(Reading time: 30 - 59 minutes)

யாருமே இந்த ஆஃபரை இதுவரை மறுத்ததே இல்லையே…..நீயும் ஏத்துகிட்டு போய்டுவன்னு எதிர்பார்த்திறுக்காங்க….. பிரிஞ்சு போய்ட்டா மறந்துடுவேன்னு நம்பிக்கை….. ஆனா நீ அதை முகத்துல அடிச்ச மாதிரி பிடிவாதமா மறுத்துட்ட…..

அதான் அடுத்த கிட்நாப் அட்டெம்ட்…..” சொல்லிவிட்டு அவனே நிறுத்திவிட்டான்….

எத்தனையாவது முறையாக அதிர்வதாம் இவள்? மனோ காதில் விழுந்த விஷயத்தை ஜீரணிக்க முடியாத பார்வை ஒன்றைப் பார்த்தாள் அவன் புறமாக…

“ஆமா கிட்நாப் செய்ற மாதிரி ஒரு பயத்தை உனக்கு கொடுத்தா…..நீ இல்லைனாலும் உன் வீட்ல உள்ளவங்க உன்னை அந்த அப்ராட் ஆஃபரை ஏத்துகிட சொல்லுவாங்க….. இல்லைனா ஜாபை ரிசைன் செய்ய சொல்லுவாங்க….….. அதுதான் அவங்க எய்ம்….. எப்படியும் நீ என் பார்வையில இருந்து போயிடனும்னு ட்ரைப் பண்ணி இருக்காங்க….” அவன் விளக்க

“இதை உங்க அம்மாவா செய்தாங்க?”  எனக் கேட்டாள் இவள். அவனுக்கு இது தெரிய வரும் போது எப்படி இருந்திருக்கும் என்று இவளுக்கும்…..இப்பொழுது இவள் எப்படி உணர்கிறாளோ என்ற தவிப்பு அவனுக்குமாயான கணமான கணக்க செய்யும் கணம் அது…

“அம்மா செய்யலை…..மாசிரன் ப்ளான் தான்…..பட் அம்மாவுக்கு தெரிய வந்தாலும் பிரவாயில்லை அம்மாட்ட எப்டியும் பேசி சமாளிச்சுடலாம்னுதான் அந்த ஆள் இப்டி செய்திருக்கனும்…...ஏன்னா இன்சிடென்ட் நடந்தது ஆஃபீஸ்ல…. அம்மாவுக்கு ஆஃபீஸ் விஷயம்  ரீச் ஆக வாய்ப்பு அதிகம்…..

அப்டி தெரிஞ்சா அடுத்து அம்மா பெருசா ரியாக்ட் செய்துட கூடாதுன்னுதான் லேடிய வச்சு கிட்நாப் அட்டெம்ட் செய்தது…..உன்னை கேம்பஸை விட்டு கூட அவங்க வெளிய  கொண்டு போகல….. ஃப்யூ மினிட்ஸ் கூட நீ அவங்க கைல இல்லை….. பொண்ணோட பேரு கெட்டு போக கூடாதுன்னு அம்மா யோசிப்பாங்க……இதெல்லாம் அம்மாவ பின்னால கன்வின்ஸ் செய்றதுக்கு வசதியா இருக்கும்னு அந்த ஆள் செய்த ஏற்பாடு….

ஆஃபீஸை தவிர வெளிய வச்சு எங்கயும் உன்னை இப்டி கிட்நாப் அட்டெம்ட் செய்தா உனக்கு ஆஃபீஃஸ் வர பயம் வரனும்னு அவங்க நினைக்கிறது எப்படி நடக்கும்? பேசிக் ப்ளானே அடி வாங்கிடும்ல….அதான் ஆஃபீஸ்ல வச்சு செய்துறுக்காங்க……அடுத்தும் அம்மாவை எப்டி சமாளிக்றதுன்னும் யோசிச்சிறுக்காங்க….. ஆனா அம்மாவுக்கு இந்த கிட்நாப் விஷயம் தெரியலை……

ப்டியும் உள்ள பிக்சர்ல அம்மா இருந்ததுனாலதான் மாசிரன் இந்த எல்லா வேலையுமே ஒரு மாதிரி சாஃப்டா செய்துறுக்கான்…… நீயாவே என்ட்ட இருந்து விலகிக்கிடனும்ற மாதிரி……

எனக்கு இது நடந்து முடியவும் அம்மாவுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கும் தோணிட்டு…. அவங்க அன்னைக்கு ஹோட்டல்ல வச்சு நம்மை பார்த்ததுக்கும் இதுக்கும் ஏதோ ஒரு லிங்க்னு ஒரு இன்ஸ்டிங்க்ட்…… பட் எவிடென்ஸுன்னு பார்த்தா எதுவும் இல்லை….

