(Reading time: 17 - 33 minutes)

ப்பொழுது மதியையும் ஆதியையும் டூயட் ஆக பாட சொல்ல, ஆதி ஆரம்பித்தான்... மதியும் கூட பாடினாள்.

தொடத் தொட மலர்ந்ததென்ன ...பூவே

தொட்டவனை மறந்ததென்ன

பார்வைகள் புதிதா ..ஸ்பரிசங்கள் புதிதா

மழை வர பூமி மறுப்பதென்ன

 

அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில்

காலடி தடம் பதித்தோம் யார் அழித்தார்

நந்தவனக் கரையில் நட்டு வைத்த செடியில்

மொட்டு விட்ட முதற் பூவை யார் பறித்தார்

காதலர் தீண்டாத பூக்களில் தேனில்லை

இடைவெளி தாண்டாதே ...என் வசம் நானில்லை ...

 

பனி தனில் குளித்த பால் மலர் காண

இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்

பசித்தவன் அமுதம் பருகிடத் தானே

பதினேழு வசந்தங்கள் இவள் வளர்ந்தேன்

இலை மூடும் மலராக இதயத்தை மறைக்காதே

மலர் கொள்ளும் காற்றாக இதயத்தை உலுக்காதே

 

தொடத் தொட மலர்ந்ததென்ன ... பூவே

சுடச் சுட நனைந்ததென்ன

பார்வைகள் புதிதா ..ஸ்பரிசங்கள் புதிதா

மழை வர பூமி மறுப்பதென்ன

You might also like - Manathora mazhai charal... A family oriented romantic story 

அவர்கள் இருவரின் காதல் கண்ணில் தெரிய தங்களை மறந்து பாடிக் கொண்டிருந்தனர். சுற்றிலும் ஒலித்த கை தட்டல் ஓசையில் சுற்றுப்புறம் உணர்ந்தனர். ஆதி தன்னை கட்டுப்படுத்த மிகவும் போராடினான். அதிதியின் ப்ரண்ட் மேடையேறி ...

“ஹாய்.. ப்ரண்ட்ஸ் .. லாஸ்ட் அண்ட் பைனல் பெர்பார்மன்ஸ் .. நம்ம விழா நாயகிகளோடு சேர்ந்து மதி அக்காவும் கொடுக்கறாங்க... பார்க்கலாமா.” “ என்று அறிவிக்க, மூன்று பேரும் மேடை ஏறினர். இதைப் பார்த்த நம் நாயகர்களோ ஆச்சரியத்தில் விழி விரித்தனர்...  முதலில் அதிதி ஆரம்பிக்க,

ண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா)

அந்த நதியின் கரையை நான் கேட்டேன் அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன்

வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை

இறுதியில் உன்னைக் கண்டேன் இருதயப் பூவில் கண்டேன்

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா

 

இப்பொழுது வாணி வந்து ....

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா

எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா

நெஞ்சின் அலை உறங்காது

உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா..ஆ

உன் இமை கொண்டு விழி மூட வா

உன் உடல்தான் என் உடையல்லவா

பாற்கடலில் ஆடிய பின்னும் உன் வண்ணம் மாறவில்லை இன்னும்

என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா

என்னுயிரில் நீ வந்து சேர்க உதடுகள் ஈரமாய் வாழ்க கலந்திட வா

 

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா

 

கடைசியாக மதி வந்து

வான்மழை விழும்போது மலைகொண்டு காத்தாய்

கண்மழை விழும்போது எதிலென்னைக் காப்பாய்

பூவின் கண்ணீரை ரசிப்பாய்

நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா அதை நீ காணக் கண்ணில்லையா

உன் கணவுகளில் நானில்லையா

தினம் ஊசலாடுதென் மனசு அட ஊமையல்ல என் கொலுசு

என் உள் மூச்சிலே உயிர் வீங்குதே

என்னுயிர் துடிக்காமலே காப்பது உன் தீண்டலே

உயிர் தர வா

 

கடைசியில் மூன்று பேரும் சேர்ந்து,

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா

என்று ஆடி முடிக்க, ஆதி நேராக மதியின் அருகில் வந்து அவளின் கன்னத்தில் முத்தம் கொடுத்தான். இதக் கண்ட எல்லோரும் ஆரவாரம் செய்தனர். மதி வெட்கப் பட்டு தன் அன்னையின் அருகில் ஓடி விட, ஆதி மேடையேறி வந்திருந்த எல்லோருக்கும் நன்றி கூறி விட்டு, அனைவரையும் சாப்பிட போக சொன்னான். நேராக தன் அத்தையின் அருகில் வந்து அங்கே தன் அன்னையின் தோளில் சாய்ந்திருந்த மதியை பார்த்து விட்டு,

“அத்தை .. இப்போ நான் செய்தது தப்பா ..? என்று வினவ,

அவன் அத்தையோ .. “நீங்க இப்போ மட்டுமல்ல, அப்போ செய்ததும் தப்பல்ல... மதி உங்களுக்காக பிறந்தவள்... அவளிடம் என்ன கேட்கவும் உங்களுக்கு உரிமை உண்டு..என்ன மதி ?” என்று முடிக்க ஆதி சிரித்தான்.

மதியோ “அம்மா “ என்று கூறி விட்டு, அந்த இடத்தை விட்டு ஓடி விட்டாள்.

ஆதி தன் அத்தையை பார்த்து “ இதை பற்றி நாம் அப்புறம் பேசலாம்... ஆனால் நான் உங்கள் ஆதி தானே .... என்னை பழையபடி ஒருமையில் கூப்பிடுங்கள் அத்தை “ என்றான்.

“பழைய ஆதியாக இருந்தாலும், என் மாப்பிள்ளை ஆயிற்றே. “ என்று மறுக்க,

அவனோ “ நான் உங்களை என் அத்தையாக, என் வினுக் கண்ணம்மாவின் அம்மாவாக  பார்க்க விரும்புகிறேன். என் மாமியராக அல்ல.. அதனால் நீங்க என்னை ஆதி என்று கூப்பிடுங்கள்”

“சரி .. ஆதி” என்று முடிக்க.. பார்த்திருந்த அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

எல்லோரும் அங்கிங்கே நின்றும் அமர்ந்தும் சாப்பிட்டு கொண்டிருக்க, மதி ஆதியின் ப்ரண்ட்ஸ் மனைவிமாரோடு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். சூர்யாவும், வாணியும் ஒரு ஓரத்தில் நெருக்கமாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க, பிரகாஷோ அதிதியோடு மற்ற பக்கத்தில் யாரையும் அருகில் விடாமல் இருவருமாக சாப்பிட்டு கொண்டிர்ந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.