(Reading time: 10 - 19 minutes)

தெல்லாம் இப்போ எதுக்கு டா..

ம்ஹ்ம், அப்படி இல்லடா ,

சில வீட்டுல கல்யாணத்துக்கு முன்னாடி மாப்பிள்ளையும் பொண்ணும்  பேசுறத விரும்ப மாட்டாங்க, சோ.. நீ அண்ணிக்கு போன் பண்ணி அது அந்த வீட்டு பெரியவங்க கைல போச்சுனா அவங்க நம்ம பத்தி என்ன நினைப்பாங்க, அதுவே நம்ம வேடுனா ... நம்ம அப்பாம்மா பத்தி நமக்கு தெரியும் அவங்க அது போல தப்பா எடுக்க்றவங்க கிடையாது அதான் நா அண்ணிட்ட உன் நம்பர கொடுத்து அவங்களயே பேச சொன்னேன். இன்ஃபாக்ட் இந்த ஐடியா கொடுத்ததே நம்ம அம்மாதான்.

என்ன?-  சந்திரன். 

ஆமா, ஆனா, நீ என்ன பண்ணி வச்சிருக்க அந்த வீட்டு பெரியவங்க கைல மாட்டுனா கூட ஈசியா தப்பிச்சுடலாம், நீ மாட்டுனது அந்த வீட்டு கிழவிட்டல மாட்டிருக்க .. இனி நீ அண்ணிட்ட பேசுனாப்ல தான்.

வாய் மூடி சிரித்த தன் அண்ணனை புரியாமல் பார்த்தான்.

அது ஒன்னும் இல்ல டா..., 

You might also like - Kanaamoochi re re... A romantic comedy...

 

அவளும் உன்ன கிழவன்னு சொல்றா நீயும் அவள கிழவினு சொல்ற.... மொத்ததுல உங்க ரெண்டு பேருக்கும் வேவ் சரியா வேலை செய்யுது..... உனக்கு அவ தான் கரக்ட் பதில் கவுண்டர் கொடுக்க....

அண்ணா கூறியது தன் காதில் தேனமுதை பாய்ச்சினாலும், தன் கெத்தை விட்டு கொடுக்காமல்,

உனக்கு ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சா.. நீ என்னையே கலாய்க்கிறியா....., அவ சொன்ன மாதிரி கல்யாணம் வரைக்குமே பேசாம இரு , அப்போதான் இந்த தம்பி அருமை புரியும் உனக்கு...என்று  வீட்டிற்க்குள் நுழைய போனவனை தடுத்த சந்திரன்,

அய்யய்யோ, தம்பி சார் மன்னிச்சிக்கோங்க, தெரியாம பேசிட்டேன்.... எப்படியாச்க்உம் உன் அண்ணி கூட என்ன பேச வச்சிடு இல்ல ...... இன்னைக்கு நைட் எனக்கு தூக்கம் இல்ல... இந்த அண்ணாவ உங்க தம்பியா நினச்சி ஹெல்ப் பண்ணுங்க... ப்ளீஸ்  ( என்ன ப்ரோ இப்படி இறங்கிட்டீங்க)

சரி, சரி ரொம்ப ஃபீல் பண்ணாத , எதாச்சும் யோசிக்கிறேன் என்று தன் நெற்றியை சிறிது நேரம் தேய்த்தவன் சொடுக்கு விட்டவாறு தன் செல்லை நோண்டினான்.

ஹாய்..... எழில்...

ம்ம்ம்ம், சொல்லுங்க பொதுவா பசங்கலாம் பொண்ணுங்க நம்பர் கிடச்சா தானே பத்து நிமிசத்துல கால் பண்ணுவாங்க.... என் நம்பர் வாங்கிட்டு போய் ஒரு ஒன் அவர் கூட முழுசா நிறையல அதுகுள்ள கால் பண்ணிருக்கீங்க.... என்ன விஷயம்.....ம்ம்ம்ம்ம்....

என்ன பண்றது எழில் கால் பண்ண வேண்டிய கட்டாயம் வந்துருச்சே அதான் ...

கட்டாயமா என்ன கட்டாயம்? அதும் எனக்கு கால் பண்ற அளவுக்கு ...என்று சீரியசாக அவன் வினவ,

சரோ நடந்த கூத்தை கூறினான். மிகவும் கஷ்ட பட்டு சிரிப்பை அடக்கியவாறு, 

அருகில் இருந்த சந்திரன் தன்னை முறைப்பதயும் பொருட்படுத்தாதவாறு.... மேலும் தனக்கு வேண்டிய உதவியையிம் கூறினான்.

என்ன விளையாடுறீங்களா .. நீங்க சொல்ற மாதிரி  செஞ்சி தப்பி தவறி அந்த ஜான்சி ரானி கிட்ட மாட்டுனா யார் காப்பாத்துவா ஆள விடுங்க... என்று மானசீகமாக அவனுகு ஒரு கும்பிடு போட்டான்.

என்ன எழில் ? இதுக்கெல்லாம் பயந்தா முடியுமா எதுவானாலும் ஃபேஸ் பண்ண கத்துக்கங்க , ஒரு பத்து நிமிசம் கழிச்சி ஒரு நம்பர்ல இருந்து கால் வரும் அதுக்குள்ள உங்க போன அண்ணிட்ட சேர்த்துடுங்க ப்ளீஸ் ..... என்றவாரு அவன் செல்லை அணைக்க ,

அது எப்படி தான் அடுத்தவங்க காதலுக்கே நம்ம ஊறுகாயா ஆக்குறாங்களோ,

ம்ம்ம்ம் என்று பெரு மூச்சு விட்டவாறு அங்கிருந்து சென்றான்.

