(Reading time: 30 - 59 minutes)

03. அனல் மேலே பனித்துளி - ரேணுகா தேவி

Anal mele pani thuli

காதல் நீதானா காதல் நீதானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா ?
நெஞ்சம் இது ஒன்றுதான் அங்கும் இங்கும் உள்ளது
உனக்கதை தருகிறேன் உயிர் என சுமந்திடு
வானமும் என் பூமியும் உன்னிடம்

மதிவாணன் வீட்டில் எல்லோருக்கும் மதுவை பிடித்து விட்டது என்றும் மதுவின் இஷ்டம் போல சற்று நாட்கள் தள்ளியே திருமணத்தை முடிக்கலாம் என்றும் தரகர் வந்து சொன்னதில் இருந்து வீட்டில் எல்லோருக்கும் ஒருவிதமான மகிழ்ச்சியும் சற்று டென்சனும் சேர்ந்தே தோற்றி கொண்டது. 

பின்னே டென்சன் வராமல் என்ன செயும்... மாப்பிள்ளைக்கு பெண்ணை போட்டோவில் பார்த்தது போதாதாம் நேரில் ஒரு முறை பார்க்க வேண்டுமாம்.. என்ன சொல்லி மதுவிடம் மாப்பிளை வீட்டினரை அறிமுக படுத்துவது... உண்மையை சொன்னால் நிச்சயம் கலாட்டா செய்வாள்...சூழ்நிலைக்கு பொருந்துவதை போல பொய் சொல்ல வேண்டுமே... இப்போது நிலவும் இந்த குழப்பமான சூழ்நிலையை சமாளிக்க போவது யார் என்பது தான் டென்சனுக்கான காரணம்...

"என்ன நீங்க 5 பெரும் பெரிய நிறுவனத்தையே நாங்க தான் கட்டி காப்பதரோம்னு இத்தனை நாளா புளுகிட்டு இருக்கிங்களா? ஒரு சின்ன ஐடியா உங்களால கொடுக்க முடியலையா நம்ம மதுவை சமாளிக்க?" என்று கேட்டார் மோகனா.

தீவிரமாக யோசிப்பதை போல உட்காந்திருந்த ஆண்கள் அனவைரும் மோகனாவின் பேச்சை கேட்டு, ஒன்றாக ஏதோ சொல்ல வர, அதற்குள் ரகு "இருங்க பெரியப்பாஸ் நானே பதில் சொல்றேன்... பெரியம்மா நாங்க எல்லாம் நேர்மையா தொழில் பண்றவங்க..இதே சூழ்நிலைய உண்மையை சொல்லி சமாளிக்க சொல்லிருந்தா நானே சமாளிசிருப்பேன்... அது எனக்கு ஜுஜுப்பி மேட்டர் ...ஆனா பொய் ...அது தான் வரவே மாட்டேங்குது... இல்லை பெரியப்பா.."என்று பால சண்முகத்தை பார்த்து கேட்க, "இவன் ஏன் என்னை பார்த்து கேக்கறான்... இவ ஏற்கனவே மொறைச்சிக்கிட்டு நிப்பாளே..." என்று திரு திருவென முழித்தபடி மோகனாவின் முகத்தையே பாவமாக பார்த்திருந்தார் பால சண்முகம்.

அவரை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்த சரண், "அம்மா இதை ஈசியா சால்வ் பண்ண நம்ம மங்களம் பெரியம்மாவால மட்டும் தான் முடியும்.... அவங்க கிட்டே மட்டும் தான் மது எதிர் கேள்வி கேக்காம சொன்னதை செய்வா" என்க, எல்லாருக்கும் அதுவே சரியென பட எல்லோரும் மங்களத்தின் முகத்தை பார்த்தனர்.

