(Reading time: 18 - 35 minutes)

ப்படியானால் ஒன்றொன்றிலும் இவளுக்கு என்ன பிடிக்கும் என மித்ரன் ரொம்பவே பார்த்து பார்த்து தான் செய்திருக்கிறான்….. நித்யாவிற்கு விசா கிடைக்க ஏற்பாடு செய்ததிலும் கூட அவன் கை இருக்கலமோ?….

நித்யா மனோவுக்கு FB இல் தான் அறிமுகம் என்றாலும் இது ஒரு பெர்ஃபெக்ட் நட்பிலக்கணம். நித்யாவின் திருமணத்தில் மனோ சென்று கலந்து கொண்ட போது சந்தித்ததை அடுத்து இப்போதுதான் தோழிகள் சந்திக்கிறார்கள்…….ஆனால் இருவரது தினசரி நடபடிகள் இந்த இருவரைத்தாண்டி இறைவனுக்கு மட்டுமே அதிகமாக தெரிந்திருக்க வாய்ப்பு என்ற அளவு அன்னியோன்யம்.

மித்ரனுடனான ஆரம்ப நாள்கள் டக் ஆஃப் வாரை மனோ நித்யாவுடன் குறிப்பிட்டு இருக்கிறாள்….. அடுத்து அவன் பெண் கேட்ட அன்று இரவு இவள் அவனுக்கு சம்மதம் சொல்லலாம் என முடிவு எடுத்ததை சொல்லி இருக்கிறாள்…..அடுத்து நித்யாவுடன் பேசும் வாய்ப்பு மும்பையிலிருந்து திரும்பும் நாள் வரை இவளுக்கு அமையவில்லை….

இதில் இந்த மித்ரன் எப்படி நித்யாவை கண்டு பிடிச்சு கான்டாக்ட் செய்தான்? நேத்து நிச்சயம் முடிய ரொம்ப லேட் ஆகிட…..நித்யாவோட குட்டி பையன் அதுக்கு மேல அம்மாவைவிட்டுட்டு இருக்க மாட்டேன் என அழ….நித்யாவுடன் எதையும் பேசும் சூழல் அமையவில்லை…..

இன்னைக்கு எப்படியும் கேட்கனும்…முடிவு செய்து கொண்டாள் மனோ.

ஆனால் எப்படிப் பார்த்தாலும் மித்ரன் ஒவ்வொரு விஷயத்திலும் இவளது மனதுக்கு எது பிடிக்கும் என கண்டிப்பாக ரொம்பவே யோசித்திருக்கிறான்….. யோசிச்சுப் பார்க்கிறப்ப….இவளோட அம்மா அப்பா அகதன் இப்டி ஒவ்வொருத்தருக்கும் எது சந்தோஷம் தரும்…..எது நிம்மதி தரும்னு கூட யோசித்திருக்கான்னு புரியுது…..

அவசர மேரேஜ்….அதுக்கு எதுக்கு இத்தனை ஏற்பாடாம்? நிச்சயமாக இது அம்மா அப்பா ஆசைக்காகதான்….. என்ன ப்ரச்சனைக்காகவோ, ஆனா அப்பா ட்ராமா போட ஒத்துகிடுறாங்கன்றப்ப…..சூழ்நிலை எவ்ளவு ஆபத்தா இருந்திருக்கும்னும் அவங்களுக்கு புரிஞ்சிருக்கும்…..அப்படின்றப்ப அன்னைக்கே சிம்ப்ளா கல்யாணம்னா கூட ஏத்துகிட்டுதான் ஆகனும்னு நினைக்கிற குணம் தான் அப்பாக்கு…..

ஆனால் அம்மாவுக்கு ஏதோ ப்ரச்சனைனு புரிஞ்சு போயிடும்…..அவங்களுக்கு கஷ்டமா இருக்கும்…அதோட இவளோட கல்யாணத்தை அழகும் திருப்தியுமாய் செய்து பார்க்க இவள் வீட்டில் எல்லோருக்கும் ஆசை உண்டு….

இது எல்லாத்தையும் யோசித்து, அத்தனை பேரின் உணர்வுகளையும் மதித்துதான் மித்ரன் காய் நகர்த்தி இருக்கிறான்…..அதிலும் அகி இங்க இருக்க முடியாதுன்றதால அப்பா அம்மா மட்டுமே தனியா நின்னு அரேஞ்ச்மென்ட்டை கவனிக்க வேண்டி இருந்திருக்கும்……ஆக அதிலும் எவ்வளவு முடியுமோ அவ்ளவு வேலை இவன் செய்திருக்கிறான்…..

 ‘உன் வழியாதான் மாப்ள எனக்கு சொந்தம்’  அகதன் சொன்னது இப்போது இவளுக்கு ஞாபகம் வருகிறது….

அப்படித்தானே மித்ரனுக்கும் இவளது குடும்பம்……இவள் வழியாகதானே அவர்கள்……இவள் மீதுள்ள காதலைத்தானே அவன் இப்படிக் காட்டுவதும்….

இது இவளது உணர்வை மதிப்பதென்பது ஆகாதா?

நித்யாவை தேடிப் பிடித்திருக்கிறான்……ஆக இவளது அடி முடிவரை அனைத்தும் அவனுக்கு தெரியும் என்பதோடு…..இவளது விருப்பு வெறுப்பு எல்லையை மதிக்கிறான்….என்றுதானே அர்த்தம்…

அதிலும் திருமண விஷயத்தில் ஒவ்வொன்றிலும் இவளுக்கு எது பிடிக்கும் எனப் பார்த்து பார்த்து…..

இதில் இவள் உணர்வை அவன் மதிக்கவில்லை என எப்படி நினைப்பதாம்…?

இவளை கிட்நாப் செய்வது போல் அவன் போட்ட ட்ராமாவில் கூட அகதனை உள்ளே கொண்டுவரும் அவசியம் என்ன? இவளை எதை சொல்லி மிரட்டுவதுபோலவும் தான் செட் செய்திருக்கலாம் அல்லவா? அகதன் திட்டத்தில் உள்ளே இருக்கிறான் என்பதே இவளது நிம்மதிக்காக தானே….

ஆக அத்தனை வகையிலும் இவள் உணர்வுகளுக்கு இதம் சேர்க்க முனைந்திருக்கிறான்…. ஆனாலும் இவளிடம் எதையும் சொல்லாமல் கோபத்தையும் கிளறிவிட்டிறுக்கிறான்…. மேடையில் அருகில் நின்றிருந்தவனை கண்களால் கவனித்தாள்…அத்தனை மகிழ்ச்சியாய் அவன்…வாழ்த்த வந்த யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான்….இவன என்ன செய்ய????!!!

ரு வழியாய் திருமண வைபவமும் அதை சார்ந்த அனைத்தும் முடிய….நித்யாவுடன் நின்று பொறுமையாய் எதையும் பேச கூட வகையின்றி நேரமும் சூழலும் அமைய…. இதோ இப்போது மித்ரனின் வீட்டில் இவள்…

அவன் வீடு இவள் யோசித்தது போல் இன்டிபென்டன்ட் ஹவுஸ் கூட கிடையாது…… ஒரு 4பெட் ரூம் அபார்ட்மென்ட்…. வசதிக்கு ஒன்றும் குறைச்சலில்லைதான் என்றாலும் மும்பையில் பார்த்த அவன் வீட்டிற்கும் இதற்கும் எந்த பொருத்தமும் இல்லை….எத்தனை முரண் இவன் வாழ்க்கையில்…?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.