(Reading time: 13 - 26 minutes)

30. நினைத்தாலே  இனிக்கும்... - புவனேஸ்வரி 

ந்துருவின் அறையில் இருந்து குணாவின் அறைக்கு செல்ல 20 வினாடிகள் போதும் .. எனினும் தன்னால் இயன்றவரை மெதுவாய் அடி மீது அடி வைத்தான் கதிர். அவனுக்கு மட்டுமே தெரியும் அந்த அறைக்குள் சென்றால் தனக்குள் ஏற்படும் மாற்றங்கள் .. இதுவரை அவன் யாரிடமும் இதைப்பற்றி பகிர்ந்து கொண்டதே இல்லை .. காரணம் , இதன் மீதெல்லாம் அவனுக்கே நம்பிக்கை இல்லை ..

குணாவின் மரணத்திற்கு பின் சந்துரு அந்த அறையிலேயே தான் இருந்தான் .. குணாவின் புத்தகங்கள் , உடைகள், செல்போன் இப்படி அவனின் அனைத்து பொருட்களும் மெத்தையில் சூழ்ந்திருக்க , அவற்றுடன் உறங்குவதுதான் சந்துருவின் வழக்கமாய் இருந்தது .. அவனை எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்று நினைத்த நளினி , கொஞ்சம் கொஞ்சமாய் அவன் மனதை மாற்றி , அந்த அறைக்குள் தற்காலிகமாய் பூட்டு போட்டு வைத்தார் ..

இதற்கிடையில் இருமுறை அந்த அறைக்கு சென்ற கதிர் தனக்குள் ஏதோ  மாற்றம் நிகழ்வதை உணர்ந்தான் .. அந்த அறைக்குள் காலடி எடுத்து வைக்கும்போதெல்லாம் அவனுக்கு முதுகு தண்டு சொல்லிட்டு , தலை பாரமாய் ஆகிவிடும்.. ஒரு மணி நேரமாய் உடற்பயிற்சி செய்பவனின் தேகம் போல , பொத்தென வியர்வையில் நனைந்திருப்பான் அவன் .. இருள் மட்டுமே சூழ்ந்த அறை  அவனது பயந்த விழிகளுக்கு இன்னும் மிரட்சியாய் தான் காட்சி அளித்தது .. " கதிர் " என்று குணா அழைப்பது போலவே ஒரு பிரம்மை அவனுக்குள் தோன்றிட , கருப்பாய்  புகைபோல ஏதோ  அவனை நோக்கி முன்னேற மயங்கி விழுந்துவிட்டான் கதிர் .. அவன் அந்த அறைக்குள் நுழைந்த இரண்டு முறையும் அவனுக்கு இந்த அனுபவமே நிகழ்ந்தது ..

ninaithale Inikkum

இந்தமுறை அவன் எதிர்பார்த்தது போல அந்த அறையில் அமானுஷ்யமாய் எதுவும் இல்லாமல் போக பெருமூச்சுடன் உள்ளே நுழைந்தான் கதிர்.. கட்டிலில் விழி மூடி படுத்திருந்தான் சந்துரு. அழுத்தமான காலடிகளின் சத்தம் கேட்டதும் விழி திறந்தான் அவன்..

“கதிர்!!”

“மச்சான்,எவ்வளவு நேரம் இப்படியே இருப்ப நீ ? வா வெளில போகலாம்”