அவங்க நம்ம மேரேஜுக்கு எதிரா காய் நகர்த்துறாங்கன்னு தோணவும்தான் உடனே உங்க அப்பாட்ட ஹாஸ்பிட்டல்ல வச்சே கல்யாணத்துக்கு கேட்டேன்….உன்ட்ட கேட்கிறதைவிட இது சரியா இருக்கும்னு தோணிச்சு….

எப்டியும் நம்ம கல்யாணம் முடியுற வரைக்கும் அம்மா தொந்தரவு செய்வாங்க……கல்யாணம் ஆகிட்டுன்னா அப்றம் சாமாதானமாகிடுவாங்கன்னு தோணிச்சு…. அதனால எவ்ளவு சீக்கிரம் மேரேஜ் நடக்குதோ அவ்ளவுக்கு அவ்ளவு இந்த தொல்லை ஓயும்ன்ற மாதிரி நினச்சேன்……

ஓரளவு என் ஃபேமிலி பேக்ரவ்ண்ட்…. என் ஃபினான்ஸ்…..என் ஜாப் எல்லாம் சொல்லிதான் கேட்டேன்….. உங்கப்பா சம்மதிச்சது எனக்கு ரொம்பவுமே நிம்மதியா இருந்துச்சு….

அதே நேரம் உனக்கு செக்யூரிட்டிகாக ஜோசஃப்ஃபை ஏற்பாடு செய்துட்டு…….என் அம்மாட்ட பேசவும் செய்தேன்……

நான் ஆஃபீஸ்ல என்ன நடந்துதுன்னு சொல்லாம உன்னை மேரேஜ் செய்யப் போறென் இதுல தலையிடாதீங்கன்னு மட்டும் சொன்னேன்….அவங்களா நடந்த விஷயத்தைப் பத்தி பேசினா அவங்களுக்கு விஷயம் தெரிஞ்சிருக்குன்னு கன்ஃபார்ம் ஆகிடுமேன்னு பார்த்தேன்….அவங்க உனக்கான அந்த ஃபாரின் ஆஃபரை மட்டும் சொன்னாங்க……அதை வாங்கிட்டு அந்த பொண்ணை போய் நல்ல படியா செட்லாக சொல்லு….

உனக்கு அந்தப் பொண்ணு வேண்டாம்…..வர்ஷன் லவ் மேரேஜ் செய்தான்….இப்ப ஒரு சின்ன ப்ரச்சனைனதும் விட்டுட்டு போய்ட்டா அவ…..நீயும் அதே தப்பை செய்யாத……நான் உனக்கு பொண்ணு பார்க்கிறேன்னு ஒரே அட்வைஸ்….

சீக்கிரம் நம்ம கல்யாணம் முடியுறதுதான் சரியான முடிவுன்னு ரொம்பவும் தோணிட்டு…

இதுக்கு இடையில் மறு நாள் என் பெர்த் டே….

அன்னைக்கு தான் அந்த டிவோர்ஸ் ஃபைல் டிராமா இல்லையா?……ஆஃபீஸ்ல நீ எந்த நிமிஷம் எந்த இடத்துல இருக்கன்னு வரைக்கும் கண்காநிச்சு…..என்னை உன்னைவிட்டு பிரிச்சு கூட்டிட்டுப் போய்ட்டு உன்ட்ட அந்த ஃபைலை கொடுத்துறுக்காங்க…. அப்ப எனக்கு இது எதுவுமே தெரியாது” அவன் தொடர்ந்து விளக்க

“அதுமட்டுமில்ல “ என தொடங்கி அன்று ஆஃபீஸ் செல்லவும் லாயருடன் இவன் பேசிய டிவோர்ஸ் கதையை சொன்னாள் மனோ.

“ஓ இதுல ஏதோ விஷயம் இருக்கும்னு தோணிச்சு……ஆனா இப்டிய இருக்கும்னு நான் கெஸ் செய்யலை….பயோசியோட லீகல் சைடை ஹேண்டில் செய்றதுக்குன்னு லாயர் உண்டு…..அவர் என்னை திடீர்னு கூப்ட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.