(Reading time: 18 - 35 minutes)

14. மனம் கொய்தாய் மனோஹரி - அன்னா ஸ்வீட்டி

manam koithaai manohari

நித்யா ஒவ்வொரு நகையாக எடுத்து இவளுக்கு அணிய அணிய மனோவுக்கு நிறையவே புரிகின்றது. முதல் விஷயம் இந்த நகைகளைத்தான் மித்ரன் அன்று தன் லேப்டாப்பில் பார்த்துக் கொண்டிருந்தான் என்பது.

கழுத்திலிருக்கும் ஆரத்திற்கு ஏற்ப, காதிலிருக்கும் ஜிமிக்கியில் கூட சிறிதாக இரண்டு மயில்கள்… தலை முடியை நீளமாய் பின்னி சடையில் ராக்கொடி வில்லைகள் வைத்து அலங்காரம்… இடுப்பில் சற்றே சரிந்து தழைந்து தொங்கும் ஒட்டியாணம்… நெற்றியில் சலங்கைகள் உள்ள ஒற்றை சுட்டி….

ஒல்லியும் உயரமுமாய்…. இடை தாண்டி இறங்கும் முடியுமாய்….லட்சணமான முகமும்… சற்றே நிறைந்த அழுத்த உதடுகளும்…. பாலில் கழுவியது போன்ற தெளிவான கண்களுமாய்…. இயல்பான மனோகரி இன்று இந்த அலங்காரம் முடிந்து கிளம்ப…

அவை அனைத்தையும் முகம் நிறைய பூரிப்புடன் பார்த்து பரவசப் படும் நித்யா…..

நித்யாவும் இவளது அத்தனை உடைக்கும் பொருந்துவது போல….வான் நீல நிற லெஹங்காவில்…சின்னதாய் ஒரு ஒற்றை மயில் கொண்ட நெக்லஸுடன்…. திரவியாவுக்கும் அதே உடை….

அடுத்து மனோகரியை இப்போது  திருமண வைபவத்திற்காய் அழைத்து செல்கின்றனர்….

அங்கு மேடையில் எதிர்கொள்கிறான் மித்ரன் இவளை….. இவளது வெண்மையும் நீலமுமான புடவைக்கு முற்றிலும் பொருந்தும் படியாய்….டீல் ப்ளூ சில்க் ஷர்ட்….மிட்னைட் ப்ளூ கோட் சூட்……அவனது ட்ரேட் மார்க் ராயல் லுக்…

திருமண வைபவம் முறைப்படி ஒவ்வொன்றாய் நிறைவேற….. செய்ய வேண்டியதை தவிர எதுவும் செய்யாமல்  நல்லபையனாய் நடந்து கொண்டிருந்தான் இவள் நாயகன். உடன்படிக்கை எல்லாம் முடிய இறுதியாக வருகிறது அந்த வேளை….

அவன் இவளுக்கு தாலி அணிவிக்க வேண்டும்…. நல்ல நீள செயின்தான்……ஹூக் பகுதியில் கழற்றி அவன் கையில் வைத்திருக்கிறான்….. ஹூக் உள்ள ஒரு முனையை இடக்கையில் பிடித்து இவள் முகத்துக்கு  கீழாக  வைத்துக் கொண்டு……மறுமுனையை வலக்கையால் இவள் பின் கழுத்தோடு சுற்றி கொண்டு வந்து ஹூக்கில் கோர்த்து மாட்ட வேண்டும்….

எல்லாத்தையும் படு சிரத்தையாய் செய்தவன்….இறுதியாக ஹூக்கில் மறுமுனையை கொண்டு வந்து மாட்டி, விரலால் ஹூக்கை நசுக்கி இணைக்க முயன்றவனுக்கு அதில் திருப்தி இல்லை போலும்….இன்னும் முழுதாய் அது இணையாதது போல்……சில நேரம் கழன்றுவிடும் போல் தோன்ற…..

