(Reading time: 36 - 72 minutes)

ண்ணால கண்ட கடவுளையே கூட சிச்சுவேஷன் அகெய்ன்ஸ்ட்டா இருந்தா சந்தேகப்படுறது மனித இயல்பு…..இதில மனுஷங்களை சந்தேகப்படுறதுல என்ன இருக்கு….மித்ரன் இதெல்லாம் தப்பா எடுத்துக்க மாட்டாங்க….புரிஞ்சுப்பாங்க…..என்ன இருந்தாலும் நீங்க அவங்களோட குடும்பம்….நீங்க அவங்களை நம்பினாலும் நம்பாட்டாலும் உங்கட்ட அவங்க முடிஞ்சவரை நல்லாதான் இருப்பாங்க….இப்ப அதெல்லாம் போட்டு குழப்பிக்காதீங்க “ என்று முடித்தாள்.

‘இதன் மூலம் விஜிலாவுக்கு கன்வே ஆன விஷயம்….யேசப்பாவோட சீஷர்கள் அவரை சந்தேகப் பட்டது சரின்னா……நீங்க மித்ரனை சந்தேகப்படுறதும் சரி…’ இதை கேட்டிருந்தது விஜிலா மட்டுமில்லை வேற யாருன்னு உங்களுக்கே தெரியும்…..

அப்பொழுதுதான் அகதனுடன் மனோ வீட்டிற்கு வந்திருந்த மித்ரன், வாசலில் நின்று ஷூவை கழற்றிக் கொண்டிருக்க, காதில் விழுகிறது இது……

அவன் அடி இதயம் வரை ஆட்டிப் பார்க்கிறது, பாய்ந்து பரவுகிறது இனிமை நதி…..இவ்ளவு நம்பிக்கை இருக்கவட்ட, இப்ப போய் விளக்கம் சொல்றேன்னு, பேச வர மாட்டேன்னு வம்படியா நிக்றவளை, வலுக்கட்டயமா இழுத்து வச்சி விளக்கம் சொல்லி ….அவளோட ஊடல் மூடை கிளறி சண்டை பிடிக்க வேண்டாம்….சந்தோஷமா மேரேஜ் முடியட்டும்….அடுத்து நிதானமா சொல்லிக்கலாம்…. என்ற முடிவுக்கு வந்தான் அவன்.

ஆக அன்றும் அதன் பின்னும் அவன் அவளது பார்வைக்குள் வரவே இல்லை…..

ன்று இரவு மனோ தன் மொபைலில் FB குடைந்து கொண்டிருந்தாள். இடம் தனது படுக்கை அறை. . மெத்தையில் குப்புற படுத்தபடி கால்களை ஆட்டிக் கொண்டு ,மொபைலில் மனம் கரம் சிரம் நுழைத்திருந்தவள் காலில் சிலீர் உணர்வு….

அனிச்சையாய் உருவ வேண்டிய காலை நடப்பது என்ன என புரிந்ததால் அவசரமாய் உருவாமல்….. “என்னமா இன்னைக்கே மருதாணி வைக்கனுமா….நான் நாளைக்கு டே டைம்ல வைக்கலாம்னு நினைச்சேன்…..சொல்லியிருந்தா நானே இலை பறிச்சிறுப்பேன்ல….. ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்கம்மா…நான் எழுந்து உட்காந்துகிறேன்…..”

இவள் எழுந்து உட்கார்ந்த போது கண்ணில் படுவது அகதன்…… அவன் இதையெல்லாம் இவளுக்கு செய்தது இல்லை என்று இல்லை…..ஸ்கூலிங் பண்ற காலம் வரைக்கும் உண்டுதான்….. மருதாணி வைக்கிறேன் பேர்வழி என இவளை சீண்டி…மருதாணி உடை தரை என கொட்டி அம்மாட்ட ரெண்டு பேருமா ஜோரா உதை வாங்கின காலமெல்லாம் உண்டுதான்….

