(Reading time: 13 - 26 minutes)

" கொன்னே போட்ருவேன் " என்று இடை புகுந்தான் சந்துரு .. அவன் கோபத்தை பார்த்தவனுக்கு சிரிப்புதான் வந்தது ..

" ஏன்டா கவீன்  சொக்க தங்கம் "

" நீ ஒரசி பார்த்தியா ?" கடுப்பாய் அவன் கேட்க இப்போது வாய்விட்டே சிரித்தான் கதிர் ..

" டேய் கொஞ்சம் நான் சொல்லுறதை கற்பனை பண்ணி பாரு .. உன் அத்தை மகள் ரத்தினத்தை வேணும் கொத்திட்டு போக முடியாது .. நீயும் அப்படி விட்டுட மாட்டன்னு எனக்கு தெரியும் " .. லேசாய் முகத்தை மேன்மை பரவ அவனை பார்த்தான் சந்துரு .. " ம்ம்ம் சொல்லி தொலை "

" டேய் நந்தும்மா , கவீன்  எல்லாம் ஒரே க்ளாஸ்  ப்ரண்ட்ஸ்  தான்  நம்மள மாதிரி .. ஒருவேளை கவீனுக்கு  நந்து மேல காதல் வந்து , நந்துவுக்கு அதில் இஷ்டம் இல்லன்னா அவ என்ன பண்ணனும் "

" பிடிக்கலன்னா வேணாம்னு சொல்லணும் "

" ஒருவேளை அவன் கெஞ்சி கைய பிடிச்சா ?"

" பிடிச்சா " என்று பேச வந்தவன் சட்டென நிறுத்தினான் ..

" புரியுதா  சந்துரு ? நந்து என்ன பண்ணணுமோ அதை தானே சுபியும் பண்ணா ? சுபியா குணாவை தற்கொலை பண்ணிக்க சொன்னா ? ஒருவேளை அவன் அப்படி பண்ணிப்பான்னு தெரிஞ்சிருந்தா அவ நிச்சயம் கை நீட்டி இருந்திருக்க மாட்டா .. உண்மையா இல்லையா ?"

" .."

" சுபி ஒரு காலத்துல நமக்கு பிரண்ட் தானே சந்துரு ? அவளை நாம புரிஞ்சுகிட்டது அவ்வளவு தானா ? குணா இடத்துல வேற ஒருத்தன் இருந்திருந்தா , நாமலே சுபிக்காக தானே சப்போர்ட் பண்ணுவோம் ?"

" அப்போ என் கோபம் தப்புன்னு சொல்றியா ?"

" தப்புன்னு சொல்லல .. இயல்புன்னு சொல்லுறேன் .. ஒரு பிரச்சனை வரும்போது , சரி எது தப்பு எதுன்னு நாம யோசிக்கிறதுக்கு முன்னாடியே , நமக்கு யாரு மேல அன்பு அதிகமோ அவங்க பக்கம் இருக்குற விஷயங்களை நியாயப்படுத்துறது  இயல்பு டா .. நீயும் அதே மாதிரி குணாவோட காதலை மட்டும் சரின்னு பார்த்த .. அவன் காதல் பண்ணது தப்பில்லை .. ஆனா , பிரேம் பேச்சை கேட்டு சுபத்ரா மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்காமல் இருந்தது தப்புதானே .. "

" சுபி நம்ம எல்லாருகிட்டயும் ஒரே மாதிரி பழகினாலும் , எத்தனை பேரு  நீங்களும் சுபியும் லவர்ஸ் ஆ ன்னு கேட்டு இருப்பாங்க .. இது அடுத்தவங்க பார்வை! அதுக்காக சுபிய தப்புன்னு சொல்ல முடியுமா ? "

" ..."

" நண்பனாக பார்த்தவன் , காதலை சொன்னா எந்த பொண்ணுடா சரின்னு சொல்லுவா ? ரெண்டு பக்கமும் காதல் இல்லாத பட்சத்துல அவ கோபத்துல நியாயம் இருக்க தானே செய்யுது ? "

" ... "

" பிரேம் ... பிரேம் பண்ணது நான் சரின்னு சொல்ல வரல .. ஆனா அவன் ஆசை காட்டி இருந்தாலும் குணா  பொறுமையா இருந்துருக்கலாம் .. ஒருத்தவங்க பேச்சை கேட்டு நம்ம நமசுல காதலை வளர்த்துக்க முடியும்னா , நம்ம மனசு தான் அவ்வளவு வீக் ஆ இருக்குன்னு அர்த்தம் மச்சி .. "

" .. "

" நான் உன்கிட்ட வந்து , நந்துவ விட வேற பொண்ணு தான் உனக்கு சரி வரும்னு ஆசை காட்டினா நீயும் நம்பி காதலிப்பியா டா ?"

" இதெல்லாம் மீறி குணா வளர்ந்த சூழ்நிலை அப்படி மச்சான் .. அவன் பொதுவாகவே பொண்ணுங்க கிட்ட பேச சங்கடப்படுவான் .. அப்படி பட்டவன் சுபியின் நட்பை காதல்ன்னு நினைச்சது புதுசு இல்லையே "

இயல்பு தானே ? ஆனா , அது தப்பு மச்சான் .. குணா பண்ணது மட்டும் தப்புன்னு நான் சொல்லல .. ஆனா , குணா மேல எந்த தப்புமே இல்லன்னு நினைச்சு மத்த ரெண்டு பேருக்கும் தண்டனை கொடுக்காத ! உன் அப்பா பண்ணுறது தப்புன்னா நீ பண்ணுறதும் தப்புதான் !!" .. அவனே சுயமாய் இனி முடிவெடுப்பான் என்ற நம்பிக்கையில் அறையை விட்டு வெளி வந்தான் கதிர் .. ஏதோ  மாயவலையில் இருந்து வெளிவந்தது போன அவனுக்குள் ஆசுவாச பெருமூச்சு ! அதே நேரம் புகைப்படத்தில் நிம்மதியாய் சிரித்தான் குணா .. அவனுக்கு தெரியும் சந்துரு கதிரின் வார்த்தைகளை புரிந்து கொள்வான் என்று ... தன் இவனின் மரணத்தால் எத்தனை பேரின் வாழ்க்கை நிலைகுலைந்து நிற்கிறது ! இதை எல்லாம் சரி படுத்தினால் அல்லவா தனக்கும் மோட்சம் கிடைக்கும் ? அவனின் பார்வை சந்துரு மீதே நிலைக்க, பிரேம் சுபியிடம் மன்றாடி கொண்டிருந்த வேளையில் , சந்துரு சுபத்ராவுக்கு போன் போட்டான் ..

பிரேமை திட்டுவதற்காக சுபி வாய் திறந்த நேரம் சந்துருவின் கால் வந்தது .. புதிய எண்ணில்  இருந்து போன் வரவும்  யார் என்று குழம்பி போனாள்  அவள் ..அதே நேரம் அவளின் நம்பரை தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த நந்துவை மனதினுள் பாராட்டினான் சந்துரு ..

" ஹெலோ"

" சந்துரு ????" 

" ம்ம்ம் நான்தான் " .. கரகரப்பாய் ஒலித்த குரலை அவன் சரி படுத்திக்கொள்ள, இதயம் படபடக்க கலங்கிய விழிகளுடன் அமர்ந்திருந்தாள்  சுபத்ரா.. " சந்துரு வா பேசுறான் என்கிட்ட ?" நம்பமுடியாமல் அவள் தவிக்க அவள்  முகபாவத்தை பார்த்தபடி அருகில் வந்தான் ப்ரேம் ..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.