(Reading time: 30 - 59 minutes)

15. மனம் கொய்தாய் மனோஹரி - அன்னா ஸ்வீட்டி

Manam koithaai Manohari

திபாவா?” என்ற மனோ அருகில் இருந்தவனை கேள்வியாய் பார்த்தாள்.

“ஆமாம் மதிபாதான்…” அவள் கேள்வியின் அர்த்தம் புரிந்து அதற்கான பாராட்டும் மித்ரன் முகத்தில் வந்திருந்தது. “அவளோட நேம் மதிபாதான்….அந்த ஃபேக் டாக்குமென்ட்ல இருந்த மாதிரி மகிபா இல்லை….அதுவும் ஒரு க்ளூ இங்க நடந்த ப்ரச்சனையையோட ஆரிஜினை கண்டுபிடிக்க….” விளக்கினான் மித்ரன்.

“அப்போ என் ஏஜ் 11………சட்டபடி அப்போ நான் என் பெரியம்மா பெரியப்பவோட சன்…..அவங்க சம்மதிச்சு சைன் பண்ணாம என்னை இன்டியா கூட்டிட்டு வர முடியாது….இங்க வந்தாலும் நான் ஹாஸ்டல்லதான் இருக்கனுன்றது ரெண்டாவது விஷயம்…..இருந்தும் பெரியம்மா பெரியப்பாவை ப்ரெஸ் பண்ணி அப்பா சம்மதம் வாங்கிருப்பாங்க என்னை இங்க கொண்டு வர…..ஆனா அம்மா விடலை…..அம்மா பத்தி ஏற்கனவே சொல்லி இருந்தேன்ல…..அவங்க சிச்சுவேஷன் ஸ்ட்ரெஸ்ஸானா சூசைட் அட்டெம்ட் செய்ற ஆள்….

அவங்க “என் அக்கா எனக்காக மித்ரனுக்காக எவ்ளவு செஞ்சுருக்கா என் பேரண்ட்ஸ் இறந்த பிறகு கூட என்னை பார்த்துகிட்டது அக்காவும் அத்தானும் தான்….அடுத்தும் இப்பவரைக்கும் மித்ரனை அவங்க எப்டி பார்த்துகிட்டாங்க….? ஒரு சின்ன குழந்தை சொன்னதை வச்சு அவங்களைப் போய் சந்தேகப் படுறீங்களே…அக்காவுக்கும் அத்தானுக்கும் இது எவ்ளவு அவமானமா இருக்கும்….அதோட அவனை அவங்க சொந்த பிள்ளையாதான் நடத்துறாங்க…..அவங்க பிள்ளைய அவங்கட்ட இருந்து பிடுங்கினா அவங்களுக்கு எவ்ளவு வலிக்கும்…..? நீங்க மட்டும் அவனை அவங்கட்ட இருந்து கட்டாயபடுத்தி பிடுங்கிட்டு வாங்க….அடுத்து என்னை உயிரோட பார்க்க மாட்டீங்கன்னு சண்டை….”

இதுல அப்பா பெரியம்மாட்ட ஸாஃப்ட்டா கேட்டு பார்த்ததுக்கு அவங்க ஒரே அழுகை….ஆனால் கடைசி வரை என்னை தர ஒத்துகலை….அதானல அப்பாவால அந்த டைம் என்னை இன்டியா கொண்டு வர முடியலை….அதான் அங்க உள்ள ரெசிடென்ஷியல் ஸ்போர்ட்ஸ் ஸ்கூல்ல சேர்த்துட்டாங்க……

இதை நார்மல் ஸ்கூல்னு சொல்ல முடியாது….மார்னிங் பக்கத்துல உள்ள ஸ்கூல்க்கு போவோம்…..அது நார்மல் ஸ்கூலிங்தான்…பட் மத்தவங்களை விட எங்களுக்கு 2 அவர்ஸ் பெர் டே ஸ்கூல் ட்யூரேஷன் கம்மியா இருக்கும்…..

..மதியத்துக்கு மேல எங்க அகடமி கேம்பஸ்க்கு வந்துடுவோம்….. அப்றம் ரிகரஸ் ஸ்போர்ட்ஸ் ட்ரெய்னிங்…..ஸ்போர்ட்ஸ்னா…இது ஸ்பெஷலி ஃபார் டென்னிஸ்….. யுஎஸ்லனு இல்ல உலகத்துல எந்த நாட்டுல உள்ளவங்க டென்னிஸ்ல பெரிய ஆளாகனும்னாலும் கொஞ்ச நாளாவது கண்டிப்பா இங்க வந்து ட்ரெயினிங் எடுப்பாங்க…..அவ்ளவு ஃபேமஸ் ஒன்….