ன்னத்தில் கையூன்றி கவலையோடு இருந்தாள் சந்தியா..

சிறிது நேரத்திற்க்கு முன் திவ்யா எதேதோ காரணம் சொல்லி தன் செல்லை பிடுங்கி சென்றதே காரணம்.

ச்ச்ச ... இப்போ என்ன பண்றது என்ற யோசனையோடு இருந்த  அவளின் முன் தன் செல்லை நீட்டினான் எழில்.

அதை ஆர்வத்தோடு கையில் வாங்கினாலும் சற்றி நேரத்தில் ஒன்றும் புரியாது அவனை நோக்கினாள்.

ம்ம்ம் , இன்னும் மூணு நாள்ல உனக்கு கணவரா வர போறவர் போன் பண்ணுவார் பேசு...

எப்படி டா நா கூட அத பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன்.. என்ன பண்ணலாம்னு ,சரியான சமயத்துல உதவி செஞ்சதுக்கு ரொம்ப நன்றி தம்பி....

ரொம்ப புகழாத, எனக்கு புகழ்ச்சி பிடிட்க்காது... அதோட சீக்கிரம் பேசிட்டு கொடு, கோமதி கால் பண்ணுவா ...

பார்டா , கோமதிட்ட போன்லலாம் பேசுவியா....என்ன?

ஏன், பத்தாம் வகுப்பு படிக்கிறவனே தன் ஃபிகரோட ஃபேஸ் புக்லயும் வாட்ஸ் அப்லயும் கனக்ட்டாகி இருகும் போது கோமதி என்னோட சொந்த மாமன் பொண்ணு அவள்ட்ட நா பேசுறதுல என்ன தப்பிருக்கு?....

இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே செல்ல் சிணுங்க அதை தன் காதில் வைத்தவாறு அவனை வெளியேறுமாறு கண் காட்டினாள் சந்தியா.

காரியம் ஆனதும் கை கழுவிடுவீங்களே... என்றவாரு அவன் நகர இவள் சந்திரனோடு பேச தொடங்கினாள்.

ஹலோ சந்தியா

ம்ம் சொல்லுங்க...

ஸ்ஸ்ஸ் அப்பா உன் கிட்ட பேசுறதுகுள்ள என் முடியெல்லாம் கொட்டி பாதி கிழவன் ஆய்டுவேன் போல,

வாய் மூடி அவள் சிரிக்க அவனும் அவளோடு சேர்ந்து சிரித்தான்.

ம்ம்ம் சொல்லுங்க...

என்ன என்னையே சொல்லுங்க சொல்லுங்கனு சொல்ற தவிர நீ ஒன்னும் சொல்லவே மாட்டுக்க...

நீ எதாச்சும் சொல்லு டா

நானா ? நா என்ன சொல்ல நீங்க தானே போன் பண்ணீங்க நீங்களே சொல்லுங்க...

சொல்லுங்க தவிர வேற எதாதும் சொல்லுவியா....

பேச ஆரம்பிச்சதுல இருந்து இதையே திரும்ப திரும்ப சொல்லுற... இல்ல எனக்கு தான் காதுல சொன்னதே திரும்ப திரும்ப கேக்குதா..?

வயசானாலே  இப்படி தான்  இருக்கும் கவலை படாதீங்க..

என்ன ? என்ன சொல்லுற நீ புரியலயே என்று கூற அவள் நிச்சயத்திற்க்கு முன் தன் சந்தேகத்தையும் அதற்்கு தன் தங்கையின் விளக்கத்தையும் கூறினாள்.

பரவா இல்லையே உன் வீட்டுல எல்லரையும்விட உன் தங்கச்சி புத்திசாலி தான் போல என்ன பத்தி கரக்ட்டா புரிஞ்சி வச்சிருக்கா..

ம்ம்ம்ம்

என்ன ம்ம்ம்ம் பதில் சொல்லு.. நீ இப்போ என்ன பத்தி, என் கிட்ட பேசுறத வச்சி என்ன நினைக்கிற ...

ம்ம்ம்

என்ன ம்ம்ம் போடுற பக்கத்துல யாராச்சும் இருக்காங்களா என்ன?   அவன் வினவ ,

ஆமா மாப்பிள்ளை சார் , போன் லவுட் ஸ்பீக்கர்ல இருக்குறதோட நானும் நந்தி போல பக்கத்துலயே இருக்குறதால அவளால பேச முடியலையோ என்னவோ?

திவ்யாவின் குரலில் தன் கையில் இருந்த போனை தவற விட்டான்.

அது எதைச்சையாக அங்கு வந்த சரோ வின் கையில் விழ போனை தன் அண்ணனிடம் நீட்டினாலும் அவனின் மிரண்ட விழிகளை கண்டவன், செல்லை ஸ்பீக்கரில் போட்டு கேட்க ஆரம்பித்தான்.

தொடரும் . . .

Episode # 04

Episode # 06

{kunena_discuss:960}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.