(Reading time: 30 - 59 minutes)

ஃபீஸ்ல எப்பவும் நீ எங்க போற என்ன செய்றன்னு சின்னதா உன் மேல ஒரு கவனம் இருக்கும்…..”

‘ஓ சைட் அடிக்கிறத இப்டி கூட சொல்லலாம் போல….’ என கேட்க தோணுகிறதுதான் …..சொல்ல தயக்கமாகவும் இருக்கிறது இவளுக்கு….

“ ட்ரெய்னிங் செஷன்ல நமக்குள்ள எல்லாம் கொஞ்சம் ஷேக்கியா இருந்தாலும் உனக்குள்ளயும் ஒரு ஃஸ்பார்க் இருக்குது என் வரையிலன்னு புரிஞ்சுது….அப்பதான் அந்த கிருபாகரன் பூனம் இன்சிடென்ட்….. நீ பார்க்கிங் பக்கம் தனியா போய் நிக்கவும் சேஃப்டி கன்சர்ன்லதான் வந்தேன்…. அந்த இன்சிடென்டுக்கு பிறகு உனக்கு என் மேல இருந்த ஏதோ கோபம்… அந்த விலக்கம்…. சஸ்பீஷன் எல்லாம் போய்ட்டுன்னு எனக்கு தோணிச்சு…. “

அவன் சொல்ல சொல்ல ‘பிரவாயில்ல எல்லாத்தையும் கரெக்டா தான் புரிஞ்சு வச்சுருக்கான்’ என மனம் சிலாகிக்கிறதுதான் அவனை….

“உன்னைப் பத்தி உன் வீட்டைப் பத்தி நீ ஆஃபர் லெட்டர் அக்செப்ட் செய்துட்டன்னு தெரிஞ்சதுல இருந்தே நான் விசாரிச்சுகிட்டு இருந்தாலும்….. உன்னை தவிர யாரையும் நான் மீட் செய்தது இல்லை…..அடுத்து அன்னைக்கு நீ அகதனோட ஆஃபீஸ் வந்திருந்த….. எப்டியும் உன் அண்ணாட்ட அறிமுகம் ஆகிகிடனும்னு தான் வெயிட் செய்துட்டு இருந்தேன்….

அந்த நேரம் திரவியாட்ட உன் அண்ணாவை பேசவிட்டுட்டு நீ என் பக்கம் பார்த்துட்டு நிக்கவுமே எனக்கு நிறையவே புரிஞ்சுது…. அன்னைக்கு நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்த நாள்….. …..நீ எடுத்ததும் சாப்டாச்சான்னு கேட்ட பார்…” ஒரு கணம் நிறுத்தியவன்

“எனக்கு என்ன சொல்லன்னு தெரியலை மனு…… ரொம்பவும் மனம் நிறைவா நான் ஃபீல் செய்த டைம் அது….. அப்பவே கன்ஃபர்மா தெரியும் நம்ம மேரேஜ் சீக்கிரம் இருக்கும்னு….” அவன் அந்த நொடிகளை இப்பொழுதும் உணர்ந்து பேசுவது அவளுக்குள் நெகிழ்ச்சியை உண்டு செய்கிறதுதான்

அவளும் அவன் சூழலை ஏதோ ஒரு வகையில் சரியாகத்தான் உணர்ந்து வைத்திருப்பதாக தோன்றுகிறது தானே….. அவனைப் பத்தி அக்கறையாய் விசாரிக்க யாரும் இருந்திருக்க மாட்டார்கள் என அவளுக்கும் தோன்றியது உண்டுதானே….இப்போது அது உண்மை என்றும் தெரிகிறதே….

“அந்த கேள்வி என் மனசுக்கு அவ்ளவு திருப்தியா இருந்தாலும்….அதுல தான் நமக்கு அடுத்த ப்ரச்சனை ஆரம்பிச்சிருக்கு…..” அவன் தொடர ‘என்னவாயிற்று ?‘ என்ற கேள்வியைப் பார்வையாக்கிப் பார்த்தாள் தன்னவனை.

