(Reading time: 17 - 33 minutes)

15. நேசம் நிறம் மாறுமா - தேவி

ன்னி வயதிலுனைக் கண்டதில்லையோ? -- கன்னங்

கன்றிச் சிவக்கமுத்த மிட்டதில்லையோ?

அன்னியமாக நம்முள் எண்ணுவதில்லை, -- இரண்

டாவியுமொன் றாகுமெனக் கொண்டதில்லையோ?

பன்னிப் பலவுரைகள் சொல்லுவதென்னே? -- துகில்

பறித்தவன் கைபறிக்கப் பயங்கொள்வனோ?

என்னைப் புறமெனவுங் கருதுவதோ? கண்கள்

இரண்டினில் ஒன்றையொன்று கண்டுவெள்குமோ? 

                                                                     பாரதியார்

Nesam niram maaruma

ல்யாண வேலைகள் சுறு சுறுப்பாக நடக்க நாட்கள் ஜெட் வேகத்தில் நகர்ந்தது.  மதி ஆதி வெளிப்பார்வைக்கு மாற்றம் ஏற்படவில்லை என்றாலும், மனதளவில் இருவரும் நெருங்கியே இருந்தனர். தங்கள் மனதில் உள்ளதை அடுத்தவர்க்கு தெரியப்படுத்தும் நாளுக்காக காத்திருந்தனர்.

அதிதிக்கு பழைய விஷயங்கள் எதுவும் தெரியாவிட்டாலும் தன் அண்ணன் அண்ணி இருவரும் பேசி பழகுவது பார்த்து மகிழ்ச்சி. சூர்யா மனதில் தன் அத்தையின் சூழ்ச்சியால் இத்தனை நாட்கள் சுந்தரம் மாமா குடும்பம் தள்ளி இருந்ததுவும், தன் அம்மாவிடமே தானும், அதியும் சற்று தள்ளி இருந்தது வேதனை தந்தது. அதற்கு ஈடு கட்டுவது போல் இப்போதெல்லாம் தன் அம்மாவோடு வம்பிழுப்பது அவனது பொழுது போக்கு.

 மெகந்தி பங்க்ஷன்க்கு இன்னும் சில நாட்களே இருக்க, அன்று வீட்டில் எல்லோரும் இரவு சாப்பிட்டு முடித்து விட்டு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அதிதி

“அண்ணா, மெகந்தி பங்க்ஷன் எங்கே வைக்க போகிறோம்? என் ப்ரண்ட்ஸ்க்கு சொல்லணும். “ என்று கேட்டாள்.

“ஏன் .. நம் வீட்டிலேயே வைத்து விடலாம் என்று தானே பேசினோம்”

“இல்லை ஆதி.. அது சரியாய் வராது. வாணியை முறைப்படி கல்யாணத்திற்கு பிறகு தான் அழைத்து வர வேண்டும். அதே போல் பிரகாஷ் மாப்பிள்ளையும் முறைப்படி வர வேண்டும். அதனால் அந்த பங்க்ஷன் வேறு எங்காவது வைத்துக் கொள்ளலாம்.

You might also like - Nanaikindrathu nathiyin karai... A fast paced romantic thriller story 

ஹ்ம்ம்.. அப்படியென்றால் நம் ஈ.சி.ஆர். கெஸ்ட் ஹௌசில் வைத்து கொள்ளலாமா?

சரி அப்படியே செய்யலாம்.

அதிமா .. நீ எல்லோருக்கும் அட்ரஸ் இன்பார்ம் பண்ணி விடு

சரி அண்ணா ..

எல்லோரும் தூங்க சென்ற போது சூர்யா மெதுவாக .””ப்ரண்ட்ஸ் எல்லாம்  பசிலர்ஸ் பார்ட்டி கேட்கறாங்க அண்ணா. “

“டேய்.. என்ன .. என்று மிரட்டி, சற்று நேரம் திட்டினான்

அண்ணா ப்ளீஸ் ..  அவனுங்க விட மாட்டேங்கரங்க ... ஏதாவது அரேஞ் செயுங்க “

சரி. யோசித்து சொல்றேன். போ

சூர்யா மனதுக்குள் “அப்பாடி.. ஆதி காதிலே பார்ட்டி விஷயத்த போட்டாச்சு. இனிமே அவன் பார்த்துப்பன் .. சரியான லட்சார்ச்சனை நடக்கும்னு நினைச்சேன்.. பரவால்லிய.. கம்மியா தான் திட்டிருக்கான். “ என்றபடி தூங்க போனான்.

ஆதி தன் அறைக்கு வரவும், மதி முழித்து கீழே உள்ள திவானில் அமர்ந்திருந்ததை பார்த்தான். அவளை பார்த்து “என்ன மதி?”

“உங்கள் பாரீன் ப்ரண்ட்ஸ் எல்லாம் வருவதாக சொன்னீர்களே . எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சா? எப்போ வராங்க?”

ஹோட்டல் புக் பண்ணிட்டேன். எல்லோரும் கல்யாணத்திற்கு மூன்று நாட்கள் முன்னாடி வருவார்கள்

அவங்களுக்கு புடவை கட்டி விட பார்லர் லேருந்து இரண்டு பேரை வர சொல்லலாமா?

