(Reading time: 36 - 72 minutes)

ழைப்பை ஏற்றவனிடம் அரை நிமிடம் இயல்பான பேச்சுக்குப் பின்….”மனு எந்திரிச்சாச்சா? இப்பவாவது சாப்டாளா? நான் அவட்ட பேசனுமே….” என தான் அழைத்ததன் நோக்கத்தை வெளியிட்டான் மனோகரியின் மணாளனாக போகிறவன்.

“இப்பதான் சாப்ட உட்கார்ந்தோம் மாப்ள…இதோ அவட்ட கொடுக்கேன்….” தன் தங்கை முகத்தைப் பார்த்தபடியே மொபைலில் பதில் சொன்ன அகதன், இவளிடமாக மொபைலை நீட்டினான்….காதை திறந்து வச்சு கேட்ற பொண்ணு வாய திறந்து பேசும்னு நினச்சுட்டான் போல….

அம்பு அகதன்ட்டயே பேசலையாம்….அதை எய்த மித்ரன்ட்ட பேசுறதாவது….. அகதனை ஒரு முறை முறைத்துவிட்டு ஒன்னும் சொல்லாமல் குனிந்து தன் சாப்பாட்டை கவனிக்க தொடங்கினாள் தங்கை.

“மனோஓ….” அகதனுக்கு கோபம் வந்தால் மட்டுமே இந்த டோனில் வரும் இந்த மனோ…. “இன்னும் 5 டேஸ்ல வெட்டிங் வச்சுகிட்டு இப்ப அவர்ட்ட பேசமாட்டேன்னா என்ன அர்த்தம் எடுக்கனும்? கல்யாணம் செய்றதா இருக்கியா இல்லையா? அங்க எல்லா அரேஞ்ச்மென்ட்ஸும் போய்ட்டு இருக்கு….”

‘ஓ…..பேசாம இருந்தா இப்டி கூட அர்த்தம் ஆகுமா?’ யோசித்த மனோ…..”அதான் கல்யாணத்துக்கு பிறகு எப்டியும் அவங்க கூட குறஞ்சது அம்பது அறுபது வருஷமாவது இருக்க போறேன்தானே அப்ப எப்பயாவது மூடு வர்றப்ப கேட்டுக்கிறேன்…..இப்ப பேச இஷ்டம் இல்ல…” சொல்லியபடி சாப்பாட்டை தொடர்ந்தாள்.

 இவளது பதில் அண்ணனுக்கு மட்டுமல்ல அந்த பக்கம் லைனில் இருந்தவனுக்கும் தானே காதில் விழுந்தது….சின்ன சிரிப்புடன்…..”அவ சாப்டுறால்ல…தட்’ஸ் ஃபைன்….நீங்களும் சாப்டுங்க…. கேச் யூ லேட்டர்…பை ”  என இணைப்பை துண்டித்துவிட்டான் அவன்.

அகதன் முகத்திலுமே மனோவின் பதிலில் புன்னகை வந்திருந்தது….சிரிப்புடனே இணைப்பை துண்டித்தவன்….தங்கை எதிரில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்…

இடை இடையில் அண்ணன் தங்கைக்கும் தங்கை அண்ணனுக்கும் எது தேவை என பார்த்து பரிமாறிக் கொண்டாலும் பேச்சு என்று எதுவும் இல்லை….. அவளை சீண்டி எரிச்சல் படுத்தி சாப்பிடாமல் செய்துவிடக் கூடாது என ஒரு எண்ணம் அண்ணனுக்கு…

சப்பிட்டு முடிந்து கிளம்பும் போது மறக்காமல் அகதன் மொபைலை கேட்காமலேயே எடுத்துக் கொண்ட மனோ…..’என் மொபைலை சென்னைல விட்டுட்டு வரனும்னு மித்ரன் ப்ளான் போட்டதுக்கு நீயும் தான மண்டைய ஆட்டியிருக்க…..சோ நான் உன் மொபைலை இப்ப எடுத்துகலாம் தப்பில்ல….’ என மானசீகமாக தன் அண்ணனுக்கு நியாயம் சொன்னபடி தன் ரூமுக்கு கிளம்பினாள்.

