(Reading time: 36 - 72 minutes)

ந்த டயலாக் போய்கொண்டிருந்த போது எட்டிப் பார்த்திருப்பாராய் இருக்கும் அவர்.

“ஆமாம்மா…..சொல்லனும்னு நினைச்சேன்……வீடெல்லாம் பக்காவா இருக்கு….கிட்சன் வரைக்கும் நீட்டா வச்சுறுக்கார் மாப்ள…..என்ன நம்ம டைப் சமையல் பண்ணனும்னா அதுக்கான மாதிரி பாத்ரம்…கிரைண்டர் இப்டி எதுவும் இல்லை….யுஎஸ் ஸ்டைல்ல இருக்கு எல்லாம்…..அதான் நம்ம சமையல்க்கு தேவையானதெல்லாம் ஒரு செட் வாங்கிடலாம் மகிக்குன்னு நினச்சேன்…” அகதன் அம்மாவைப் பார்த்து சொல்ல

“ஆமால…வீடுன்னா நம்ம வீட்ல கிட்சென் இருக்க மாதிரி அங்கயும் இருக்கும்ல…..இப்ப மாதிரி பசிக்குறப்ப உள்ள போய் என்ன இருக்குன்னு பார்த்து எடுத்து சாப்ட….அதையெல்லாம் செய்து வைக்க அம்மா அங்க இருக்க மாட்டாங்களே……நீ எதுக்கும் உன் மாப்ளைய நம்ம அம்மாட்ட கொஞ்சம் குக்கிங் ட்ரெய்னிங் எடுத்துக்க சொல்லேன்…… எனக்கு அம்மா சமையல்தான் பிடிக்கும்….” மனோவிடம் இருந்து பிறந்தது இந்த பதில்… கிண்டலுக்குத்தான்….

“அடி வாங்கப் போற கழுத….அவர் என்ட்ட சமையல் பழகி உனக்கு செஞ்சு தரனுமா…?” இவளுக்கு முதல் வாய் சாப்பாடை ஊட்டத் தொடங்கியபடி அதற்கு அம்மா இப்படி ஆரம்பிக்க…

“இது மட்டுமாமா இன்னும் எத்தனை வகையில உன் மாப்ள நம்ம மகிட்ட மாட்டிட்டு முழிக்கப் போறார் தெரியுமா…?” அதற்கு அடுத்த லிஸ்டை அகதன் சொல்ல தொடங்க….கல கலவென கழிந்தது இரவு உணவு….லேசாகி இருந்தது அனைவர் மனமும்…..

வியாழன் இரவு ஏழு மணி…. ஒருவகை இளம் பச்சை நிற  புடவையில் ஒரு அடி உயரம் அடர் ஜரிகை கொடிகளாய் இளம் நீல வர்ண பார்டரும்,  மீதியில் ஆங்காங்கு கையகல வட்டவடிவ ஜரிகை வேலைப் பாடும் கொண்ட காஞ்சிப் பட்டில் ஜாவு (jadau)  பென்டட் தாங்கிய மூன்று சர ஆரம் அணிந்து அதற்கு ஏற்ற ஒற்றை நெற்றிச்சுட்டியும்….பின்னிய கூந்தலில் தலை கொள்ளா மல்லிச் சரமுமாய் மனோகரி அந்த ரிசார்ட் ஹாலின் மணப் பெண் அறையில் காத்திருந்த போது…. அவளை அழைத்துப் போக வந்தது இன்பா.

பாசிப்பயறு நிற புடவையில் இடையே வரிவரியாக குங்கும நிறம் ஓட அதே குங்கும நிறமே பார்டராய் வர இன்பாவும் பட்டுடுத்தி, அன்று மித்ரன் இரண்டு செட்டாக வாங்கிய அந்த நெக்லஸில் ஒன்றை அணிந்து….. அன்று இவள் மும்பையில் பார்த்தது இவளைத்தானா என நினைக்கும் வண்ணம் வந்திருந்தாளெனில்…. விழா மேடையில் இவளை அமரவைக்கவும் மனதின் மிக அருகிலும் விழியின் சற்று தொலைவிலும்  இருந்தவன் இவள் ஓரக் கண்ணில் படுகிறான்….