‘போடா நீ பண்ண வேலைக்கு அம்மா என்னையும் சேர்த்து அடிச்சுட்டாங்க……இனி எப்பவாவது மருதாணிய தொடு அப்றம் இருக்கு…’என அப்போதைக்கு அண்ணன்ட்ட சிலுப்பிக் கொண்டாலும்

அடுத்த முறை மறக்காம….”நீதான் வச்சுவிடு அகி……நீ தான் கரெக்டா ஷேப்பா வைக்கிற…..” என்றபடி அவனிடம் போய்தான் நிற்பாள்.

அவனும் ‘அப்ப என்னமோ சபதம்லாம் போட்ட….இப்ப என்ன என்ட்ட வந்து நிக்க ?’ என்றெல்லாம் கேட்காமல்….”மருதாணிதான….வா வா…..இன்னைக்கு ஒரு வழி பண்ணிடுவோம்….” என்றபடி தான் வருவான்….

என்னமோ மனோவுக்கு எப்போதும்  மெகந்தியை விட இப்படி இலை அரைத்து விரல் நகங்களில் குப்பியிட்டு….உள்ளங்கையில் ஐந்து வட்டம் வைக்கும் முறைதான் எப்போதும் பிடிக்கும்…..காலை சுற்றி பாதத்தில் ஒரு வரி….இதுதான் அவள் மருதாணி வைக்கும் முறை….

காலேஜ் அவள் ஹாஸ்டலில் இருந்து படித்தததால் இவள் விடுமுறையில் வீட்டுக்கு வரும் நேரத்தில்…அகதன் அந்நேரம் வேலைக்கு போக தொடங்கி இருந்ததால்….எப்போதாவது மருதாணி வைத்தாலும் அது அம்மாவின் வேலையாய் மாறிப் போயிற்று…

இன்று அகதனை இப்படிப் பார்க்கவும் ஆயிரம் மலரும் நினைவுகள்….அதோடு ஏன் எதற்கு என்றே புரியாமல் உள்ளம் பொங்கி கண்களில் குளம். அகதனின் கண்களோ அதற்கும் முன்பே அப்படித்தான் இருக்கிறது…

அவன் இவளை நிமிர்ந்து பார்க்கவே இல்லை….தலை குனிந்து காரியமே கண்ணாக செய்து கொண்டிருக்கிறான்….

“நான் உன்ட்ட சொல்லாம மாப்ள கூட சேர்ந்து செய்துட்டேன்தான உனக்கு கோபம் ….? அவரை பேர் சொல்லி கூப்ட எனக்கு எவ்ளவு நேரம் ஆகும்? அவர் என்னைவிட இளையவர்தான? அவரே சொல்லிட்டுதான் இருந்தார்…பேர் சொல்லி கூப்டுங்க அகதன்னு…….ஆனா நான் மாப்ளன்னுதான் கூப்டுவேன்…ஏன் தெரியுமா…உன் வழியாதான் அவர் எனக்கு சொந்தம்….உன் வழியாதான் நான் அவரை பார்ப்பேன்…. அவரை தனிப்பட்ட வகையில எனக்கு பிடிக்கும் தான்….இல்லைனா உன்னைக் கல்யாணம் செய்து கொடுக்க ஒத்துட்டு இருக்கவே மாட்டேன்….ஆனாலும் அவருக்கு நானோ நம்ம வீட்ல எல்லோருமோ என்ன செய்தாலும் என்ன முக்கியதுவம் கொடுத்தாலும் அது எல்லாமே உனக்காகதான்…. உன்வழியா….உன்னையாதான் அவரைப் பார்க்கிறது…..அதனால உனக்கு கொடுக்கிற அதே முக்கியதுவம்…இடம் அக்கறை எல்லாம் அவர் மேலயும் வருது…..உனக்காகன்னு அவர் சொல்லாம நான் அப்டி ஒரு நாடகத்துக்கு ஒத்துட்டு இருப்பனா…? இந்த விஷயத்துல என்னை புரிஞ்சுக்காம போவன்னு நான் எதிர்பார்க்க கூட இல்லை தெரியுமா…..ம்…அந்த காலை காமி…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.