"கடைசியில இருக்கறதுலையே கஷ்டமான வேலையை எனக்கு கொடுத்துட்டிங்களா... ஹ்ம்ம் சரி சரி சமாளிப்போம்.” என்று சில நிமிடம் அமைதியாக யோசனை செய்தவர் “எனக்கு ஒரு யோசனை தோணுது, இந்த வாரம் மது ஊருக்கு வருவா இல்லியா... 4 நாள் லீவ் வருது ... சனிக்கிழமை ஏகாதசி... கோயில்ல நம்ம குடும்பத்தோட சார்புல தான் பூஜை நடக்கும்.. இந்த முறை எல்லாரும் போவோம்.. அவங்களையும் அங்க வர சொல்லிரலாம். கோயில்ல எதேச்சையா சந்திக்கிற மாதிரி ஏற்பாடு பண்ணிரலாம். என்ன சொல்றிங்க? இல்லை உங்களுக்கு யாரவதுக்கு வேற யோசனை தோணுதா ?" என்றார் மங்களம்.

"பெரியம்மா நீங்க எப்பவுமே சூப்பர் ...எப்படி உங்களால மட்டும் ஒரு பிரச்னைக்கு டக்குனு ஒரு ஐடியா சொல்ல முடியுது" - ரகு

"அது உங்க பெரியப்பாவை கல்யாணம் பண்ணுனதால எனக்கு கெடைச்ச ஒரு எக்ஸ்ட்ரா குவாலிபிகேசன் ...." என்று சிரித்தார் மங்களம்.

"அப்போ எல்லாரும் ஒரு மனதா பெரியண்ணியுடைய இந்த முடிவை ஏற்கிறோம்... ஒகே.... இனி சபை கலையலாம்" என்றார் சக்திசண்முகம்.

சிவசண்முகமும் விவரத்தை கந்தசாமியிடம் தெரிவிக்க, அவரும் மில்லில் இருந்த தன் மகனிடம் தெரிவித்தார்.

வீட்டிற்கு வந்ததும் அபிராமியம்மாவிடமும் தன் மகன் மருமகள்கள் என்று அனைவரிடமும் விஷயத்தை சொன்னவர் , " சனிக்கிழமை காலைல ஒரு 7 மணிக்கு கோயில்ல இருக்கற மாதிரி கெளம்பனும்.. " என்றார்.

மதிக்கு தன்னால் அதுவரை பொறுமையாக இருக்க முடியுமா என்று தான் தோன்றவில்லை... இத்தனை நாள் இது காதல் தான் என்று தெரியாத பொது இல்லாத பரபரப்பு அவள் போட்டோவை கண்ட நொடி முதல் இவனை விட்டு அகலாமல் தொற்றி கொண்டது... சிறு வயதில் இருந்தே படிப்பு பின்பு தன் நிறுவனம் என்று வேறு எதையும் பற்றி சிந்திக்காத அவன் மனம் இன்று அவளை தவிர வேறொன்றும் இவ்வுலகில் இல்லையென்று எண்ணியது... அவளை எண்ணி தன்னுடைய டைரியில் இருந்த அவனின் கிறுக்கலையும் அதன் அருகில் அவன் ஒட்டியிருந்த அவளின் புகைப்படத்தையும் மெதுவாக வருடினான்..       

  பெண்ணே

              உன் பிம்பம் கண்ட நொடியில் தான் நான் புதிதாக பிறந்தேனா...

         இன்று பிறந்த குழந்தையை போல்

         நான் காணும் யாவும் எனக்கு புதியதாய் தோன்றுவதேனோ

   என் எண்ணங்களும் செயலும் நீயாகி போன பின்

         காண்பவை யாவும் நீயாகி போனதில் வியப்பில்லை

         உன்னை காணாத இந்த நொடி என் வாழ்வின் நரகத்தை எனக்கு காட்டுகிறது....

உனக்காக காத்திருக்கும் இந்த நொடி எனக்கு சொர்க்கத்தையும் காட்டுகிறது...

        பெண்ணே நான் இருப்பது சொர்கமா நரகமா...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.