“ப்ச்ச்ச்…வேணாம்டா…வெளிலவந்து வெளி உலகத்தை பார்க்குற அளவு தைரியம் இல்ல எனக்கு..ஒரு பக்கம் அப்பா,  இன்னொரு பக்கம் அம்மா,நான் என்ன சின்ன குழந்தையா  எனக்கு ரெண்டு பேரும் பிடிக்கும்னு சமாளிக்கிறதுக்கு?அம்மாவுடைய ஆசைக்கு சப்போர்ட் பண்ணா அப்பா கோபப்படுவாரு…அப்பாவுடைய கோபத்துக்கு சப்போர்ட் பண்ணாஅம்மாஉடைஞ்சு போயிருவாங்க.. இதுல நந்திதா ஒரு பக்கம்…அவ சின்ன பொண்ணுடா பாவம்..பூஞ்சை மனசு அவளுக்கு.. நான் ஒதுங்கி போனா அவ தாங்குவாளா?அவ படிப்பும்கெட்டு போயிரும்..தன் ஒரேமகளும்  சந்தோஷமாய் இல்லன்னா,மாமா மட்டும் என்னடா பண்ணுவாரு ?கலகம் மூட்டியவங்களே போய் சேர்ந்துட்டாங்க… ஆனா இங்க செத்து போன ஒரு பகைக்கு உயிர் கொடுத்துட்டு இருக்காங்க… என்னடா கதிர் இதெல்லாம்?நான் வெளில வந்து இதெல்லாம் ஃபேஸ்பண்ண விரும்பல டா” உடைந்து போயிருந்தான் அவன்.. அதுவரை சாந்தமாய் இருந்த கதிரின் குரலில் இப்போது இறுக்கம் இருந்தது.. அந்த அறையில் இருந்த நிலைக்கண்ணாடியில் பார்வையை பதித்தவன் ஏதோ வசியத்திற்கு கட்டுபட்டவன் போல, பேச தொடங்கினான்..

“ என்னடா பேசுற உன் பெரியம்மா இப்போ உயிரோடு இல்லன்னா, அவங்க, அவங்க கூட இருந்தவங்களும் தப்பு பண்ணலன்னு ஆகிடுமா ? நடந்தது என்னனு தெரியாமல் உன் மாமா அப்பாகிட்ட கை நீட்டினது தப்பு இல்லையா ?"

" என்னடா கதிர் நீயும் அப்பாவை மாதிரி பேசுற . பெரியம்மா பண்ணதுக்கு மாமா என்ன பண்ணுவார் ?"

" அதே மாதிரி குணா தற்கொலை பண்ணதுக்கு சுபத்ரா என்ன பண்ணுவா ?" அதிகம் சுற்றி வளைக்காமல் தனக்குள் திடீரென உதித்த வார்த்தைகளை நேரடியாய் கேட்டான் கதிர் .. அவன் விழிகளில் இருந்த தீவிரம் , அவன் தேவை இல்லாத பேச்சினை பேச வில்லை என்று எடுத்து கூறியது .. இருப்பினும் சந்துருவிற்குள் லேசாய் எரிச்சல் மூண்டது..

" டேய் முட்டாளா நீ ? நான் என்ன பேசுறேன் ? நீ என்ன பேசிட்டு இருக்கேன் ?"

" நான் முட்டாள் இல்ல மச்சான் .. நீ முட்டாளா இருக்க கூடாதேன்னு தான் பேசுறேன் .. நீ உனக்கு தெரிஞ்ச நியாயத்தை எடுத்து சொல்லுற மாதிரி நான் எனக்கு தெரிஞ்ச நியாயத்தை சொல்லுறேன் .. "

" கதிர் ... இப்போ அவளை பத்தி பேசாத "

" ஏன் பேச கூடாது ? ஏண்டா பேச கூடாது "

" அவனால்தான் நம்ம குணா செத்தான் "

" இதை சொல்லி சொல்லியே அவளை நாம சாகடிக்கிறோம் சந்துரு .. அவ செத்துட்டா அதுக்கு நாம தான் காரணம் "

" ப்ச்ச்ச் .. இருந்துட்டு போறேன் .. என் குணாவை என்கிட்டே இருந்து பிரிச்சவளை  நானே கொன்னுருப்பேன் "

" சந்துரு "

" .."

" சுபத்ரா இடத்துல நந்திதாவை வெச்சு பாரு "

" டேய் , யாரை யாரோடு சேர்த்து வெச்சு பேசுற ?" கை முஷ்டி இறுக முறைத்தான் சந்துரு ..

" டேய் உனக்கு அவ அத்தை பொண்ணுன்னா , எனக்கு அவ தங்கச்சி .. அது ஞாபகம் இருக்கட்டும் .,. சும்மா குதிக்காமல் யோசிச்சு பாரு .. இதுவே நந்திதா கிட்ட வந்து கவீன்  வந்து காதலை சொன்னா "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.