(Reading time: 9 - 17 minutes)

16. நேசம் நிறம் மாறுமா - தேவி

வெண்ணிலவு நீ யெனக்கு,மேவு கடல் நானுனக்கு;

பண்ணு சுதி நீ யெனக்கு,பாட்டினிமை நானுனக்கு;

எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;

கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா!

                                                              பாரதியார்

Nesam niram maaruma

  

தியும் மதியும் பேசிக் கொண்டே மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கே ஏற்கனவே பிரகாஷ் வீட்டினர் வந்திருந்து இவர்களை வரவேற்றனர். இருவரும் அவர்களோடு சேர்ந்து எல்லாவற்றையும் சரி பார்த்தனர்.

முதலில் வந்திறங்கிய வாணி குடும்பத்தினரை மாப்பிளை வீட்டு சார்பாக ஆதியும், மதியும் வரவேற்க, பிறகு வந்த ஆதி வீட்டினரை சுந்தரம் மற்றும் பிரகாஷின் வீட்டினர் வரவேற்றனர்.

பிறகு நிச்சயதார்த்த ஏற்பாடுகள் ஆரம்பமாகியது. பார்லரிலிருந்து வந்தவர்கள் இரு மணமகள்களையும் அலங்கரிக்க, தேவதைகளாக ஜொலித்தனர். ஆதிக்கும், மதிக்கும் தான் வேலை அதிகமாக இருந்தது. ராகவன், சுந்தரம் இருவரின் விருந்தினரையும் உபசரிக்கும் பொறுப்பு சரியாக இருந்தது. இடையிடையே பிரகாஷின் அம்மா, அப்பாவோடு சேர்ந்து அவர்கள் உறவினர்களையும் உபசரித்தனர்.

நிச்சயதார்த்தத்தின் முன் மணமகள்களுக்கு நலுங்கு வைக்க உறவினர்கள் கூடினர். ஆதியின் பிரண்ட்ஸ் இதேல்லாம் வீடியோ எடுத்தனர். நலுங்கு முடிந்த பின் மணமக்களுக்கு நிச்சயதார்த்த டிரஸ் கொடுக்கப் பட, அதை மாற்றி வந்ததும் நிச்சய பத்திரிகை வாசித்து ராகவன் ஜானகி, சுந்தரம் மீனட்சியோடு முதலில் தாம்பூலம் மாற்றிக் கொண்டனர். பின் பிரகாசின் அம்மா அப்பாவோடு தாம்பூலம் மாற்றிக் கொண்டனர்.

இது முடிந்ததும் உறவினர்கள் சாப்பிட செல்ல, மணமக்கள் ப்ரண்ட்ஸ் எல்லோரும் சேர்ந்து நான்கு பேரையும் கலட்டா செய்து கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் ஆதி, மதி அங்கே வர, அக்கூட்டத்தில் அமர்ந்திருந்த ஆதியின் ப்ரண்ட்ஸ்

“இங்கே கல்யாணம் என்னவோ சூர்யா, அதிதிக்கு .. ஆனால் ஆதியோ சிஸ்டரை சைட் அடித்து .. கவர் செய்துட்டு இருக்கான்.. என்ன பா நடக்குது இங்கே ?” என்று ஆரம்பிக்க,

அவனுக்கு ஹைபை கொடுத்த சூர்யா “ சரியாய் சொன்னீங்க அண்ணா ..  “ என்று எடுத்து கொடுத்தான்..

கொஞ்ச நேரம் மற்ற எல்லோரும் சேர்ந்து அவர்களை ஓட்ட, மதியோ நெளிய ஆரம்பித்தாள். மெதுவாக ஆதி பேச்சை மாற்றி விட்டான். இரவு கிளம்பும் போது, ஆதியின் ப்ரண்ட்ஸ் பாமிலிக்கு எடுத்த டிரெஸ்ஸை அவர்களுக்கு மறுநாள் கல்யாணத்திற்கு அதை போட்டுக் கொள்ளுமாறு கேட்டு கொடுத்தனர்.

You might also like - Vasantha bairavi... A neat family story...

முதல் நாள் மெகந்தியின் போது அவர்களை பார்த்திருந்ததினால், பார்லர் பெண்களிடம் சொல்லி அவர்களுக்கேற்ற வகையில் அல்டெர் செய்து வைத்திருந்தாள் மதி. பிறகு எல்லோரும் அவரவர் இருப்பிடம் கிளம்பினர்.

ஆதி மதியை தனியாக அழைத்து, “வினு, என்ன உன் முகம் சரியாக இல்லியே ... ஏன்டா..?” என்று வினவ,

“நீங்கள் ஏன் நேற்று அப்படி செய்தீர்கள்”

“நான் என்ன செய்தேன்”

“ச்சு. எதுக்காக எல்லோர் முன்னாடி நேற்று முத்தமிட்டீர்கள்”

ஏய்.. நான் உன்னைத்தாண்டி முத்தமிட்டேன். அதில் என்ன தப்பு

என்ன அத்தான்? இன்னிக்கு எல்லோரும் நம்மளை கிண்டல் செய்கிறார்கள். எனக்கு ஒரு மாதிரி அனீசீயாக இருக்கு. அதோடு நீங்கதான் நம்ம குடும்பத்தில் முதல். நீங்கள் பண்றதை பார்த்துதான் சூர்யா, பிரகாஷ் எல்லாம் பண்ணுவாங்க... இதை அவங்க அட்வாண்டேஜாக எடுத்துக்க போறாங்க. அவங்க தப்பு பண்ணினா கண்டிக்க வேண்டிய நீங்களே இப்படி பண்ணலாமா..

