகத்தோடு வேலையில்  சேர்ந்தவன் மீது கொஞ்சம் கண்காணிப்போடு தான் இருந்தான் சிவா .. ஏனோ சிவாவிற்குள்  ஏதோ ஓர் உள்ளுணர்வு .. அகிலுடைய குடும்ப பின்னணியின் அடிப்படையில் பார்த்தால் , அவன் இப்படி வேலைக்கு வரவேண்டும் என்ற அவசியமே இல்லை .. நிம்மதியை தேடித்தான் இங்கு வேலை கேட்பதாய்  அவன் சொன்னதையும் சிவாவால் நம்ப முடியவில்லை .. நிம்மதிக்காக மதுவையும் மாதுவையும் தேடி செல்லும் குணம் உள்ளவன் அல்லவா அகில் ? அப்படி பட்டவன் திடீரென எப்படித்தான் மனம் மாற முடியும் ? ஏதோ சரியில்லை என்று தோன்றியது அவனுக்கு .. அதுவும் தன்னை விட அகில் சந்தோஷிடம் நெருக்கம் காட்டுவதை அவனால் உணர முடிந்தது .. இதோ இப்போது கூட சந்தோஷின் அறைக்குள் நுழைந்தவன் ஏதோ சொல்லி கொண்டு இருக்க சந்தோஷின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது ... எல்லாம் பேசி முடித்துவிட்டு அறையிலிருந்து வெளிவந்தவனின் முகத்தில் வெற்றி புன்னகை ... சிவா தன்னை கவனிப்பதை உணராமல்  அங்கிருந்து அகன்றான் அகில் ..

சந்தோஷோ உடனே சாஹித்யாவிற்கு போன் போட்டான் ..

" சத்யா "

Enna thavam seithu vitten

" ம்ம்ம் சொல்லுங்க ... என்ன வாய்ஸ்  ஒரு மாதிரி இருக்கு ?"

" அதெல்லாம் ஒன்னும் இல்ல "

" பொய் "

" ம்ம்ம் பொய் தான் ..எல்லாமே பொய்யா தானே நடக்குது "

" சந்தோஷ் ... என்னமோ சரி இல்லைன்னு தோணுது ! என்னனு சொல்லுங்க ? நான் ஏதும் தப்பு பண்ணிட்டேனா ? வீட்டுல ஏதும் பிரச்சனையா ? " பதறியபடி அக்கறையாய் கேட்டாள்  சாஹித்யா .. கண்களை இறுக மூடினான்  சந்தோஷ் ..

" என்னை மன்னிச்சிரு கண்மணி " என்று மனதிற்குள் கூறினான் சந்தோஷ் ..

" ஹெலோ .... சந்து ?? "

" இன்னைக்கு இவினிங் கோவிலில் மீட் பண்ணலாம் சஹி "

" என்ன விஷயம் பா ?"

" கோவிலில் சொல்லுறேன்.. இப்போ என்னால எதுவும் சொல்லவே முடியாது .. "

" ம்ம்ம்ம் சரி "

" கோவமாடா  ?"

" இல்லைன்னு சொல்லுவேன் நினைக்கிறிங்களா ?"

" இனிமே   அடிக்கடி கோபம் வரும் "

" ப்ச்ச்ச் என்ன பேச்சு சந்து இது ?"

" ம்ம்ம்ம் சரி சாயங்காலம் பேசறேன் .. இப்போ வெச்சிடுறேன் "

" சந்து "

" என்னடா "

" ஐ லவ் யூ "

You might also like - Nagal nila... A suspense filled story 

" ஐ லவ் யூ டூ டி பொண்டாட்டி " என்றவன் புன்னகையுடன் போனை வைத்து விட்டான் .. ஏனோ , எது நடந்தாலும் சாஹித்யா தன்னோடு இருப்பாள் என்ற நம்பிக்கை  அவனுக்கு இருந்தது .. அவன் நம்பிக்கை பொய்யாய்  ஆக போவதை அறியாமல் நேராய் வீட்டிற்கு சென்றான் சந்தோஷ் ..

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு திரும்பினாள்  சாஹித்யா .. அங்கு கைகளை கட்டிக்கொண்டு நின்றார் அர்ஜுன் .. அவரை பார்த்ததும் , " அப்பா" என்றபடி அவரது தோளில்  சாய்ந்து கொண்டாள்  சாஹித்யா ..

" ஹே செல்லம் , கொஞ்ச நேரம் முன்னாடி தானே ஹாலில் பேசிட்டு இருந்தோம் ? என்னமோ 10 வருஷம் பார்க்காத மாதிரி சீன் போடுறியே " என்று கொஞ்சினார் அவர் ..

" அடடே , எங்க அப்பாவை நான் கொஞ்சுறேன் .. அதை யார் கேள்வி கேட்குறது ? நீங்களே கேட்டாலும் பதில் கிடையாது போங்கப்பா "

" ஹா ஹா .. அப்போ சந்தோஷ் கேட்டா ?" என்று கண் சிமிட்டினார் அர்ஜுனன் ... சட்டென அவளது முகம் வாடியது ..

" என்னம்மா ஆச்சு ? "

" தெரியலைப்பா ... சந்தோஷ் தான் போன் பண்ணினார் ... என்னவோ சரி இல்லாத மாதிரி இருக்குப்பா .. அவர் குரலே சரி இல்லை "

" அடடே என் பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி தலைகீழாய் மாறிட்டாளே  " என்றார் அர்ஜுன் கிண்டலாய் ..

