Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 8 - 16 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Pin It

06. கல்யாணம் முதல் காதல் வரை - சஹானி 

நிச்சயம் பண்ணும் போது மாப்பிள்ளைய பார்த்தது அப்போ கூட பெருசுங்களா பேசி அவர வழி அனுப்பி வச்சுட்டதால பேச கூட முடியல...

சரி ஒரு முறை எதேர்ச்சையா பேச முடிஞ்ச கேப்புல , கொழுந்தியா குறும்ப காட்டலாம்னு விளையாட்டுக்கு அத்தான்ட்ட அப்படி பேசுனேனே தவிர உண்மையில் போன பிடுங்கி வைக்கணும்னு தோணல ....

ஆனா அக்கா காபி கொண்டு போற சாக்க வச்சு மாப்பிள்ளையோட தம்பிய ரெண்டாவது தடவையா சைட் அடிக்கலாம்னு பார்த்தா அந்த ஆளு ...
யாருக்கும் தெரியாம அக்கா கைல எதையோ கொடுத்துட்டு , இப்டி இப்டி புருவத்த தூக்கி காமிச்சு கட்டை விரலையும் தூக்கி காமிக்குது. இதுக்கு எங்க வீட்டு மகா ராணியும் சப்போர்ட்டா சிரிக்குது...

Kalyanam muthal kathal varai

ஓஹ் , நமக்கு தெரியாம எதோ ப்ளான் போடுறாங்க போல விட கூடாதுனு என்னோட ஏழாவது அறிவ தீட்டி என்னனு துப்பு துளக்கும் போது தான் தெரிஞ்சது அது மாப்பிள்ளையோட செல் நம்பர்னு, அத்தான் நாம போட்ட போடுல பயந்து இப்படி ப்ளான் போட்டாங்க போலனு நினைச்சி, உள்ள புகுந்து உசுப்பேத்தலாம்னு ஃப்ரண்டுக்கு போன் பண்ண போறதா சொல்லி அக்காட்ட செல்ல வாங்கி வச்சிகிட்டு கொஞ்ச நேரம் கழிச்சி கொடுக்கலாம்னு வந்தா , அக்கா அத்தானோட பேசிட்டு இருக்கா... அவ பேசுனத வச்சு பார்த்த இது அத்தானோட ப்ளான் இல்ல அவர் தம்பி போட்டதுனு தெரியுது. நாம எட்டடி பாஞ்சா இந்த ஆளு பதினாரு அடில பாய்றாரு.... சரியான ப்ளான் பிஸ்தா தான்.......

அவளின் எண்ண குதிரை இப்படி தறி கெட்டு ஓட , சரோவின் குரல் அவளை இயல்புக்கு இழுத்தது.

என்ன அண்ணி? , கேக்குறேன்ல  அண்ணா ஏன் இப்படி பேய் அடிச்ச மாதிரி லுக் விடுறான்.... பதில் சொல்லுங்க.... என்று

மனமோ, வாய்ஸ் கூட நல்லா தான் இருக்கு இதுக்கும் சேர்த்து ஒரு மார்க் போட்டு நூறு மார்க் கொடுத்துடலாம் பாவம் பிள்ளை பொழச்சி போகட்டும், என்று தாளம் போட்டது.

அதுவா சரவணா சார், நா கல்யாண மாப்பிள்ளைட்ட பேசவே இல்லல அதான் பேசலாம்னு வந்தா உங்க அண்ணா சார் பயந்துட்டார்.... இல்ல அத்தான்... என்று அவள் ராகம் பாட இங்கு சரோவோ,

அட இது நம்ம ஆளு... பரவா இல்லையே வாய்ஸ் கூட குயில் போல தான் இருக்கு... என்று எண்ணி கொண்டே அண்ணனை லுக் விட அவன் இவனிடம் பார்வையாலயே காப்பாற்றுமாறு வேண்டி கொண்டிருந்தான். 
அவனுக்கு தலையை ஆட்டியவன்,

என்ன அண்ணி மிமிக்கிரி லாம் தூள் கிளப்புது . பட் ஏன் ஜென்ஸ் வாய்ஸ்ல பேசுறிங்க லேடிஸ் வாய்ஸ்லயே பேசலாமே எனக்கூற

சந்திரன் தன் தலையில் கை வைத்து விட்டான்.

அத்தான் உங்களுக்கு என் அக்கா கூட பேச வேண்டாமா? .... என்று அவள்  பல்லை கடிக்க...

அவசரமாய் , அய்யயோ திவ்யா என் ஃபியூச பிடிங்கிறாதமா நா வேணுனா இவன ரெண்டு அடி அடிச்சிடறேன்.... என்று கூற

அவளோ, ஹாஹாஹா....என்ன அத்தான் இப்படி   படி இறங்கி வந்துட்டீங்க...என்று கூற

அந்த அளவுக்கு அவர பயமுறுத்தி வச்சிருக்க... என்று பல்லை கடித்தாள் சந்தியா

பார்டா, இவர சொன்னா மேடமுக்கு கோவம் வருதாக்கும்... என்று தன் அக்காவிடம் பழிப்பு காட்டினாள்.
அதற்க்கு  அவள் இரண்டடி போட, அய்யோ, அத்தான் உங்க பொண்டாட்டி என்ன அடிக்குறா என்று இவள் அலற

அவசரமாக இடை புகுந்த சரோ, அண்ணி "  என் செல்லத்த அடிக்காதிங்க "  என்று பதற அவனை புரியாமல் பார்த்தான் சந்திரன்.