நாம அன்னைக்கு ஹோட்டல் போனோம்ல……அங்க அம்மாவைப் பார்த்த மாதிரி நான் அப்பவே ஃபீல் பண்ணேன்….அம்மா என்னைப் பார்த்தாலும் வந்து பேசப் போறதுலாம் இல்லை….. பைதவே….நான் பயோஸி வர ஆரம்பிக்கவுமே நான் இன்டியால இருக்ற நியூஸ் வீட்டுக்கு போய்டுக்கும் தான்….வர்ஷனே கூட சொல்லி இருப்பாந்தான்….ஆக அம்மா வந்துட்டுப் போனது எனக்கு விஷயமா படலை….

ஆனா அம்மாக்கு எனக்கு உன் மேல இஷ்டம் இருக்குன்னு தோணி இருக்கு….

இது எனக்கு கொஞ்சம் புரியலைதான்….எப்பவும் நான் என்ன தப்பு செய்றேன்னு அம்மா கேள்விபட்டாலும் நேரடியா என் வாழ்க்கைல தலையிட்டதே இல்லை….. இந்த டைம் என்ன ஆச்சுன்னு தெரியலை……

உனக்குதான் தெரியுமே அம்மாவுக்கு என்னைப் பத்தி என்ன இமேஜ்னு….ஏதோ என்ட்ட இருந்து உன்னைக் காப்பாத்தனும்னு தோணிட்டுன்னு நினைக்கிறேன்….ஐ’ம் நாட் ஷ்யூர்……

இதுல நீ புரிஞ்சுக்க வேண்டிய இன்னொரு விஷயம்…..அப்பா இறந்த உடனே வர்ஷன் கம்பெனி பொறுப்புக்கு வந்துடலை…..அப்போ அவன் படிச்சுட்டு தான் இருந்தான்…..கொஞ்ச வருஷம் அம்மா எல்லாத்தையும் மேனேஜ் செய்துறுக்காங்க…..

ரொம்பவும் நம்பிக்கையான சில எம்ளாயீஸ்…..அதுக்கு முன்னமே அப்பா அம்மாவை ட்ரெயின் செய்தது எல்லாமா சேர்ந்து எல்லாத்தையும் நல்லாதான் மேனேஜ் செய்திருந்தாங்க அம்மா…..அதுல அவங்களுக்கு உள்ள நிறைய பீபுள் பழக்கம்…. சிலர் அம்மாவோட லாயல் ஃபாலோவர்ஸ்…

அடுத்து இன்னொரு முக்கியமான நபர் மாசிரன்…..அப்பாவோட மொத்த சொத்து பிஸினஸ் எல்லாத்தோட டாக்‌ஸ் விஷயங்களை பார்த்துகிறது இவரோட ஆடிட்டிங் ஃபெர்ம் தான்…..இவரோட அண்ணா நேதன் காலத்துல இருந்து இவங்கதான் எல்லாத்தையும் செய்துட்டு வர்றது….அந்த நேதன் இறந்துட்டார் போல….இந்த மாசிரன் அடுத்து பொறுப்புக்கு வந்திருக்கார்….இவர் எங்க வீட்டுக்கு ரொம்பவே க்ளோஸ்…….அப்பா இறந்த பிறகுதான் இவர் பவர்க்கு வந்திறுக்கார்…..ஆனால் அதிலிருந்து எங்க வீட்ல சொந்தகாரங்க மாதிரிதான் பழகி இருக்காங்க இவர் குடும்பம்…. அவருக்கு ஒரே பொண்ணு தார்கிகா……அந்த பொண்ணு அம்மாவுக்கும் இன்பாவுக்கும் ரொம்பவே நெருக்கம்….  

அம்மா நம்ம விஷயத்தை இந்த மாசிரன்ட்ட தான் கவனிக்க சொல்லியிருக்காங்க….. அவர் அம்மா சம்மதத்தோட……அம்மாவோட பெய்த்ஃபுல் ஆஃபீஸ் ஆட்கள் மூலமா உடனடியா எல்லா ப்ரொசீசரையும் ஓவர் ரைட் பண்ணி உனக்கு ஃபாரின் போற ஆஃபர் ஆஃபீஸ்ல இருந்து கொடுக்க வச்சிறுக்கார்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.