இப்போது “மனோ”  என சற்று கெஞ்சலாய் அழைத்தான் அண்ணன்… ‘பாவம் தியாட்ட பேச முடியாதுன்னு பயப்படுறான் போல..’ இவள் இப்படி யோசிக்க, அகதனோ….”அம்மாக்கு இந்த ட்ராமா விஷயம் டீடெய்லா எதுவும் தெரியாது…..அவங்கட்ட எதையும் சொல்லிடாத….” என தன் கவலையை வெளியிட்டான். திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்தவள்

“தெரியும்…” என ஒரு வெடுக் தெரியுமை உதிர்த்துவிட்டு தன் அறைக்கு போக கிளம்பினாள்.

“அம்மாக்கு தெரியாது…விஜிலாக்கு தெரியாது……எனக்கு தெரியாது…..மத்தபடி மொத்த உலகத்துக்கும் தெரியும்…” வார்த்தைகளை கடித்து துப்பிவிட்டு கடகடவென கிளம்பி தன் அறைக்கு போய்விட்டாள்.

அறைக்கு வந்தவளுக்கு அடுத்து வந்த நேரம் மொபைலில் கழிந்தது. முதலில் அம்மாவை கூப்பிட்டு பேசினாள்… முதலில் இவள் சுக பத்திரம் விசாரித்த அம்மா

“மாப்ள நேத்து விஜிலாக்கு எதோ ப்ரச்சனைனு திடீர்னு லேட் நைட் வந்தாரா…..அப்ப ஒன்னும் கேட்டுக்க முடியலை…. கொஞ்ச நேரம் அவரோட அண்ணிட்ட மட்டும் பேசிட்டு உடனே கிளம்பிட்டார்…..கிளம்புறப்ப அகி அங்க மும்பை வர்றதா மட்டும் சொல்லிட்டு போனார்….” என தொடங்க…..

’ஓ என்னை விட்டுட்டு சொல்லாம கொள்ளாம இவன் அங்க தான் போயிருக்கான?’ என்ற நினைவுடன் கேட்க தொடங்கினாள் மனோ.

“அப்றம் காலைல வந்தப்பதான் நிதானமா உட்கார்ந்து பேசிகிட்டு இருந்தார்….அவரோட அப்பா தன் சொத்துல இவருக்குன்னு கொடுத்த பங்கை…..இவங்க ஆடிட்டரே ஏமாத்துறதுக்காக ட்ரைப் பண்ணிருப்பாரு போல…..மாப்ளைக்கு கல்யாணம் ஆனதும் பங்கு இவருக்கு வரனும்னு அவங்க அப்பா ஏற்பாடு செய்து வச்சிருந்தாங்க போல….இவருக்கோ இவங்க அம்மாக்கோ கூட அது தெரியலையாம்…..

அவங்க ஆடிட்டர் தான் பொதுவா அதல்லாம் பார்த்துப்பார் போல….அவர் மாப்ளைக்கு பங்கு இருக்குன்னே சொல்லாம…. உங்க மேரேஜை நிப்பாட்டன்னு மாப்ளையோட அம்மாவை போய் குழப்பியிருப்பார் போல….. முதல்ல அவங்க அம்மாவுக்கு குழப்பமா இருந்தாலும்….பிறகு உன்னை அவங்களுக்கு பிடிச்சுட்டு போல….அவங்களும் கல்யாணத்துக்கு சம்மதிக்கவும்…..அடுத்து அந்த ஆள் ஏதோ பெருசா ப்ளான் போட்றுப்பார் போல....

அதை நேத்து தான் கண்டு பிடிச்சு….அந்த ஆளை அரெஸ்ட் செய்துட்டாங்களாம்……நம்ம வீட்டு பக்கத்துல கூட ஒரு ஆளை அரெஸ்ட் செய்துறுக்காம் நேத்து நைட்…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.