(Reading time: 36 - 72 minutes)

விஜிலாவை வச்சே உங்க கல்யாணத்தை நிப்பாட்ட முடியுமான்னு பார்த்திருப்பான் போல அந்த ஆடிட்டர்…. அதான் மாப்ள நேத்து நைட் விஜில்லாட்ட பேசிட்டு போனார் போல…..இப்பதான் நிம்மதியா இருக்கு ஆன்டின்னு சொல்லிட்டு இருந்தார் மாப்ள……

உனக்கு இன்னும் விஷயம் தெரியாதுன்னார்……காலைல உன்ட்ட பேச கூப்டார் போல நீ தூங்கிட்டு இருந்தியாம்…..எங்களுக்கும் ஃபோன் காலைல இருந்துதான் அவ்ட் கோயிங் வர்க் ஆகுது…..நாங்களும் அகிட்ட பேசுனோம்…..நீ அப்பயும் தூங்குறன்னு சொன்னான்….தூக்கம் வந்தா நல்ல தூங்கு….நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ…..கொஞ்ச நாளைக்கு இந்த ஃபோனை கொடையிறத விடு….அப்பதான் கல்யாணத்தப்ப ஃப்ரெஷ்ஷா இருக்கும்…..

அப்றம் சொல்ல மறந்துட்டேன்….மாப்ளையோட அக்கா……அந்த பொண்னும் இன்னைக்கு வீட்டுக்கு  வந்தது…. மாப்ளையும்அப்ப வீட்ல தான் இருந்தார்….அன்னைக்கு நடந்ததை தப்பா எடுத்துகாதீங்க …. அது ஒரு குழப்பத்துல அம்மா செய்துட்டாங்கன்னு எங்கட்டலாம் சொல்லிட்டு….. முறைப்படி எல்லாம் செய்ய டைம் இல்லை……ஆனா சிலர் கல்யாணத்துக்கு முந்தின நாள் நிச்சயம் வைக்கிறது உண்டுதான…….நாங்க ஆப்டி ஒரு ஃபங்ஷன் வைக்குறமேன்னு கேட்டுது அந்த பொண்னு……பேசுறது பழகுறதெல்லாம் அந்த பொண்ணும் நல்ல டைப்பா தான் தெரியுது….

மாப்ளையும் உங்களுக்கு மனுக்குல்லாம் சரின்னு பட்டுதுன்னா நிச்சயம் வைக்கலாம்னு சொன்னார்……உன்ட்ட கேட்கனும்னு சொல்லிட்டு இருந்தார்…..உனக்கு சரின்னு தான படுது மகி…?” என நடந்ததை அவருக்கு தெரிந்த அளவுக்கு விளக்கிக் கொண்டு வந்த அம்மா  திடுமென இடையில் இவளிடம் கேள்வி கேட்டு நிறுத்தினார்….

அம்மா சொல்வதை  கவனித்துக் கொண்டே….அதற்கும் இவளை கடத்தின காரியத்திற்கும் என்ன சம்பந்தம் …எப்படி பொருந்தும்…..மித்ரன் எப்படி கண்டு பிடிச்சான்…..அதென்ன அவன் அம்மாவுக்கே இவனுக்கு பங்கு இருக்குன்னு தெரியலை…..என யோசித்துக் கொண்டிருந்த மனோவுக்கு…..அம்மாவின் இந்த திடீர் கேள்வியில் திணறிப் போனது…..

“அது….நீங்க….என்னமா சொல்றீங்க…?”

“நிச்சயம் வைக்கலாம்னு தான் மகி படுது…..அவங்க வீட்ல இருந்து வந்து செய்றோம்னு கேட்காங்க…..மாப்ள தன் வீட்டைப் பத்தி சொல்லியிருப்பார்ல உன்ட்ட…..அவங்களுக்குள்ள இவ்ளவு நாள் என்னதுமாவும் இருந்துட்டு போகுது…. இனி எல்லாரும் போய் வந்து சந்தோஷமா இருக்க நம்மளால என்ன முடியுமோ அதை நாம செய்யனும் பாப்பா….” அம்மாவின் இந்த பாப்பா……கட்டாயம் நீ செய்தாக வேண்டும்  என்பதை அம்மா  இதமாய் சொல்லும் விதம் இது..

