(Reading time: 9 - 17 minutes)

திய விருந்தின் போது எல்லோரும் அமர்ந்திருக்க, சூர்யா வாணியின் கையை விடவே இல்லை. அவன் நண்பர்கள் அவனை கிண்டலடிக்க, சூர்யாவோ அதைக் கண்டு கொள்ளவே இல்லை. மதி ஆதியை முறைக்க, ஆதியோ அவள் பார்வையிலிருந்து எஸ்கேப்..

பிரகாஷோ அதிதியை தவிர யாரும் அவன் கண்களுக்கு தெரியவில்லை.  ஒரு வழியாக விருந்து ஊட்டி விடும் படலத்தோடு இனிதே முடிவடைய, மாலை வரவேற்பிற்கு தயாராக மணமக்களை ரெஸ்ட் எடுக்க அனுப்பினர்.

மாலையில் வரவேற்பிற்கு தயாராக வந்திருந்த மூன்று ஜோடியையும் பார்த்தவர்கள் அசந்தனர். மணமக்கள் ஜோடியாக மணமேடையில் நின்றிருக்க, கீழே ஆதியும், மதியும் ஜோடியாக விருந்தினரை வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

ஆதியின் தொழில் துறை நண்பர்கள், வாடிக்கையாளர்கள், அலுவலக பணியாளர்கள் என வரிசையாக வர மணமக்களுக்கு ஈடாக ஆதியும், மதியும் நின்று கொண்டிருந்தனர்.

அனைவருக்கும் மதியை அறிமுகப் படுத்தினான் ஆதி.

You might also like - En Uyirsakthi... A family oriented romantic story

ஒருபக்கம் மெல்லிசை கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்தது. விருந்து பபே முறையில் நடந்தது. வடநாட்டு, தென்னாட்டு உணவு வகைகளோடு, சாட், ஐஸ்கிரீம், பீடா என ஒரு முழுமையான விருந்து. அனைவரும் ஒன்றாக செல்லுமாறு இல்லாமல், காத்திருப்போர் வசதியாக அமர்ந்து கச்சேரி கேட்கும் படியாகவும், அதே சமயம், ஒரு குரூப் சாப்பிட்டு முடித்து செல்லவும் அடுத்த குரூப் சாப்பிட செல்லவும் ஆக, ஒரு தடையில்லாத இயந்திரம் போல் அமைதியாக நடந்து முடிந்தது.

வரவேற்பு முடிந்து அதிதியையும் பிரகாஷையும் ஆதி வீட்டிற்கு அழைத்து சென்று பாலும் பழமும் கொடுத்து, அங்கேயே இரவு தங்கவும் ஏற்பாடு செய்து விட்டு, மீண்டும் மண்டபத்திற்கு வந்து சூர்யா, வாணியை மதியின் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

ங்கே வாசலில் ஆரத்தி தட்டோடு மதியின் அம்மா மீனாட்சி நின்றிருந்தார். சூர்யா, வாணியோடு, மதி ஆதியையும் சேர்த்து நிற்க சொல்ல, இருவரும் புரியாமல் முழித்தனர்.

“மருமகனே ... நீங்களும் திருமணத்திற்கு பிறகு இன்றுதான் சேர்ந்து வருகிறீர்கள் .. அதுவும் இந்த வீட்டிற்கு இதுதான் முதல் முறை .. நினைவு இருக்கிறதா..” என்று மீனாட்சி கேட்க,

ஆதியோ என்ன சொல்ல என்று புரியாமல் முழித்தான். பிறகு

“என் செல்ல அத்தை. அது முன்னாடி ... இனிமே உங்க ஆதி அடிக்கடி இங்கே வருவேன் போதுமா?” என்று ஐஸ் வைத்தான். எல்லோரும் சிரித்தனர்.

“சரி .. சரி ... ஐஸ் வைத்ததெல்லாம் போதும். உள்ளே வாருங்கள். “ என்றார் மீனாட்சி.

பிறகு இங்கேயும் மணமக்களுக்கு பால் பழம் கொடுக்கப் பட, அவர்களை தனி அறைக்கு அனுப்பி வைத்து விட்டு வந்த ஆதி, மதியை பார்த்து மீனாட்சி இருவரையும் அங்கே தங்கி போக சொல்ல,

“இல்லை அத்தை .. அதியும் மாப்பிளையும் தங்கி இருக்கும் போது நாங்கள் அங்கே இருக்க வேண்டும். இது நம்ம வீடு அத்தை. நாங்கள் பிறகு வந்து தங்குகிறோம்.” என்று கூறி விட்டு ஆதி கிளம்ப, மதியும் கிளம்பினாள்.

வழியில் மௌனமாக வந்தாலும் இருவர் மனமும் நிறைந்திருந்தது. வீட்டிற்குள் தங்கள் அறைக்குள் சென்றவர்கள் உடைகளை மாற்றி விட்டு வந்தனர்.  வழக்கம் போல் மதி கீழே தன் திவனில் படுக்க போக, கட்டிலில் அமர்ந்திருந்த ஆதி மௌனமாக தன் கையை மதியின் புறம் நீட்ட, மதியும் அவன் அருகில் அமர்ந்தாள்.

வாய் பேசாத மௌனத்திலும் இருவர் மனமும் பேச, ஆதி மதியின் நெற்றியில் முத்தமிட்டு, பின் இதழை சுவைத்தான். சற்று நேரத்தில் அவளை விட்டவன், தன்னோடு சேர்த்து அணைத்து படுத்தான்.

மதி அவனை கேள்வியாக ஏறிட்டு பார்க்க, “வினும்மா, இன்றைக்கு இரண்டு பேரும் ரொம்ப டயர்ட் ... அதனால் டேக் ரெஸ்ட்“ என்றான். மதியும் முகம் சிவக்க தலையாட்டினாள். 

ஹாய் ... ப்ரண்ட்ஸ்....

அந்த மெகந்தி எபிசொட் உங்க எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி இருந்தது என்று நினைக்கிறேன்.

மழை காரணமாக இந்த கல்யாண எபிசொட் ரொம்ப நாள் கழித்தும், அதே சமயம் குட்டியாகவும் கொடுத்திருக்கிறேன். கூடிய சீக்கிரம் அடுத்த எபிசொட் அதிகமாகவும் நீங்கள் எல்லோரும் கேட்ட மதியோட எப்.பி யோடும் கொடுக்க முயற்சி செய்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

தொடரும்

Episode # 15

Episode # 17

{kunena_discuss:903}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.