சொல்லிடு மதி.. அதே போல் அவர்களுக்கு எடுத்த புடவைக்கு மேட்சாக ஆர்டிபிஷியல் செட் ஒன்றும் சொல்லி விடு. புடவையோடு அதையும் பரிசாக கொடுத்து விடலாம்

சரி. குட் நைட்  என்று கூறி படுத்து விட்டாள்.. இங்கே மட்டுமில்லாமல் அவள் வீட்டிலும் வாணி சில விஷயங்களுக்கு தன் அக்காவின் துணை தேட, மதிக்கு சரியான அலைச்சல். பொதுவாக மூன்று பேரும் தான் சென்றார்கள் என்றாலும், அதி தன் பிரண்ட்ஸ் , வாணி தன் பிரண்ட்ஸ் என்று தனியாக பத்திரிகை கொடுக்க அழைத்து சென்றதில் மிகவும் சோர்ந்து இரவில் படுத்தவுடன் தூங்கி விடுகிறாள்.

ஆதிக்குத்தான் இப்போதெல்லாம் தூக்கம் வருவதில்லை. மதியோடு அடிக்கடி வெளியே சென்று வருவதால் அவளின் அருகாமையை மனம் விரும்ப ஆரம்பித்து விட்டது. முதலில் அவளை தன்னோடு கட்டிலில் படுக்க சொல்ல வேண்டும் என்று எண்ணுவான். ஆனால் அவன் கல்யாண வேலைகளை மாலையில் பார்ப்பதால், அலுவலக வேலையை இரவில் பார்க்க வேண்டியதாகி விடுகிறது. இவன் அதை முடித்து விட்டு வருவதற்குள் மதி கீழே படுத்து தூங்கியே விடுவாள்.

அவளின் அசதியை பார்த்து எழுப்ப மனம் வரமால் வெகு நேரம் அவள் தூங்கும் அழகை ரசித்து விட்டு, பின்னிரவில் தான் தூங்க ஆரம்பிப்பான். இன்றைக்கு அவள் அதிசயமாக விழித்திருக்கிறாளே என்று எண்ணி அவளிடம் பேச ஆரம்பிப்பதற்குள், அவனின் பதில் குட் நைட்க்கு கூட காத்திராமால் படுத்து விட்டாள்.

ஹ்ம்ம் என்ற பெருமூச்சோடு ஆதி வழக்கம் போல் அவளைப் பார்த்துக் கொண்டே தூங்கினான்.

றுநாள் வழக்கம் போல் வேலைகள் நடக்க, வெளியே சென்று வருவதாக கூறி விட்டு மதி, அதி, வாணி மூன்று பேரும் டான்ஸ் கிளாஸ் சென்றனர்.

“அதி, வாணி ரெண்டு பேரும் மெகந்திக்கு டிரஸ் செலக்ட் செய்து விட்டீர்களா?

“லேஹங்கா .. போடலாம் என்று பேசியிருக்கிறோம் அண்ணி.

“அதை போட்டால் எப்படி டான்ஸ் ஆடுவீர்கள்.

ஏன் டான்ஸ் போது டிரஸ் மாற்றி விடலாமே..

அப்படி நீங்கள் டிரஸ் மாற்றினால் சர்ப்ரைஸ் எப்படி இருக்கும். நீங்கள் டிரஸ் மாற்ற சென்றாலே தெரிந்து விடுமே.

ஆமாம். அப்படியானால் என்ன செய்யலாம்.

நீங்கள் இருவரும் காக்ரா சோளி போடுங்கள். டான்ஸ் போது அதன் ஷால் ஐ உபயோகித்து டான்ஸ் டிரஸ் ஆக மாற்றி விடலாம்.

குட் ஐடியா.. அப்படியானால் நீ என்ன டிரஸ் அக்கா போடா போகிறாய்?

நான் சல்வாரில் வருகிறேன்.

ஏன் நீயும் காக்ரவே ட்ரை செய்யலாமே.

 ஹலோ... என்ன கிண்டலா? நான் சல்வார், சாரீ தவிர ஒன்றும் போட மாட்டேன் என்று தெரியாதா?

அட போங்க அண்ணி.. இதை எல்லாம் என்ஜாய் செய்யாமல்..

அம்மா.. தேவதைகளா.. நீங்களே அதை எல்லாம் என்ஜாய் செய்யுங்கள். என்னை ஆளை விடுங்கள். “ என மூன்று பேரும் சிரித்தனர்..

அவரவர் தங்கள் வாழ்க்கை துணையோடு இணைய போகும் நாளுக்காக காத்திருந்தனர்.

மெஹந்திக்கான நாளும் விடிந்தது. ஆதியின் வெளி நாட்டு நண்பர்கள் வந்து விட, அவர்களையும் தன் லோக்கல் நண்பர்களையும் விழாவிற்கு அழைத்திருந்தான் ஆதி.

மாலை ஆறு மணி அளவில் விருந்தினர்கள் வர ஆரம்பிக்க, சற்று முன்னர்தான் மணமக்கள் தங்கள் குடும்பத்தோடு வந்திருந்தனர். ஒரு புறம் வெல்கம் ட்ரிங்கும் ஸ்டார்ட்டர் செர்வ் செய்யப்பட, மறுபுறம் ஏழு பேர் விரும்புகிறவர்களுக்கு மெகந்தி வரைந்து கொண்டிருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.