(Reading time: 7 - 13 minutes)

29. நினைத்தாலே  இனிக்கும்... - புவனேஸ்வரி 

ன் நண்பனே என்னை ஏய்த்தாயோ?

ஏன் பாவமாய் வந்து வாய்த்தாய்

உன்போலவே நல்ல நடிகன் ..

ninaithale Inikkum

ஊரெங்கிலும் இல்லை ஒருவன்

சோகப்பாடலை கேட்டுக்கொண்டு தனது இயல்புநிலை தொலைந்து ஜன்னல் வழியே வானத்தை வெறித்து கொண்டிருந்தாள் தீப்தி..எவ்வளவு பெரிய ஏமாற்றம்?எவ்வளவு பெரிய அதிர்ச்சி? மற்றவர்களின் விஷயத்தில் சாதூர்யமாய் செயல்படும் தானே சொந்த வாழ்க்கையில் தோற்று விட்டதை உணர்ந்தாள்..

எது தனது கண்களை மறைத்தது ?அவனது அழகா ? பேச்சா? இல்லை திகட்டாமல் அவன் புகட்டிய அன்பா ? “கடைசியில் நானும் ஏமாந்துவிட்டேன்!!” அடிக்கடிதனக்குள் கூறிக் கொண்டாள்.. அவனுடன் பழகிய நினைவுகள் எல்லாமே வரிசையாய் அணிவகுத்தன…ஒருமுறைக்கு பலமுறை நடந்ததை எல்லாம் நினைவு கூர்ந்து பார்த்தாள் அவள்… அவர்களின் முதல் சந்திப்பு நியாபகத்திற்கு வந்தது.. அவளை கடற்கரைக்கு வரும்படி அழைத்திருந்தான் ப்ரசாந்த்…முதலில் போகவே வேண்டாம் என்று அடம்பிடித்த மூலையை, போய்த்தான் பாரேன் என்று வற்புறுத்தி ஜெயித்தது அவளின் மூளை… ஏதோஒரு உந்துதலில் அங்கு வந்தவள், சிறுவர்களுடன் சிரித்து விளையாடிகொண்டிருந்தவனை  தூரத்தில் இருந்து பார்த்து அப்படியே நின்று விட்டாள்..

“ச்ச…அவசரபட்டு வந்துட்டோமே…நம்ம என்னன்னு நினைப்பான்? இவன் யார்?இவன் கூப்பிட்டதும் நாம ஏன் வந்தோம்?”இப்படி அவளுக்குள் பல கேள்விகள் எழ,இறுதியாய் வந்த வழியாகவேதிரும்பிவிடலாம் என்று நினைத்த நேரம் அவளின் செல்ஃபோன் சிணுங்கியது..

“ஹலோ”

“ அதான் வந்துட்டியேதீப்தி…அப்பறம் ஏன் திரும்பி போற?” என்று கேட்டவன் தீரஜ் ப்ரசாந்தே தான்! “கண்டு கொண்டுவிட்டானே!” என்று உதட்டை கடித்தவள் என்ன சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டேதிரும்ப ,அவளுக்கு மிக அருகில் நேர் எதிரில் நின்றான் ப்ரசாந்த்..

“ எ…..என்ன வேணும் உனக்கு ?”

“ உங்கிட்ட பேசனும்தீப்தி!”

“எங்கிட்ட என்ன பேசனும்”

“ ஜஸ்ட்… உன் நட்பு எனக்கு வேணும்னு வெச்சுக்கோயேன்..”

“என்னை பற்றி என்ன தெரியும் உனக்கு ?நான் எதுக்கு உன்னோடு நட்பு பாராட்டனும் ?”

“உன்னபத்தி ரொம்ப தெரியாது, ஆனா கொஞ்சம் தெரியும்…. நீ தீப்தி,மெடிகல் காலெஜ்ல படிக்கிற,வசதியான வீட்டு பொண்ணு” என்று அவன் தொடரவும்

“வசதியான வீட்டு பொண்ணுன்னு எப்படி சொல்லுற?”என்றாள் அவள்.. இதில் என்ன இருக்கிறது என்பதுபோல அவளை பார்த்து வைத்தான் தீரஜ்..