நிச்சயமாய் இப்படி ஒரு நிச்சய கோலத்தை மித்ரனுக்கு எதிர் பார்க்கவில்லை இவள். பட்டு வேஷ்டி க்ரீம் கலருக்கும் பீச்சுக்கும் இடைப்பட்ட நிற ஷர்ட்…அத்தனை உற்சாகமாய்….பூரிப்பாய்….ஓ இததான் கல்யாண களைனு சொல்லுவாங்களா……அப்படி ஒரு களையாய்… அவன் உயரத்திற்கும் உடல் கட்டிற்கும்…. ஏற்கனவே ஏறத்தாழ ஐந்து நாளாய் பார்வையில் படாதவனைவிட்டு பசித்த பார்வையை உருவிக் கொள்ள படு கஷ்டமாக இருக்கிறது இவளுக்கு…. இருந்தாலும் எப்டி இப்டி பார்த்துகிட்டே இருக்கவாம்…..மேடையில இருக்கிறாளே…..

 அவன் இவளைப் போல் இல்லை ஓரக் கண்ணில் பார்க்கும் ஒளிவு மறைவு வேலையெல்லாம் செய்யவில்லை….நேருக்கு நேராக பார்த்துக் கொண்டிருந்தான் இவளை. இவள் மேடையில் இருக்கிறாள்…அவன் கீழே நிற்கிறான் பார்க்கலாம் தப்பில்லை….

இவள் அருகில் இவளுக்கு தோழியாக நின்ற இவள் தோழி நித்யாவோ….”நினச்சேன் இப்டிதான் அண்ணாவை சைட் அடிப்பன்னு…..இருந்தாலும் வந்தவுடனே வேற எங்கயும் பார்க்காம அவரையே அரெஸ்டாகிப் பார்ப்பன்னு எதிர் பார்க்கலை…” என்றாள்…

“வாவ்….நித்து” என துள்ள வேண்டும் போல இருந்தது இவளுக்கு…. நித்யாவுக்கு விசா கடைசி நிமிஷம் வரை தகிடதோமிட்டுக் கொண்டிருந்தது…..நேற்றுவரை வருவாள் என்று இருந்த நம்பிக்கை…இன்று வர மாட்டாள் என தேற்றும் நிலையை கொடுத்திருந்தது. இதில் இப்படி இந்த நேரத்தில் ஆன் டைமில் இவளோடு அவள்…

“ஹேய் கத்தி வைக்காத ஸ்டேஜ்ல இருந்துட்டு….. அப்றமா நம்ம கதைய பேசுவோம்….” நித்யா சொன்ன பின்புதான் இவள் ஸ்டேஜில் இருப்பது முழு உணர்வுக்கு புரிகிறது… அதற்குள் இவள் அருகில் வந்தது இன்பாவும் களஞ்சியமும்…..அதான் மித்ரனின் அம்மா…. இவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே இருவருமாய் கொண்டு வந்திருந்த தாம்பளத்தை இவள் கையில் கொடுக்க எழுந்து வாங்கிக் கொண்டாள் இவள்.

“அடுத்து இவள் தலையில் கைவைத்து நல்லா இருக்கனுமா நீ….எதையும் மனசுல வச்சுக்காத… நல்லா இருங்க ரெண்டு பேரும்” என்று வாழ்த்தினார் களஞ்சியம். இப்பவே ப்ளெஸ் பண்ணா என்ன அர்த்தமாம்? கிளம்புறாங்கன்னு தானே அர்த்தம்…

“ஆன்டி ஃபங்ஷன் முடியுற வரைக்கும் கூட இருந்து எங்க ரெண்டு பேரையும் சேர்த்து ப்ளெஸ் பண்ணனும் நீங்க” மெல்லிய குரலில் என்றாலும் சற்று அழுத்தமாய் சொன்னாள் மனோ தன் வருங்கால மாமியாரிடம்.

சின்னதாய் புன்னகை அவர் முகத்தில்…இவள் கன்னத்தை மெல்ல தட்டியவர்….”அவனும் சந்தோஷமா இருக்கனும்னுதான்மா நான் நினைக்கிறேன்…..அதான் கிளம்பலாம்னு பார்க்கேன்…இன்னொரு நாள் பேசுவோம் இதெல்லாம்….தப்பா எடுத்துக்காதமா…” என்றபடி கிளம்புவதிலேயே இருந்தார் அவர்.

“அதெல்லாம் நீங்க பாதில போனா  அவங்க என்ன நினைக்கிறாங்களோ பட் நான் ஃபீல் பண்ணுவேன்….”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.