(Reading time: 17 - 33 minutes)

தி மதியின் அருகில் வந்து அமர்ந்து கொண்டு அவர்களோடு சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தான். மதியின் தட்டில் இருந்து தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டான். மதி மெதுவாக கிளம்ப எத்தனிக்க, ஆதியோ அவள் கையை பிடித்துக் கொண்டான். 

ஆதியின் நண்பன் அருண்

“ஏன்..ஆதி கன்னத்தோட நிறுத்திட்ட .. நல்ல ஒரு இங்கிலீஷ் கிஸ் பார்க்கலாம் னு நினைச்சேன்”

ரவியோ

“டேய் .. அவன் இன்னிக்கு சிஸ்டரை பார்த்த பார்வையே சரியில்லடா.. “

அப்போது அங்க வந்த சூர்யாவோ “ கரெக்ட் அண்ணா. கல்யணம் எனக்கா.. ஆதிக்கா னு தெரியலே.. இவன்தான் நல்லா என்ஜாய் செய்யறான்.. என் ஆளை ஏதாவது கேட்டா ஆதி மாமாகிட்ட சொல்லிடுவேன்னு மிரட்டறா..” என்று புலம்ப,

“ஹலோ... நாங்க லைசென்ஸ் ஹோல்டர்.. என்ன வேணா பண்ணுவோம்.. நீ இன்னும் ரெண்டு நாள் வெயிட் பண்ணு... அப்புறம் யாரு உன்னை கேட்க போறா? இப்போ போய் கடலை மட்டும் போடற வேலையை பாரு” என்று அவனை துரத்தினான்.

You might also like - Kanaamoochi re re... A romantic comedy...

அதைக் கேட்ட அவன் நண்பர்கள் சிரித்துக் கொண்டே

“டேய்.. இப்போ நாங்க இங்கே இருக்கனுமா வேணாமா ?” என்று வினவ..

“நீ வேற .. நீங்க இருக்கறதாலதான் மதியே இங்க இருக்கா.. இல்லாட்டா பாப்பா அவங்க அம்மாவை தேடி ஓடிடும்” என்று கூற, மதியோ அவன் கையில் கிள்ளினாள்..

சற்று நேரம் அவன் வெளிநாட்டு நண்பர்களிடம் பேசி கொண்டிருந்தான்... அதிதி, வாணி ப்ரண்ட்ஸ் கிளம்ப ஆரம்பித்திருக்க, அவர்களை வழியனுப்ப ஆதியும், மதியும் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் பாதுகாப்பாக செல்ல ஏற்பாடு செய்தனர்.  அதற்கு பின் பெரியவர்களையும், பெண்களையும் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு, ஆதி, சூர்யா, பிரகாஷ் இருந்தனர். அதன் பிறகு பசெலர்ஸ் பார்ட்டி ஆரம்பாகியது..

சூர்யாவும், பிரகாஷும் கொஞ்சமாக ட்ரிங்க்ஸ் எடுக்க, ஆதியோ வெறும் கூல் ட்ரிங்க்ஸ் மட்டுமே கையில் வைத்துக் கொண்டு ஒட்டி விட்டான்.

மதி வீட்டிற்கு சென்ற பிறகு, அதிதியை முதலில் தூங்க அனுப்பி விட்டாள். மறுநாள் மதியம் மண்டபத்திற்கு செல்ல வேண்டும். அவள் அத்தை ஜானகியிடம் ,

“அத்தை ... எனக்கு மருதாணி வைத்து விடுங்கள்’” என்று கேட்டாள்.

“ஏன்மா.. நீ மெகந்தி போட்டுகலையா”

“இல்லை அத்தை ... எனக்கு இதுதான் பிடிக்கும் “ என்று அவர் அருகில் உட்கார, அவள் அத்தையும் அவளுக்கு மருதாணி இட்டு விட்டார்.

அப்போது அன்று நடந்ததை பற்றி இருவரும் பேச ஆரம்பித்தனர்.

“மதி, நீ இன்னும் டான்ஸ் ஆடுகிறாயா?

“இங்கே வந்த பின் ஆடவில்லை. இப்போது அதிதியோடு அவள் டான்ஸ் ஸ்கூல் க்கு சென்ற பிறகு தான் ஆரம்பித்தேன். “

“ஆதி இன்னும் கல்யாணம் முடிந்து ஊருக்கு செல்வதை பற்றி பேசவில்லை. நீ பேசி அவனை கிளம்ப சொல்லும்மா..”

நான் சொன்னால் கேட்பாரா அத்தை...

இன்று நீ சொன்னால் மட்டும் தான் கேட்பான் கண்ணம்மா..

“சரி அத்தை சொல்லிப் பார்க்கிறேன்.”

என்று கூற, மருதாணி வைத்து முடித்து விட்டு தங்கள் அறைக்கு சென்றாள். அவள் நினைவில் ஆதியின் பார்வையும், குரலும், முத்தமுமே நின்றது. கன்னம் சிவக்க தூங்க ஆரம்பித்தாள்.