இங்கு இவர்களோ தன் காதை நம்ப முடியாமல் , 
என்ன அத்தான் உங்க தம்பிக்கு மர கழண்டுருச்சா என்று வினவ

அவனை ஒரு பார்வை பார்த்த வாரே,

இவன் எப்பவுமே இப்படி தான் திவ்யா , எங்க மாமா அத்தை பொண்ணுங்கள்ட்டயும் இப்படி தான் வம்பிழுப்பான்... என்று கூறினான்.

சந்திரனுக்கு சரோ கூறியது விளையாட்டோ என்று தெரிய வேண்டி இருந்தது. அதற்காகவெர் இப்படி போட்டு வாங்கினான்.

ஆனால் இங்கு திவ்யாவிற்கோ முகம் வாடி போனது. இவன் எல்லோரிடமும் இப்படி தானா?  நாம் தான் தவறாக எதேதோ கற்பனை செய்து விட்டோமா என்று.( எதேதோனா?)

தங்கையின் முக மாறுதலை கவனித்த சந்தியாவோ இவளை புரியாமல் பார்த்தாள். முதலில் சரவணன் கூறியதை கேட்ட இவள் முகம் பட்டாசாய் ஜொளித்ததென்ன? இப்போது இவர் கூறுவதை கேட்டு முகும் காற்று போன பலூனாய் மாறியதென்ன? என்று.

அவசரமாக சரவணன், அது எல்லாம் முறை பொண்ணுங்கள்ட்ட பண்ற விளையாட்டு அண்ணா...  இது நிஜம் ... ஆமா அண்ணி ... திவ்யா நா உன்னய விரும்புறேன். எப்போ இருந்துனுலாம் தெரியாது உன்ன பார்த்ததும் எனக்கு இப்படி பட்ட பொண்ணு மாதிரி மனைவியா கிடைக்கனும்னு தோணுச்சு அது மாதிரி என்ன மாதிரி... ஏன் நீயாவே இருக்க கூடாதுனு ...கேட்டுட்டேன்... நீ சரினு சொல்லு அண்ணா அண்ணி பக்கத்துல நமக்கும் ஒரு மேடை போட்டு நம்ம கல்யாணத்த முடிச்சிடலாம் என்ன சொல்ற... என கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல் தன் மனதில் உள்ளதை பட்டென்று உடைத்து விட்டான்.
அதை கேட்ட மற்ற மூவரின் நிலை தான் வார்த்தையில் அடங்காதது.  ஆனால், சந்திரனுக்கு அதிர்ச்சியை காட்டிலும் சந்தோஷமே,

 •  Start 
 •  Prev 
 •  1  2 
 •  Next 
 •  End 

About the Author

Shahani

Latest Books published in Chillzee KiMo

 • DeivamDeivam
 • Kadhal deiveega raniKadhal deiveega rani
 • Oru kili uruguthuOru kili uruguthu
 • Puthagam Mudiya Mayil EragePuthagam Mudiya Mayil Erage
 • Putham puthu poo poothathoPutham puthu poo poothatho
 • Pottu vaitha oru vatta nila - Part - 1Pottu vaitha oru vatta nila - Part - 1
 • Verenna vendum ulagathileVerenna vendum ulagathile
 • Yaar kutravaliYaar kutravali

Add comment

Comments  
# kalyanam muthal kathal varaiIndhuja 2016-06-01 10:12
Enanga athukula kathai mudiyapogirathenru solli viteergal. :cry:
Kathai nalarku ipdilm padikumpothu enakum kathai eluthanumnu asaiya iruku.
:GL: melum melum ungal kathai prabalamaga enathu manamarntha valthukkal :yes:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கல்யாணம் முதல் காதல் வரை - 06 - சஹானி Uma. N 2016-05-24 12:53
Please update soon Shahani
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கல்யாணம் முதல் காதல் வரை - 06 - சஹானி Chillzee Team 2016-04-08 21:33
Suvarasiyamaana kala kala update Shahani.

Enna hero ipadi propose seithutar :-)

Ezhil pavam avarai ipadi maati vitutangale. eppadi samaalika porar?

Iruthi aththiyayathai padika kathirukiren :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கல்யாணம் முதல் காதல் வரை - 06 - சஹானி Jansi 2016-04-08 12:40
Atukulla story mudiya pogutaanu aachariyama iruku.
Vazakam pola Kala kalapana epi (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கல்யாணம் முதல் காதல் வரை - 06 - சஹானி Devi 2016-04-08 12:37
kadhai nalla thane poikttu irukku.. mam.. :Q:
yen thedeernu series mudikkareenga.. :Q:
Nice episode mam .. Romba naal kazhichu update vandhadhu .. happy.. :clap:
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

KNY

KTKOP

PVOVN2

PMM

IOKK2

VTV

IOK

NIN

EEKS

KET

KKP

POK

EMS

NSS

NSS

KiMo

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top