(Reading time: 36 - 72 minutes)

13. மனம் கொய்தாய் மனோஹரி - அன்னா ஸ்வீட்டி

Manam koithaai Manohari

கதன் வந்த அன்று மதியம் வரை படுக்கையிலே படுத்து கிடந்து ஒவ்வொன்றையாக யோசித்துக் கொண்டிருந்தாள் மனோ.  நல்ல அண்ணனா ஃப்ளாஸ்க்ல டீயும்….பக்கத்துல தோசையும் சட்னியும் வச்சுட்டுப் போயிருந்தானே அகி…. டீய மட்டும் மறக்காம குடிச்சுட்டு  படுக்கையில் தஞ்சமாகி இருந்தாள்…..இப்போ கொஞ்சம் பசிக்கிற மாதிரி இருக்குது….

காலையில அகி சாப்ட்றுப்பான்….இவளுக்கு சாப்பாடெல்லாம் எடுத்து வச்சுறுக்கானே… இப்ப நான் கோபத்துல இருக்கேன்னு சாப்டாம இருப்பானோ? பொதுவா எதையும் சாப்பாட்ல காமிக்க மாட்டான் அகி….ஆனா இவள விட்டுட்டு அவன் மட்டும் சாப்டுபானாங்கிறது சந்தேகம்….. அதுவும் இங்க சர்வெண்ட்ஸ்ட்ட போய் சாப்பாடு கேட்டு அவனா சாப்டனும்….. என்ன இருந்தாலும் இது மித்ரன் வீடு….. மித்ரன் இங்க இல்லைன்ற பட்சத்தில் இப்ப இவதான் அகிய கவனிக்கனும்….

எழுந்து மெல்ல அந்த பால்கனி கதவை திறந்து பார்த்தாள்…..பகல் நேர வெப்பம் சுர் என முகம் தொட்டாலும் வெளிப்புற தோற்றம் மனம் அள்ளத்தான் செய்கிறது…. பகலில் இப்பொழுதுதான் இந்த கதவை திறந்து பார்க்கிறாள்….அன்று நைட் மித்ரனை அங்கு பார்த்ததிலிருந்து இந்த கதவை அவள் திறப்பதே இல்லை…...தூரத்தில் தெரியும் கடலை தவிர எதுவும் இல்லை இங்கு…. இவர்கள் வீட்டின் இந்த புறம் ஏராளமான காலி இடம்…..அதை சுற்றி வளைத்து ஓடும் கம்பவ்ண்ட் வால்….அதில் பூட்டி இருக்கும் ஒரு பெரிய கேட்…. பார்வையில் கிடைக்கும் திறந்த வானமும்….காலி இடமும் பகல் நேர வெயிலும்…..ஏதோ ஒரு வகையில் ஒரு விடுதலையை மனதில் உணரச் செய்கிறதுதான்…..

 இன்னும் இந்த காலி இடத்தில் ரெண்டு மூனு தலைகள் அங்கயும் இங்கயுமா…… ‘போலீஸ்காரர் செக்யூரிட்டிலாம் பலமா வச்சுட்டுத்தான் கிளம்பி போயிருக்கார் போல…..’ மெல்ல போய் அந்த பால்கனி க்ரிலை பிடித்தாள்….சூடு கொதித்தது….கையை சட்டென எடுத்துக் கொண்டாள்… நைட் கடல் காற்றில் இந்த இடம் குளிர்ந்து இருந்தாலும்…….அவள் உள்ளே ஏசி ரூமில் மெத்தையில் படுத்து தூங்கி இருப்பாள்…….இங்க அவன் உட்கார்ந்து இருந்திருக்கனும்….. எண்ணம் மனதில் ஓட……தன்னவன் மேல் காதல் உருகத்தான் செய்கிறது…

இந்த வீட்டை பார்த்திருக்கிறாள்…..அத்தனை விதமான ஆடம்பர வசதிகள்….sophisticated….luxurious…. இது மாதிரி சூழல்ல வளந்துட்டு அவனுக்கு இப்டி இந்த பால்கனில படுத்திருக்கனும்னா கஷ்டமாதான் இருக்கும்….. ஒரு வகையில அவன் ப்ரொஃபஷனே tough ஆன ஒன்னுதான்…..இவன் ஏன் இப்டி ஒரு வீட்ல இருந்து அப்டி ஒரு கேரியரை செலக்ட் செய்தான்?