இப்படியே சொல்லி சொல்லி என்னை கிழவனாகிடுவீங்க போலே ... ஏய்.. நானும் வயசு பையன் தான்.. “ என்று சொல்ல, மதியின் முகமோ சுருங்கியது.

அவளைப் பார்த்த ஆதி “சரி , சரி .. இனிமே இப்படி பண்ண மாட்டேன் போதுமா.. அண்ட் சாரி நேத்து பண்ணதுக்கும், அப்ப பண்ணதுக்கும் ... ஆனால் உன்னோட டான்ஸ் ஐ பார்த்தா என்னை என்னால் கண்ட்ரோல் பண்ண முடியல டா ...ஹ்ம்ம். இதுக்கு மேல இப்போ எதுவும் பேச வேண்டாம். எல்லாம் ஊருக்கு போயிட்டு வந்து பார்க்கலாம், “  என்றவன் சுற்றி ஒருமுறை பார்த்து விட்டு அவளை இழுத்து அணைத்து முத்தமிட்டு விட்டு விட்டான்.

“இப்போதானே சொன்னேன் “

“வினும்மா. இங்கேதான் யாருமே இல்லியே.. அப்புறம் என்னடா.. ? சரி சரி .. போய் படுத்துக்கோ... காலையில் பார்க்கலாம் “ என்று அவளை அனுப்பி வைத்தான். அவள் அழகு காட்டிக் கொண்டே போனாள்.

மறுநாள் காலையில் ஆதவன் இரு கரம் நீட்டி பூமகளை அணைக்க பொழுது இனிதாக விடிந்தது. எல்லோர் மனத்திலும் கல்யாண பரபரப்பு தொற்றிக் கொள்ள, முதலில் எழுந்த மதி குளித்து ரெடியானாள். பிறகு மணமகள் இருவரையும் எழுப்பி கிளப்பினாள். மணமேடை வேளைகளில் பெரியவர்கள் இருக்க, மதி மணமகள்களுக்கு தேவையானதை பார்த்துக் கொண்டாள்.

பார்லர் பெண்கள் வர, அவர்களிடம் மணமகள்களை விட்டு விட்டு, மண்டபத்திற்கு சென்று எல்லோரையும் வரவேற்று சாப்பிட அனுப்பினாள். சற்று நேரத்தில் ஆதியும் வர, இருவருமாக விருந்தோம்பினர்.

தியின் வெளிநாட்டு ப்ரண்ட்சும், உள்ளூர் ப்ரண்ட்சும் வர, அவர்கள் அனைவரும் இருவரின் ஜோடி பொருத்தத்தை பாராட்டினர். மதியும், ஆதியும் பரிசளித்திருந்த உடைகள் அவர்களுக்கு மிகவும் நன்றாக இருப்பதாகவும் பாராட்டினர். அதிலும் அவனுடைய வெளிநாட்டு தோழிகள் இருவரும் அவர்களுக்கு உறுத்தாமலும், அதே சமயம் மெல்லியதாகவும் இருப்பதாக கூறி நன்றயுரைத்தனர். அவர்கள் பாராட்டு மதிக்கு மகிழ்ச்சியளிக்க, முகமெல்லாம் பூரிப்புடன் நின்றிருந்தாள்.

கிடைத்த சிறு இடைவெளியில் “வினு செல்லம் ...”கல்யாண பொண்ணு யாருன்னு தெரியல ... சும்மா கலக்குற டா.. “ என்று அவளை கொஞ்சி மகிழ,

மதியோ “அத்தான் .. நீங்களும் தான் இந்த பட்டு வேஷ்டி சட்டையில் சூப்பரா இருக்கீங்க ..” என்று முகம் சிவக்க கூறினாள். அதை கேட்ட ஆதி காலரை தூக்கி விட மதி சிரித்தாள்.

அதற்குள் அதியும், வாணியும் இவளை கூப்பிட அங்கே சென்று , அவர்கள் இருவருக்கும் ஆதி கொடுத்த வைர நகைகளை அணிவித்தாள். தானும் அவன் வாங்கி கொடுத்த நகைகளையே அணிந்து கொண்டாள்.

மணவறையில் சூர்யாவும், பிரகாஷும் அமர்ந்து சடங்குகளை ஆரம்பித்திருக்க, அய்யர் மணமகள்களை அழைத்து வர சொன்னார். இருவரும் அவர்கள் வருங்கால துனைவிகளின் வருகையை எதிர் பார்த்திருக்க, நாதஸ்வரத்தில்  

“வாரயந்தோழி வாராயோ ... மணபந்தல் காண வாராயோ “

“மணமகளே மருமகளே வா வா “

போன்ற பாடல்கள் வாசிக்க இருவரும் மணவறையை அடைந்தனர். மணமகன்கள் இருவரும் தங்கள் துணைகளின் மேல் வைத்த கண்ணை எடுக்க முடியாமல், மந்திரம் சொல்லும் அய்யரை ஒரு கண்ணும், தன் துணையின் மேல் ஒரு கண்ணுமாக அமர்ந்திருந்தனர்.

மூத்தவன் என்ற முறையில் முதலில் சூர்யா வாணி திருமணம் நடைபெற, அதிதி எழுந்து வந்து நாத்தனார் முடிச்சு போட்டாள். பிறகு ஆதி, சூர்யா தன் துணைகளோடு நிற்க, பெரியவர்கள் ஆசிர்வாதத்தோடு அதிதி கழுத்தில் பிரகாஷ் தாலி கட்டினான்.

மணமக்கள் திருமணத்திற்கு பின்னான சடங்குகளில் ஈடுபடிருந்தனர். ஆதியும், மதியும் வந்தவர்களை சாப்பிட அனுப்பியும், தாம்பூல பைகள் கொடுப்பதையும் மேற்பார்வை பார்த்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.