(Reading time: 17 - 33 minutes)

கெஸ்ட் ஹவுஸ் தோட்டத்தில் விழா ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததால், நடுவில் ஒரு சிறு மேடை அமைத்திருக்க, சுற்றிலும் சின்ன சின்ன திண்டுகளாக போடப் பட்டிருந்தது.

சிறு சிறு குழுக்களாக அதிதி, வாணி ப்ரண்ட்ஸ் அமர்ந்திருக்க,  மற்றொரு பக்கம் சூர்யா, பிரகாஷ் ப்ரண்ட்ஸ் அமர்ந்திருந்தனர். ஆதியின் ப்ரண்ட்ஸ் எல்லோரும் வர, ஆதி அவர்களை மதிக்கு அறிமுகப்படுத்த தேடினான்.

அப்பொழுது மூன்று பேரும் வீட்டிற்குள் இருந்து வர, மூன்று துணைவர்களும் விழியகலாமல் பார்த்திருந்தனர். அதிதி கடல் நீல வண்ண காக்ரா சோளியிலும், வாணி அழகான இளம் பச்சை வண்ண சோளியிலும் அசத்தினர். மதியோ அழகான சிவப்பு நிற அனார்கலி சல்வாரில் வந்தாள். அதிதியும், வாணியும் தங்கள் தோழிகளை நோக்கி சென்று விட, மதி ஆதியிடம் வந்தாள். மதி தன்னை நோக்கி வருவதைக் கண்ட ஆதி சுதாரித்து,

You might also like - Unakkaga mannil vanthen - A romantic comedy blended with fantasy... 

‘மதி, இவர்கள் என் பாரீன் ப்ரண்ட்ஸ்.” என்று அவர்களை அறிமுகபடுத்தி விட்டு, தன் உள்ளூர் ப்ரண்ட்ஸ்ஐ காட்டி, “இவர்கள் அருண், ரவி. என்னுடைய ஸ்கூல் காலத்திலிருந்து நண்பர்கள்” என்று அறிமுகப் படுத்தினான். அவர்களின் மனைவியரும் வந்திருக்க, அவன் பாரின் பெண் தோழிகளையும், இவர்களையும் அழைத்துக் கொண்டு அவர்களோடு மதியும் அமர்ந்தாள். அங்கே இருந்த ஒரு மெகந்தி வரையும் பெண்ணை அழைத்து இவர்களுக்கும் போட சொன்னாள்.

அதிதியின் தோழிகள் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டனர். முதலில் டான்ஸ் ஸ்கூல் ப்ரண்ட்ஸ்,

        “ராதை மனதில், ராதை மனதில் என்ன ரகசியமோ ...

        கண் ரெண்டும் தந்தியடிக்க, கண்ணா வா கண்டு பிடிக்க “

என்று ஆரம்பித்தனர்.

பிரகாஷின் நண்பர்கள்,

        “புது மாப்பிளைக்கு வந்த யோகமடா

அந்த மணமகள்தான் வந்த நேரமடா..”

என்று பதில் கொடுத்தனர்.

அடுத்து வாணியின் தோழிகள் வந்து

              “யாரோ யாரோ உன்னோட புருஷன்

              யாரோ யாரோ உன் திமிருக்கு அரசன் “

என்று பாட, சூர்யாவின் நண்பர்கள் மேடைக்கு வந்து

              “மாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம்

              மாப்பிள்ளை தோழர்கள் நாங்கள் “

என்று பாடி ஆடினர்.

கிட்டத்தட்ட அந்தாக்ஷரி மாதிரி, ஆண்கள் ஒரு குழுவாகவும், பெண்கள் ஒரு குழுவாகவும் ஆடி பாட, பெரியவர்கள் ரசித்தனர். ஆதியும், மதியும் கைதட்டி ரசித்து கொண்டிருந்தனர். மணமக்களை பாட சொல்ல,

அதிதி 

        “ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருள் என்னவோ “

பாடினாள். பிரகாஷ் அவள் காதலில் மயங்கிருக்க, அவனை பாடும் படி கூப்பிட்டனர்.

        “ரகசியமானது காதல் ... மிக மிக ரகசியமானது காதல் “

என்று பாடினான். இரண்டு ப்ரண்ட்சும் ஆரவாரம் செய்ய, அடுத்து வாணியை இழுக்க,

        “முன்பே வா.. .. என் அன்பே வா ....கூட வா .”

என்று பாடினாள். தோழிகள் கை தட்ட, சூர்யாவை பார்த்தனர். சூர்யாவோ

        “முன் பனியா .. முதல் மழையா..

        என் மனதினில் ஏதோ விழுகிறதே... உயிர் நனைகிறதே...”

என்று பாடி, கைதட்டல் பெற்றான். மீண்டும் மணமக்களை பாட சொல்ல,

அதிதியும் வாணியும்,

          “காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை”

         “திருமண மலர்கள் தருவாயா தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே “

இதற்கு பதிலாக ,  பிரகாஷும் , சூர்யாவும் சேர்ந்து

              “ஒரு காதல் வந்துச்சோ... ஒரு காதல் வந்துச்சோ ..”

என்று பாடினார்கள்,

இப்பொழுது எல்லோரும் சேர்ந்து ஆதியை பாட சொல்ல, அவன் மறுக்க, மதியோ அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். ஆதி மதியையே பார்த்து மறுத்துக் கொண்டிருக்க, மதியின் கண்களில் என்ன தெரிந்ததோ....

முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே

எனை மறந்து எந்தன் நிழல் போகுதே

என்னில் இன்று நானே இல்லை

காதல் போலே ஏதும் இல்லை

எங்கே எந்தன் இதயம் அன்பே

வந்து சேர்ந்ததா

 

நந்தவனம் இதோ இங்கே தான்

நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்

நல்லவளே அன்பே உன்னால் தான்

நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்

நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்

அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய் 

முதல் பார்வை நெஞ்சில் என்றும்

உயிர் வாழுமே உயிர் வாழுமே

 

முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே

எனை மறந்து எந்தன் நிழல் போகுதே

 

இப்போழுது மதியை பாட சொல்ல,

ஸ்நேகிதனே ஸ்நேகிதனே ரகசிய ஸ்நேகிதனே

சின்ன சின்னதாய் கோரிக்கைகள் 

செவி கொடு ஸ்நேகிதனே

இதே அழுத்தம் அழுத்தம்

இதே அணைப்பு அணைப்பு

வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்

வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே

 

சின்ன சின்ன அத்துமீறல் புரிவாய்

என் cell எல்லாம் பூக்கள் பூக்கச் செய்வாய்

மலர்களில் மலர்வாய்

பூ பறிக்கும் பக்தன் போல மெதுவாய்

நான் தூங்கும் போது விரல் நகம் களைவாய்

சத்தமின்றி துயில்வாய்

ஐவிரல் இடுக்கில் olive எண்ணை பூசி

சேவைகள் செய்ய வேண்டும்

நீ அழும் போது நான் அழ நேர்ந்தால்

துடைக்கின்ற விரல் வேண்டும்

 

ஸ்நேகிதனே ஸ்நேகிதனே ரகசிய ஸ்நேகிதனே

சின்ன சின்னதாய் கோரிக்கைகள்

செவி கொடு ஸ்நேகிதனே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.