ஆமா இன்னும் கடத்திட்டு வந்ததுக்கே காரணம் சொல்லலை…..இதுல இவன் இதெல்லாம் என்னைக்கு இவட்ட பேச…?

முதல்ல அகிய கவனிப்போம் அடுத்ததா…..இவள் எண்ணிக் கொண்டிருக்கும்போதே….அடுத்த ரூமிலிருந்து அகதன் பால்கனிக்குள் நுழைந்தான். கையில் மூடியிடப் பட்ட தட்டு….

இவளைப் பார்க்கவும் “சாப்டு மகி…. உனக்கு பிடிச்ச வெஜிடபிள் பிரியாணி…” என்றவன் பார்வையில் இன்னும் இவள் கோபத்திலிருக்கிறாளா என்ற ஆராய்தல்.

‘கோபம்லாம் ஒன்னும் போகலை…’ என்பதை தன் முகபாவத்தில் காண்பித்தவள் ‘அதுக்காக நீ சாப்டாம இருந்தா பிரவாயில்லன்னு என்னால நினைக்க முடியாது’ என நினைத்தபடி அவன் கையிலிருந்த தட்டை சென்று வாங்கிக் கொண்டு, அகதனை தாண்டி, அவன் வெளிவந்த அந்த அடுத்த அறைக்குள் சென்றாள்.

அவளைப் பின் தொடர்ந்தான் அகதன்….”மகி நீ சாப்டாம நான் மட்டும் எப்டி சாப்ட…பசிக்குது மகி…” தங்கையை எது கரைக்கும் என அண்ணனுக்கும் தெரியும் தானே….எங்க சாப்பாடை திருப்பி கொண்டு போய் வைக்கப் போகிறாளோ என்ற பயம் அவனுக்கு…

இவளுக்கோ அந்த அறைக்குள் நுழையவும் இன்னமுமாய் அங்கு மெல்லியதாய் அவளவன் வாசம் இருப்பதாய் ஒரு உணர்வு….. இதயத்தில் விலுக்கென பூக்கிறது விலாசமற்ற ஒரு சந்தோஷம்……சுக துள்ளல்… சுற்றிலும் கண்களை ஓட்டினாள்….அவன் தங்கி இருந்த எந்த அடையாளமும் அங்கு இல்லை….

‘அவன் பெர்ஃப்யூம் எனக்கு பிடிச்சிருக்குன்னு அவன்ட்ட ஒரு நாள் சொல்லனும்…’

‘ஆமா….நீ மட்டும் நினைக்கிற எல்லாத்தையும் அவன்ட்ட போய் சொல்லனும்னு ப்ளான் போடு…..அவன் முக்கியமானத கூட உன்ட்ட சொல்லாம உன்னை முட்டாளாக்கட்டும்…’ மீண்டும் மனம் அங்கேயே போய் நின்றது.

போய் அங்கிருந்த டேபிளில் தன் கையிலிருந்த தட்டை வைத்தவள்…. அங்கிருந்த அடுத்த தட்டை அதற்கு பக்கத்தில் வைத்து அதில் உணவை பரிமாற தொடங்கினாள்….. ஒரு சேரை எதிரில் எடுத்துப் போட்டு…மறு புறம் இவள் இன்னொரு சேரில் சென்று உட்கார்ந்தாள்…. திரும்பி அகதனை ஒரு பார்வை…

அண்ணன் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் புன்னகை….”தேங்க்ஸ் மகி குட்டி…” அவசர அவசரமாக எதிரில் வந்து உட்கார்ந்தான்…..

“கோபம் போய்ட்டா மகி….? அங்க என்ன நடந்ததுன்னா…..” அவன் ஆரம்பிக்க இரு காதுகளையும் கையால் பொத்திக் கொண்டாள் ஒரு தெள்ளத் தெளிவான முறைப்போடு…

அதே நேரம் அகதனின் மொபைல் சிணுங்க….அவன் தவிப்பை காட்டிய முகத்தோடு சென்று அதை எடுத்தான்…. அழைத்தது மித்ரன்…. தன் காதுகளை விடுதலை செய்து பக்காவாக கான்வர்ஷேஷனை கவனிக்க ஆயத்தமானாள் மனோ. அவளுக்கும் தான் என்ன நடக்குதுன்னு தெரியனும்…..அதோட இந்த மித்ரன் எங்க போனான்னு தெரிஞ்சாகனுமே….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.