ஆதியும், சூர்யாவும், மறுநாள் காலையில் ப்ரண்ட்ஸ்ஐ எழுப்பி அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு தங்கள் வீட்டிற்கு வந்தனர்.

அன்று காலை முஹுர்த்த கால் நடுவதால், எல்லோரும் தயரயினர். குறித்த நேரத்தில் பந்தக் கால் வேலை முடிந்த பின், அனைவரும் டிபன் சாப்பிட அமர்ந்தனர். மதியத்திலிருந்து மண்டபத்தில் என்பதால், எல்லோரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டனர்.

மதிக்கு வாணியிடமிருந்து போன் வர,

“அக்கா, நீ இங்கே வந்து , என்னோடு மண்டபத்திற்கு வா” என்றழைக்க,

அதிதியோ “அண்ணி, நீங்க என்னோடு வாருங்கள்” என்றாள்.

இருவரிடமும் என்ன சொல்வது என்று மதி முழிக்கவும்,

“அதி, வாணி,.. நானும் மதியும் மண்டபத்திற்கு முதலில் சென்று விடுகிறோம்.. நீங்கள் இருவரும் ஒரே நேரத்தில் மண்டபத்திற்குள் வாருங்கள். மதியும் உங்களோடு அங்கே சேர்ந்து கொள்வாள்.. அங்கே நாங்கள் முன்னாடி சென்றால், பிரகாஷ் வீட்டினருக்கு உதவி செய்த மாதிரியும் இருக்கும்” என்று முடித்தான்.

இருவரும் ஒப்புக் கொள்ள, தேவையானதை எடுத்துக் கொண்டு முதலில் ஆதியும், மதியும் கிளம்பினர். காரில் செல்லும் போது அவளை பார்த்தவன்,

“மதிமா, சாரி “ என்றான். எதற்கு என்பது போல் பார்க்க,

“நேற்று அத்தனை பேர் எதிரில் உன்னை முத்தமிட்டதற்கு. உனக்கு சங்கடமாக இருந்திருக்கும். என்னை என்னால் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை. எனக்கு நீ என் வினுவாக வேணும்டா. இவர்கள் கல்யாணம் முடிந்தவுடன் நான் உன்னிடம் பேச வேண்டும். பேசி முடித்த பின் நம் வாழ்க்கையை தொடங்க வேண்டும்” என்றான். மதி சற்று நேரம் அமைதியாக இருந்தாள். பிறகு

“அத்தான் .. நானும் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். “ என்று கூற, ஆதி கார் ஐ பிரேக் போட்டு நிறுத்தினான். மதி திகைத்து விழிக்கவும்,

“ நீ என்னை என்னவென்று கூப்பிட்டாய்?”

“அத்தான் என்றுதான்... நான் உங்களை அப்படிதானே கூப்பிடுவேன்.. “ என்றாள்.

“ஏன் வினு இத்தனை நாள் அப்படி கூப்பிடவில்லை”

“நீங்கள் இன்றுதானே என்னை வினு என்று அழைத்தீர்கள். அதனால் நானும் அத்தான் என்று கூப்பிட்டேன். “

ஏய்.. நீ முதலிலேயே என்னை அத்தான் என்று அழைத்திருந்தால், இத்தனை நாள் வேஸ்டாக விட்டிருக்க மாட்டேன்.” என்று கூறியவன், அவளை இழுத்து அவள் இதழில் அழுந்த முத்தமிட்டான். மதி திகைத்து முழிக்க, சற்று நேரத்தில் அவளை விட்டவன், மீண்டும் வண்டியை ஸ்டார்ட் செய்தான். இருவரும் ஒரு பரவச நிலையில் இருக்க, மதியின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்து கார் ஓட்டினான்.

“வினு, உன் கை மருதாணி வாசம் ரொம்ப பிடிச்சிருக்குடா.. “

“அத்தான் ... நான் உங்களிடம் ஒன்று கேட்பேன். செய்வீர்களா?”

“சொல்லுடா கண்ணம்மா, “

“நீங்கள் நம் ஊருக்கு வர மாட்டேன் என்று சொல்லி விட்டீர்களாமே ? ப்ளீஸ் நாமும் போகலாம்”

சற்று யோசித்தவன் “சரி போகலாம். என்றைக்கு எல்லோரும் கிளம்புகிறார்கள்? “

“நாளை கழித்து ... “ என...

“ஹோ.. சரி” போகலாம். ஆனால் கிராமத்திற்கு போய் வந்த பின் நீயும் நானும் எங்கியாவது சென்று வருவோம்.”

மதி சரி எனவும், மண்டபத்தை அடையவும் சரியாக இருந்தது.

தொடரும்

Episode # 14

Episode # 16

{kunena_discuss:903}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.