என்னத்தான் பணத்தால் சலிப்பு அடைந்திருந்தாலும், ஆடம்பரமாய் உடை அணிவதும்,ஒப்பனை செய்து கொள்வதும் தீப்தியின் குணம்தான்.. அவள்
தோற்றத்தில் எப்போதுமே பணக்காரத்தனம் தெரியும்,. அதை அவளே உணரவில்லையோ?

இப்படியே சீண்டலும் கேலியுமாய் தீப்தியை பேச வைத்தான் தீரஜ்..அவளுடன் பேசியது வைத்து ஒன்று மட்டும் அவனுக்கு நன்கு விளங்கியது.. “தீப்தி அன்பினை நாடுகிறாள்…அதே நேரம் வசதியான வாழ்க்கை மீது அவளுக்கு விரக்தி இருக்கிறது”.. அவளை உளமார நேசிக்க தொடங்கியவன்,அதனாலேயே தான் செல்வந்தரின் மகன் என்பதை இப்போதைக்கு கூற வேண்டாம் என்று நினைத்திருந்தான் ..ஆனால்  நடந்தவை அனைத்தும் இப்போது அவனுக்கு பாதகம் ஆகி விட்டதே.. அவன் அவள் மீது காட்டிய அக்கறை எல்லாம் இப்போது தீப்தியின் கண்களுக்கு குறையாய் தெரிந்தது,…பொதுவாகவே ஒருவரும் சந்திக்கும் வேளையில், அவளின் தேவைகள்,அவளின் ஆசைகள் என்று அவளை பற்றிய பேச்சுத்தான் இருக்கும்…நேற்று வரை அதை ரசித்தவள்  இன்று அது தீர்ஜின் திட்டம் என்று எண்ணினாள்..தன்னை பற்றிய விவரங்களை சொல்லகூடாது  என்பதை மனதில் நிறுத்தியே அவன் தீப்தியின் மீது அக்கறை காட்டுவது போல் பேசினான் என்று அவளின் உள்மனம் நம்பியது… இப்படியே கண்ணீர் விட்டு அமர்ந்துவிட்டால் சரியாகிவிடுமா ?இதற்கு உடனேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றெண்ணியவள் அவன் வீட்டிற்கு புறப்பட்டாள்…

சுபத்ராவின் அறையையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான் ப்ரேம்.. அவள் மனம் வைத்தால் இப்பொதும் நிமிர்ந்து பார்த்து அவனிடம் பேசி விடலாம் தான் ..ஆனால் கோபத்தில் இருக்கிறாளே..நாளுக்கு நாள் தான் இங்கு  வந்ததற்கு அவசியமே இல்லை என்று தோன்றியது அவனுக்கு.. என்ன செய்வது அவன் நிலையில்வேறொருவர் இருந்திருந்தால் எப்போதோ அங்கிருந்து சென்றிருப்பார்கள்.. உதவி செய்கிறேன் என்ற அஷோக்கின் அத்தை மகளும் இரண்டு நாடகளிலேயே தனது வீட்டிற்கு ஓடி விட்டாள்…

“ச்ச… பொண்ணுங்கள எந்த காலத்துலயும் நம்பவே முடியாது போல…” என்று பெருமூச்சு விட்டான் அவன்..அவன் விட்ட பெருமூச்சு அவளகி அடைந்ததோ என்னவோ சுபத்ரா சற்று உரக்க, இரும்மிட அடுத்த நிமிடம் கையில் தண்ணீருடன் அவள் அருகில் நின்றான் அவன்.

“ தேங்க்ஸ்… அம்மா வந்து இருப்பாங்க… நீ ஏன் வந்த ?” என்றாள் சுபத்ரா..

“ஏன் என் கையால தண்ணி கூடகுடிக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியா ?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.