ஒருவகையில பார்த்தா அந்த அகடமி ஹெவன்….உலகத்தோட எந்த கெட்ட விஷயமும் நம்மை ரீச் பண்ணாது உள்ள…..காலையில 5.30 க்கு எங்க டே  ஸ்டார்ட் ஆகும்…. நைட் 10க்கு எல்லா ரூம் லைட்டும் கண்டிப்பா ஆஃப்…….

கேம்பஸ்குள்ள லிகர், ட்ரக், ப்ர்னொக்ராஃபினு எந்த கெட்டவிஷயமும் வரவே முடியாது……டேடிங் அஃபேர்னு கூட எதுக்கும் பெர்மிஷன் கிடையாது…..மொபைல் கூட யாருக்கும் அலவ்ட் கிடையாது…..

வீக்லி ஒன்ஸ்தான்… அதுவும் வீட்ல இருந்து  கார்டியன்னு யாரை கொடுத்துறுக்குதோ அவங்கதான் பேச முடியும்…..அதுவும் ஃபேமிலி ப்ராப்ளம்லாம் எதுவும் பேசக் கூடாது…..ஏன்னா பிள்ளைங்க கவனம் டென்னிஸை தவிர எதுமேலயும் சிதறிடக் கூடாதுன்னு அப்டி ரூல் வச்சிருந்தாங்க…..நாம யாருக்கும் கால் பண்ணவே முடியாது…எதாவது அவசியம்னா அகடமில இருந்து அவங்களே வீட்டுக்கு இன்ஃபார்ம் செய்துடுவாங்க….

சோ என்ட்ட வீக்லி ஒன்ஸ் அப்பா பேசுவாங்க…..யூஎஸ் கல்ச்சர் என்னை பாதிச்சுட கூடாதுன்னு அப்பா அந்த அகடமியை டிசைட் பண்ணாங்க போல….

 மத்தபடி எவ்ரி சாட்டர்டே ஹால்ஃப் டே தான் வர்கிங்….மார்னிங் மட்டும் டென்னிஸ் ப்ராக்டிஸ் இருக்கும்……ஆஃப்டர் நூன் ஃப்ரீ டே…. அன்னைக்கு வீக்லி ஷாப்பிங் கூட்டிட்டுப் போவாங்க……

அடுத்தும் திரும்பி வரவும் உள்ள ஃப்ரெண்ட்ஸா சேர்ந்து செம ஜாலியா இருக்கும்…… டேன்ஸ் ஹால்….மியூசிக் ஹால்னு எல்லா இன்ஸ்ட்ரூமென்ட்ஸும் இருக்கும்…… நான் டேன்ஸ் படிச்சது அங்க தான்…..

சன்டேயும் ஃப்ரீதான்…. ஆனா பேஸிகலி அது ரெஸ்ட்கான டே…. நான் மதிலாம் அதாவது மதிபாலாம் காலையில லிடி ஆன்டி கூட சர்ச் போய்டுவோம்….லிடி ஆன்டிதான் அந்த அகடமி ஃபவ்ண்டரோட வைஃப்….. நானும் மதியும் ஆன்டிக்கு ரொம்ப க்ளோஸ்…. அவங்களுக்கு குழந்தைங்க கிடையாது….அவங்க ஹஸ்பண்ட் ஜிம் அங்கிள்க்கு டென்னிஸ்தான் கடவுள்….. வேற உலகமே கிடையாது…..

இன்னொரு விஷயம் மதியும் கிட்டதட்ட என்னை மாதிரிதான்…..இன்டியன்…..அவளுக்கும் என் ஏஜ்தான் 11 இயர்ஸ் ஓல்ட்…….அவங்க அப்பாவோட ஃபர்ஸ்ட் வைஃபோட பொண்ணு அவ…..கொஞ்சம் வாலும் கூட…..டென்னிஸ் நல்லா விளையாடுவான்னு இங்க கொண்டு வந்து சேர்த்திருந்தாலும்…… ஒருவகையில என் நிலமை தான் அவளுக்கும்…..அதனாலயோ என்னமோ எங்க மூனு பேருக்கும் ரொம்பவே ஒத்துப் போச்சு….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.