" ப்ச்ச்ச் .. அப்படி எல்லாம் இல்லைப்பா .. உங்களுக்கு தான் அவரை தெரியும் ல ? எ-ப்பவும் சந்தோஷமாய் இருப்பார் .. நானே ஏதாவது கிருக்குத்தனமாய் யோசிச்சா எனக்கு அவர்  வழி காட்டுவார் .. இன்னைக்கு அவர் குழம்பி இருக்குறது எனக்கு கஷ்டமாய் இருக்கு "

" அதுக்கென்னடா ? இந்த மாதிரி நேரத்துல தான் கிவ் அண்ட் டெக் பாலிசி யூஸ் பண்ணனும் ... எப்பவும் மாப்பிளை தானே உனக்கு  ஆறுதலாய் இருப்பார் .. இந்த தடவை நீ அவருக்கு ஆதரவாய் இரு .. " என்றவர் சுமித்ரா அங்கு வருவதை கவனித்து வேண்டுமென்றே

" இதோ உங்க அம்மாவை எடுத்துக்க .. அவ என்ன எப்பவுமே புத்திசாலியாவா இருக்கா ? இருந்தாலும் அப்பா அப்பபோ அவளுக்கு ஏற்ற மாதிரி  மாத்திக்கிட்டு நடந்துக்குறது இல்லையா ? அதே மாதிரி நீயும் பார்த்து சமயோசிதமாய் நடந்துக்கணும் கண்ணா " என்றார் .. அவர் கையில் மெல்ல கிள்ளினார் சுமி ..

" போதுமே ..உங்க பெண்ணுக்கு புத்திமதி சொல்லுறதுக்கு கூட என்னை மட்டம் தட்டனுமா ? ஹீரோ சார் , உங்க பொண்ணு , இன்னைக்கோ நாளைக்கு கல்யாணம் பண்ணி அவ புருஷன் பின்னாடி போயிடுவா .. அதுக்கு அப்பறம் என் மூஞ்சிய பார்த்துட்டு தான்  நாட்களை ஓட்டனும் நீங்க ...ஞாபகத்துல இருக்கட்டும் " என்றார் சுமி ..

" உன் முகத்தை பார்க்க , எனக்கு எப்படி சலிக்கும் சுமி " என்றார் அவர் காதலுடன் ..

" அஹெம் அஹெம் அஹெம் .... ஐயோ இந்த கண்கொள்ளா காட்சியை பார்க்க என் நண்பனுக்கு கொடுத்து வைக்கலையா .. அருள் ..... யூ மிஸ்ட் இட் டா "

" ஹா ஹா வாலு .. அதெல்லாம் அவன் சீக்கிரம் வந்துருவான் ... நீ உன் கிளாஸ்க்கு போகலையா ? "

" இதொ கெளம்பிட்டேன் அம்மா " என்று துள்ளி குதித்து ஓடினாள்  சாஹித்யா .. சாஹித்யா சிறுவயதிலேயே முறைப்படி  பயின்ற சங்கீதத்தை  இலவசமாக , பணவசதி இல்லாத சிறுவர்களுக்கு  கற்று கொடுக்கலாம்  என்று நினைத்திருந்தாள்  .. அருளுடன் சேர்ந்து அவள் இந்தியாவிற்கு திரும்பி வரும்போதே , அவளுக்காக  வகுப்பும் மாணவர்களும் தயாராய்  இருந்தனர் ..எல்லாம் நம்ம சந்தோஷும் அருளும் சேர்ந்து செய்த ஏற்பாடுதான் ..

" ஓகே அப்பா  ஒகேம்மா கெளம்பறேன் .... இவினிங் உங்க மாப்பிளை என்கிட்ட ஏதோ ரகசியம் பேசணுமாம் .. அதையும் பேசி முடிச்சிட்டு ஓடி வரேன் " என்று இரண்டடி எடுத்து வைத்தவள் , திரும்பவும் ஓடி வந்து அவர்களை கட்டி கொண்டு செல்லம் கொஞ்சினாள் ..

" போதும் டீ .. என்னமோ அப்படியே மாமியார் வீட்டுல செட்டல் ஆகுற மாதிரி பில்டப்புக்கு குறைச்சல் இல்லை " என்று சிரித்தார்  சுமித்ரா .. அவர் வார்த்தை பலிக்கப்போவது தெரிந்திருந்தால் அப்படி சொல்லி இருக்க மாட்டாரோ  ???

" எங்க போறோம்னு சொல்லு அருள் ப்ளீஸ் "  நூறாவது முறை கேட்டாள்  வானதி ... முகத்தை சோகமாய் வைத்து கொண்டான் அருள் ..

" என்னடா இப்போ ஏன் மூஞ்சி இப்படி இருக்கு ?"

" போடி உனக்கு என்மேல லவ் ஏ  இல்ல"

" ஹே இதென்ன புது பிரச்சனை  ? பேபிம்மா  ஐ லவ் யூ டா " என்று கண்ணடித்தாள் வானதி ... எந்த கவலையும் இல்லாமல் இருவருமே மிகவும் இயல்பாய் அழகாய் இருந்தனர் .. அவளது அழகை விழிகளால் பருகினான் அருள் ..

" ஒய் .. சைட் அடிக்காம விஷயத்தை சொல்லுவியாம் "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.