மனோகரி மட்டுமல்ல அருகில் நின்றவர்கள் யாரும் எதிர்பாரா நேரம்…. சட்டென குனிந்து……..  செயினை பிடித்திருந்த அவன் விரல்களின் பின்புற மொழிகள் இவள் மீது பட்டு பட்டு விலக…. அவன் உச்சந்தலை முடி கற்றை இவள் கழுத்தில்,நாடியில், தொட்டு தொட்டு தழுவ…… அவன் மூச்சுக் காற்றை இவள் தேகம் ஸ்பரிசிக்க…..ஹூக்கை பல்லால் கடித்து இறுக்கினான்.

முதல் நொடியின் முன் பகுதியில் தன்னவனின் எதிர்பாரா  இச்செயலில் பெண்மையின் இயல்பை ஒரு துடிப்பாக இவள் எதிரொலித்தாலும்….அவன் நடத்தையில்….அதை இவள் ரசித்த ரசனையில்….கண்ணும் கன்னங்களும் பெண்ணும் உள்ளும் புறமுமாக பூத்துப் பூரிக்க…..உதடுகடித்து…. வெட்கம் தரித்து…..வெளிக்காண்பிக்காமல் அந்த நொடிகளை சுகித்து......இவள்.

செய்ய நினைத்ததை செய்து முடித்து நிமிர்ந்த நொடிதான் இவள் புற நிலையை உணர்ந்தவன்…சிறிதளவு மன்னிப்பும்…..பெரிதளவு காதலுமாய் பார்க்க…..

அவன் பார்வையை பார்க்கமாட்டாமல் சிறிதாய் திரும்பிக் கொண்டாள் இவள். கண்களுக்கு கிடைத்த சிவந்த கன்னத்தில் இதழ் பதிக்க வந்த ஆசையை தற்காலிகமாக தள்ளிப் போட்டான் அவன்.

அடுத்து உடனடியாக ரிஷப்ஷன். அதற்காய் இவள் கிளம்பவென இவள் கையில் தரப்படுகிறது அந்த காப்பர் சல்பேட் ப்ளூ சில்க் லெஹங்கா, சோளி….

அதில் மேல் புறமாக லைட் நிறத்தில் பரவி இருந்த நெட்டின் காரணமாக இவளுக்கு பிடித்த லைட் ப்ளூ ஷேடில் தெரிகிறது அது….நெட்டில் அங்கங்கு வெள்ளைக்கல் பதிகப்பட்ட தங்க நிற சர்தோஸி வேலைப்பாடுமான கையலக மயில்கள்….

சர்வ நிச்சயமாக மனோகரிக்கு புரிகிறது இந்த உடை நகைகளை நித்யாவுடன் கலந்தாலோசித்து தான் மித்ரன் வாங்கி இருக்கிறான் என. அவன் லேப்டாபில் அன்று பார்த்துக் கொண்டிருந்தது நித்யா அனுப்பிய போட்டாக்களாய் இருக்கும்….

மனோவுக்கு இதிலெல்லாம் பெரிய ஈடுபாடு இல்லை எனினும்…. இந்த நிறங்கள் அவளுக்கு பிடிக்கும் என்பது நித்யாவுக்கு தெரியும்….

FB சேட்டில்  “இந்த கலர்ஃஸ்லாம் உனக்கு பிடிக்கும்னா… இப்படில்லாம் செய்தா உனக்கு நல்லா இருக்கும் மனோ” என அவ்வப்போது நித்யா சொல்லி இருக்கிறாள்…..

அதில் சிலவற்றிற்கு இவள் “ஆமா இது நல்லா இருக்குது நித்து….” எனவும் சிலதை “இதுவா நல்லாருக்குன்னு சொல்ற மங்குனி அமைச்சரே” ன்னும் கமென்ட் செய்திருக்கிறாள்….

அதில் இவள் நல்லா இருக்குதுன்னு ஒத்துக் கொண்ட விஷயங்கள் மட்டும் இன்னைக்கு இவளுக்காக வாங்கப்பட்டிருக்கின்றன…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.