உங்க அண்ணா வைஃப் டிவோர்ஸ் அப்ளை செய்றாங்க…..அதை உங்கட்ட உங்கம்மா சொல்ல சொல்றாங்க……அதுக்கு நீங்க என்ன பதில் சொல்றீங்கன்னு கேட்டார் அந்த கால்ல…
முதல்ல எனக்கு எரிச்சல் தான் வந்துது….. இதை ஒரு காரணமா சொல்லி நம்ம மேரேஜை நான் நிறுத்துவேன்னு அம்மா எதிர்பார்க்காங்களேன்னு…..அதுவும் இப்டி ஒரு கேள்வி வேற…..இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு…..
அந்த ஞாபகத்தில் தான் பதில் சொன்னேன் நான்….. அவங்களே செய்தா எனக்கென்னனு?....அடுத்தும் வர்ஷன் பத்தி அஃபீஷியல் டீடெய்ல்ஸ் வேணும்னாங்க….வந்து எடுத்துட்டுப் போங்கன்னு சொன்னேன்….” விளக்கினான் அவன்.
“ஆனா நீங்க இங்க்லீஷ்ல பேசினீங்க….நான் நீங்க சொன்ன she ஐ அவன்னு எடுத்துக்கிட்டேன்….அதானல விஜிலா பத்தி பேசிருப்பீங்கன்னு எனக்கு இப்ப வரையே தோணவே இல்லை…”
அவள் பதிலைக் கேட்டு சின்னதாய் ஒரு புன்னகை அவன் புறம்…. கனிவும் பாராட்டுமான ஒரு உணர்வு அதில்….
“நான் இதுவரைக்கும் எதையுமே உன்ட்ட சொல்லலை மனு….எல்லாமே நீயா கெஸ் செய்தது தான்….”
அடுத்து அவன் என்ன சொல்ல வந்தானோ…
“இதெல்லாம் சரி…..ஆனால் அந்த ஆடிட்டர் இவ்ளவும் ஏன் செய்தார்…..நீங்க சொல்றதைப் பார்த்தா உங்க அம்மாவுக்கான்னும் இல்லை போல தெரியுது?” என பேச்சை மீண்டுமாக முக்கிய விஷயத்தின் பக்கம் திருப்பினாள் மனோகரி….
“ஆமாம் அந்த ஆள் இது எதுவுமே அம்மாக்காகல்லாம் செய்யலை……இங்க ப்ரச்சனையானது அப்பா உயில்……. “ தொடர்ந்தான் மித்ரன்….
“வரிசையா சொல்றேன் அப்பதான் தெளிவா புரியும்….அந்த டிவோர்ஸ் ஃபைலைப் பார்த்த பிறகும் நீ நான் ப்ரபோஸ் செய்ததை ஒத்துகிட்டதும் விஷயத்தை மாசிரன் உடனே அம்மாவைக் கூப்ட்டு சொல்லிருக்கான்….. அம்மா அடுத்து ஹார்ஷா எதுவும் செய்ய ஒத்துப்பாங்கன்னு எதிர்பார்த்திருக்கலாம் அவன்…… ஆனா அம்மா சட்டுனு அவ்ளவு தூரம் அந்த பொண்னு இந்த விஷயத்துல ஸ்ட்ராங்கா இருக்கான்னா நான் இந்த கல்யாணத்தை பேசி முடிக்கப் போறேன்னு சொல்லிட்டாங்களாம்….
அம்மா ஏன் இப்டி செய்தாங்கன்னு தெரியலை…..ஆனா அந்த மாசிரன் டென்ஷன் ஆகிட்டான்…… அவனோட ப்ளான் சொதப்பிடுமே…..அதனால தான் அவன் அந்த ஷூட் அவ்ட் அரேஞ்ச் செய்தது…. அவன் மாட்டினா இதெல்லாம் செய்ததே அம்மாதான்ற மாதிரி காமிக்க ஏற்பாடும் செய்து வச்சிறுந்தான்…. அது அம்மாக்கு தெரியாது……
நான் உன் அப்பா வீட்ல நடந்த ஷீட் அவ்ட்டை உண்மையில் அம்மா நம்ம மேரேஜுக்கு அப்ஜெக்ட் செய்தது கூட சம்மந்தபடுத்தி யோசிக்கவே இல்லை….அம்மா தவிரவும் யாரோ இதுல உள்ள இருக்காங்கன்னு முதல் தடவையா அப்பதான் பட்டுது எனக்கு…..
அதே நேரம் அம்மா அங்க உன் அம்மா அப்பாவைப் பார்க்க வந்தாங்க……
அப்ப பேசிட்டு இருக்கப்ப அவங்க மதியப் பத்தி சொன்னாங்க பாரு…..இந்த டிவோர்ஸ் கதையை நான் அப்போதான் முதல் தடவையா கேள்வி பட்டேன்……ஆனா அதை விட எனக்கு ஷாக்கா இருந்தது என் அம்மாவுக்கு மதிபான்னு ஒருத்தி இருந்திருக்கான்னு தெரிஞ்சிருந்தது தான்…. அதோட மதியை என் கூட மேரேஜோட தொடர்பு படுத்தி இருக்காங்க….அவளுக்கு அங்க ஷீட் அவுட்…. இங்க இப்ப நான் நிஜமாவே உன்னை மேரேஜ் செய்யப் போறேன்…..இங்கயும் ஷூட் அவ்ட்…… இதுல என் அம்மா நம்ம மேரேஜ் வேண்டாம்னு உள்ள இறங்கி வேலை பார்க்காங்க…..
அப்படின்னா கல்ப்ரிட் அம்மாவுக்கு ஏதோ வகையில் தொடர்பு உள்ளவங்களா இருக்கனும்னு எனக்கு பட்டுது….. அம்மா மர்டர் அளவு போற ஆள் கிடையாது…அவங்களுக்கு உச்சமா ப்ரச்சனையா தோணுனா கூட சூசைட் செய்ய தோணுமே தவிர கண்டிப்பா இப்டி வேலைலாம் செய்ய மனசு வராது….. அதனால வேற யாரோ அம்மாவை யூஸ் செய்றாங்கன்னு புரிஞ்சுது…..ஆனா யாரு என்ன காரணமா இருக்கும்னு ஒன்னுமே தெரியலை….
ஆனா உன்னை நான் கண்டிப்பா இம்மீடியட்டா சேஃபர் ஸோன்குள்ள கொண்டு வரனும்னு மட்டும் தெளிவா புரிஞ்சுது…. எப்டி யோசிச்சாலும் அப்போதைக்கு அந்த சேஃபர் ஸோன்கிறது உன் இஷ்டமில்லாம உனக்கு என் கூட மேரேஜ் நடக்கிறதாதான் இருக்க முடியும்னு தெரிஞ்சுது…..”
அவன் தெளிவாய் சொல்ல அவனை கேள்வியாய் பார்த்தாள் மனோகரி.
Friends இந்த எபிசோடில் மித்ரன் மனோகரியை அப்படி திருமணம் செய்த காரணத்தையும் சொல்லி முடித்துவிடலாம் என எதிர்பார்த்தேன்….அதை நேரமெடுத்து எழுத வேண்டும் என புரிகிறது….ஆகவே இங்கே நிறுத்தி இருக்கிறேன்… இந்த எபிசோடில் எதாவது புரியாமல் இருந்தால் அது அடுத்த எபிசோட் வரும் போது தெளிவாகி விடும். பொறுத்தருளவும். நன்றி
தொடரும்!
{kunena_discuss:928}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.