(Reading time: 18 - 35 minutes)

ப்ப எனக்கு 10 வயசு…..இதெல்லாம் அப்ப புரியலை…பின்னால நான் புரிஞ்சுகிட்டது இது….. எனக்காக அப்பா பணம் அனுப்பிகிட்டு இருந்திருக்காங்கதான்…… என்னால அவங்களுக்கு பினான்ஸியல் இஷ்யூலாம் எதுவும் இல்லை…..ஆனா அவங்களுக்கு என்ன இருந்தாலும் எதிர்காலத்துல என் ஸ்டேடஸ் வேற…..அவங்க குழந்தைங்க நிலை வேறன்னு தோணிட்டு…. அப்டி அவங்க பிள்ளைங்க என்னைவிட ஃபினான்ஸியலி கீழ இருப்பாங்கன்றதை அவங்களால ஏத்துக்க முடியலை…

சோ நான் என்ன செய்தாலும் சொன்னாலும் எதுவும் செய்யலைனாலும் எல்லாமே அவங்களைப் பொறுத்தவரைக்கும் தப்புதான்…..எல்லாத்துக்கும் பனிஷ்மென்ட் உண்டு…..அங்க குழந்தைகள ஈசியா அடிக்க முடியாது…..அது இல்லீகல்…..சோ பனிஷ்மென்ட்ன்ற பேர்ல நான் பெரும்பாலான நேரம்  எனக்கு சாப்பாடு கட்……

இதை என் க்ளாஸ் ஃப்ரெண்ட் ஒரு பையன் ஃபிலிப்னு இருந்தான்…..அவன்ட்ட சொல்லிட்டே இருப்பேன் அப்பப்ப…..ஒரு ஸ்டேஜ்ல அவன் இதை அவனோட பேரெண்ட்ஸ்ட்ட சொல்ல….அவங்க சைல்ட் அப்யூஸ்னு என் பெரியப்பா பெரியம்மா மேல கம்ப்ளெய்ண்ட் லாஞ்ச் செய்துட்டாங்க……அங்க இதை ரொம்ப சீரியஸ் இஷ்யூவா எடுப்பாங்க….

போலீஸ் என்கொயரி பெரியப்பா பெரியம்மா மேல…என்னை கூப்பிட்டு கேட்டாங்களா…..நான் எனக்கு தெரிஞ்சதை சொல்லிட்டேன்…..அப்றம் அது இஷ்யூவாகி அப்பாலாம் உள்ள வந்து எப்டியோ சமாளிச்சாங்க…..

பெரியம்மாவும் பெரியப்பாவும் அவன் ரீசண்ட்லி ரொம்ப வயலண்டா ரூடா பிகேவ் பண்றான் லிகர் சாப்டுறான்…..பேட் கம்பெனி……நாங்க டிசிப்ளின் பண்ணதான் ட்ரைப் பண்ணோம்…..பட் அவன் அதை இப்டி கம்ளெயின்ட் செய்துட்டான்ற மாதிரி அம்மாட்ட ஒரே அழுகை….

இந்த விஷயத்தில் நேச்சுரலி அம்மா அவங்க அக்காவை நம்பினாங்க…..அப்பாவுக்கு யாரையும் முழுசா நம்ப முடியாத நிலை….பெரியம்மா என்ட்ட எப்டி பாசாமா இருந்தாங்கன்னு அப்பா முன்ன பார்த்திருக்காங்க…..அதனால சட்டுன்னு அவங்களை முழுசா சந்தேகப் படவும் முடியலை….என்னை விட்டுக் கொடுக்கவும் முடியலை…

அப்பா என்னை இன்டியா கூப்டுட்டு போயிடுறேன்னு கேட்றுக்காங்க…..

பெரியம்மா வீட்டுக்கு ஈகோ ப்ராப்ளம் ஆகிட்டு….எங்களை நம்பலையா நீங்க…. அவனை நாங்க அப்டி செய்வமான்னு அவங்க ஒரே அழுகை….

அம்மாவோ என் அக்காவை எப்டி சந்தேகப்படுவீங்கன்ற மாதிரி சண்டை…..

அதுல நான் அகடமிக் இயர்ல பாதில இருந்தேன்…..சோ அந்த இயர் முடியுற வரைக்கும் நான் அங்க இருக்கட்டும்னு அரை மனசா முடிவு செய்துறுக்காங்க அப்பா….

அடுத்து அடிக்கடி அப்பா என்னை பார்க்கவும் வர ஆரம்பிச்சாங்க….. இதுல விஷயம் என்னனா அதுக்கு பிறகு பெரியம்மா வீட்ல எல்லோரும் என்னை நல்லா ட்ரீட் பண்ணாங்க…..பட் அதே நேரம் எனக்கு தெரியாம என் அம்மாட்ட எப்ப பார்த்தாலும் என்னைப் பத்தி ரொம்ப மோசமா சொல்லிட்டே இருந்துறுக்காங்க……

ஜஸ்ட் அவங்க பக்கம் தப்பு இல்லைனு அம்மா நினைக்கனும்றதுதான் நோக்கம் பெருசா வேற எதுவும் இல்லை….

சோ என் அம்மாவுக்கு ஏற்கனவே இவனாலதான் நமக்கு ப்ராப்ளம் அப்டின்ற நிலையில இருந்த நான்…..இவன் ரொம்ப மோசம் அப்டின்ற நிலமைக்கும் போய்ட்டேன்…..

அந்த வருஷம் ஸ்டடீஸ் முடியவும் அப்பா என்னை ஒரு ரெசிடென்ஷியல்  ஸ்போர்ட்ஸ் ஸ்கூல்ல சேர்த்து விட்டுடாங்க….. அங்கதான் மதிபா எனக்கு பழக்கம்……”

Episode # 13

Episode # 15

தொடரும்!

{kunena_discuss:928}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.