அம்மாவுக்காக ஒரு “ம்” சொல்லி வைத்தாள் இவள். எல்லாம் சரிதான்….’இதை இவட்ட கேட்கனும்னு தோணிய மித்ரனுக்கு தன் வீட்டு சூழ்நிலையை இவட்ட சொல்ல முடியலை என்ன?....இதுல இருக்கிற ஒரே நல்ல விஷயம் என்னன்னா அதை இவளோட அம்மா அப்பாட்டாயாவது சொல்லி இருக்கானே…..’ இந்த நினைவில்தான் இவளது ‘ம்’ அசிரத்தையாக வந்தது.

அம்மா அதை இவளது விருப்பமின்மையாக எடுத்துக் கொண்டார் போலும்….. “மகி இங்க நம்ம வீட்ல இருக்றவரைக்கும் நீ சின்ன பொண்ணு….ஆனா இனிமே உனக்குன்னு ஒரு வீடு வருது….அந்த வீட்ல எல்லாம் நீயும் மாப்ளையும்தான்…….உங்களுக்கு யார் வேணும்னு சேர்த்துகிறதும்….யார் வேண்டாம்னு விலக்கி வைக்கிறதும் உன் கைல தான் இருக்கு…..எல்லாரையும் கண்டிப்பா கூட்டி சேர்த்துக்கனும்னு இல்ல……ஆனா கூடுமான வரை சேர்த்துக்க பார்க்றது நல்லது….. பேசிப்பாரு உண்மையிலே அந்த இன்பா பொண்ணல்லாம் உனக்கு பிடிக்கும்தான்….அது மாதிரி மாப்ள அம்மா அன்னைக்கு அப்டி பேசிட்டாங்கன்னு அதையே மனசுல வச்சுகிட்டு யோசிக்காம….அவங்க என்ன நோக்கத்துல செஞ்சாங்கன்னும் புரிஞ்சுக்க பாரு….சரி பண்ண முடிஞ்சா சரி பண்ணு…..ட்ரை பண்ணியும் சரியா வரலைனா ஒன்னும் செய்ய முடியாதுதான்……ஆனா எடுத்ததும் எதுவும் தெரியும் முன்னமே முகத்தை முறிக்காதன்னுதான் சொல்றேன்….விஜிலா வீட்டுகாரர், இந்த இன்பா பொண்னு இவங்கட்ட கூட நல்லா நடந்துக்கிறவங்களுக்கு மாப்ளய பிடிக்கலைன்றது வித்யாசாம இருக்குல்ல….” அம்மா சொல்லிக் கொண்டே போக…..

அதே நேரம் மொபைலில் செகன்ட் கால் வருவதற்கான பீப் சவ்ண்ட்…..எடுத்துப் பார்த்தாள் இவளது மித்ரன் தான்…..எதுவும் முக்கியமான விஷயமா இருக்கலாம்….

“அம்மா அவங்க கால் பண்றாங்கம்மா…..” என இவள் ஆரம்பிக்கவும்….”எதாவது முக்கியமான விஷயமா இருக்கப் போது….. நீ அப்றமா பேசு “ என்று அம்மா காலை முடித்துவிட்டுப் போய்விட்டார்…

ஒரே ஒரு செகண்ட் உர் என மொபைலைப் பார்த்தாள்….’போடா என் அம்மா பேசிகிட்டு இருக்கப்ப வந்து ஆட்டய கலச்சுட்ட…’ பின் மொபைலை எடுத்துப் போய் அகதனிடம் கொடுத்தவள்…..வந்து தன் அறையில் மீண்டும் படுக்கையில் தஞ்சம்…..

கொஞ்ச நேரம் கழித்து அகதன் வந்து மொபைலை இவளிடம் நீட்டினான்…..”அம்மா அப்பா பத்திரிக்கை குடுக்க போயாச்சு…. பேசனும்னா நைட் கால் பண்ணு……FB பார்க்கனும்னா பார்த்துட்டு தா….அதோட அம்மா உனக்கு பிடிச்ச மாதிரி ட்ரெஸ்லாம் இங்க ஷாப்பிங் செய்துக்க சொன்னாங்க….ஸ்விஸ் போறதுன்னா அங்க உள்ள வெதர்க்கு ஒத்து வர்ற மாதிரி வாங்கனுமில்லையா…..” சொல்லிய அகதன் இவ இதுக்கு சரின்னு ஒத்துப்பாளா இல்லை இதுக்கும் எதாவது முரண்டு பிடிப்பாளா என பரிதாபமாக பார்த்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.