(Reading time: 30 - 59 minutes)

மெல்ல அவளருகில் வந்தவன் "தேங்க்ஸ்" என்றான் மெல்லிய குரலில்.

புரியாமல் அவனை பார்த்தாள் மது. "இவனுக்கு அடிக்கடி மண்டை குழம்பி மூளை சூடாயிருமோ? நானே இங்க அவனை கண்டபடி திட்டிட்டு இருக்கேன், இவன் ஏன் தேங்க்ஸ் சொல்றான்." என்று அவள் யோசிக்க, அவனோ "நான் அழகா இருக்கேன்னு சொன்னியே அதுக்கு தான்" என்று சொல்ல, அவளுக்கு தன் புத்தியை எதை கொண்டு அடிக்க என்று தெரியவில்லை. “ஐயோ மது இப்படியா திட்டும்போது லூசு மாதிரி அழகா இருக்கேன்னு சொல்லுவ. சும்மா போன வேதாளத்தை இழுத்து உன் தோளுல போட்டுகிட்டியே... இனி அது இறங்குமா?" என அவளையே திட்டி கொண்டு என்ன சொல்வது என தெரியாமல் அமைதியாக நின்றாள்.

"என்னை இதுக்கு முன்னாடி எங்கேயாவது பார்த்திருக்கியா மது"என்று மிக அருகில் அவன் குரல் கேட்க அவனை நிமிர்ந்து நோக்கியவள் அவனின் அருகாமையில் ஒன்றும் புரியாமல் இல்லை என்று தலை அசைத்தாள்.

மிக மெல்லிய குரலில் அவளின் காதருகே "பார்த்திருக்கோம் நல்லா யோசிச்சு அடுத்த முறை பார்க்கும்போது சொல்லு" என்றான். அவனின் அருகாமையும் அந்த குரலும் அவளுக்குள் ஏதோ செய்தது. என்ன என்று அவளால் புரிந்து கொள்ள இயலவில்லை. ஒரு நிமிடம் கன்னங்கள் சிவந்து விழி மலர்த்தி அவனை பார்த்தவளை கண்டதும் மீண்டும் தன் விரல் மடக்கி இதயத்தின் அருகில் வைத்து குத்துவதை போல செய்து "ஹப்பா "என்றான்.

"அடுத்த முறை பார்க்கும் போது இந்த சின்ன மண்டைக்குள்ள இருக்கற அந்த கொஞ்சூண்டு மூளை நான் யாருன்னு கண்டுபிடிசிருமா" என்று கேட்க,

இந்த இடைவெளியில் தன்னிலை உணர்ந்தவள் அவனின் இந்த பேச்சை கேட்டு சிலுப்பி கொண்டு "ஹ்ம்ம் எங்க மூளை எல்லாம் உங்களுதை விட பெருசுதான்..கண்டிப்பா அடுத்த தடவை பாக்கும்போது நான் சொல்லல என் பேரு மதுவே இல்லை..." என்று சொல்ல,

அவனோ "அடுத்து எப்போ பார்ப்போம் மது " என்று மீண்டும் மெல்லிய குரலில் கேட்க, "இவன் ஒருத்தன் ஆனா ஊன்னா ஹஸ்க்கி வாய்ஸ்ல பேசிடறான். எனக்கு தான் என்னமோ பண்ணுது" என்று மனதினில் அவனையே அதற்க்கும் திட்டியவாறு, மீண்டும் அவளுடைய குறும்பு தனம் தலை தூக்க மெல்ல தன் கால்களை எம்பி அவன் காதருகே சென்று அவனை போன்றே ஹஸ்கி வாய்சில் "ஹ்ம்ம் அதை அடுத்த முறை பார்க்கும் போது சொல்றேன் " என்றாள்.

இந்த முறை தடுமாறி போனது மதி தான். அருகே தெரிந்த மதுவின் முகமும் அவளிடமிருந்து வந்த அந்த மல்லிகையின் நறுமணமும் அவளின் சிவந்த கன்னங்களும் மை விழியும் அவனை சோதிக்க இதற்க்கு மேல் அங்கே நின்றாள் அவனையும் மீறி எங்கே அவளை அள்ளி கொண்டு போய்விடுவானோ என தோன்ற அவளிடமிருந்து நகர்ந்து பட்டென்று திரும்பி நடந்தான்.

மது தான் ஸ்தம்பித்து போனாள். நான் எதாவது தப்பா சொல்லிட்டனா ஏன் இவன் இப்படி கோவமா போறான்... நான் சும்மா ஏதோ வெளையாட்டுக்கு தான சொன்னேன்.” என்று பதறி போனாள்.

சென்றவன் மதுவின் குடும்பத்தினரிடம் விடைபெற்று சென்று காரில் ஏறி சென்றே விட்டான்.

வீட்டிற்கு வந்த மது அவளின் அறைக்கு சென்று புடவையை கூட மாற்றாமல் அப்படியே மெத்தையில் விழுந்தாள்.

"சரியான லூசா இருப்பான் போல.திடீர்னு வந்தான்…சைட் அடிச்சான்..திடீர்னு என்னமோ சொன்னான்...நான் என்னத்த சொன்னேன்னு பட்டுன்னு முகத்தை திருப்பிட்டு போனான். என்னமோ இவன்தான் எனக்கு பேரு வெச்ச மாதிரி மதுவாம் மது.எல்லாரும் என்னை மது அப்படின்னு தான் கூப்பிடுறாங்க. ஆனா இவன் கூப்பிடும் போது ஏதோ ஒரு வித்யாசமான பீல் ஆச்சே. அது ஏன்?" என்று பலவாறு தனக்குள் கேள்வி கேட்டு குழம்பி கொண்டிருந்தாள்.

ஆனால் அவள் ஆராய வேண்டிய அவளுடைய மனதை அவள் ஆராயவில்லை. முதல் முறை பார்க்கும் ஒரு ஆண்மகனிடம் இவளால் இப்படி வாயாட முடியுமா, தன்னை ஒருவன் சைட் அடிக்கிறான் என்று தெரிந்து அவனிடம் கோபம் கொள்ளாமல் எங்கே தன் வீட்டினர் பார்த்து விடுவார்களோ என்று பதற முடியுமா, யாரோ ஒருவன் கோபம் கொண்டு சென்றால் தான் ஏன் வருத்தம் கொள்ள வேண்டும். இதை எதையும் அவள் யோசிக்கவும் இல்லை. எங்கேயோ பார்திருக்கொம்னு சொன்னானே எங்கே பார்த்திருப்போம் என்றே அவள் யோசனை ஓடியது.

அங்கே மதியின் நிலையோ இதை விட மோசமாக இருந்தது. அவளின் போட்டோவை மட்டும் பார்த்து விட்டு அவளுக்காக ஒருவருடம் காக்க வேண்டும் என அவள் வீட்டில் கூறிய போது ஒரு வருடம் தானே அது சட்டென்று ஓடி விடும். அதுவரை காத்திருக்க தடை ஒன்றும் இல்லை என்று மிக எளிதாக எண்ணியவனால் இன்று அது அவ்வளவு சுலபம் இல்லை என்று அவளை பார்த்த பின் தோன்றியது. அவளின் மூச்சு காற்று தன் காது மடல் தீண்டியதும் அவளின் பிரத்யேக நறுமணத்தை அவன் நுகர்ந்ததும் இதோ இப்போதே அவளிடம் தன் காதலை சொல்லி அவளை தன்னோடு கூட்டி கொண்டு வந்து விட வேண்டுமென்று எழுந்த பேராவலை அவனால் கட்டுபடுத்த முடியவில்லை. அதனாலேயே அவள் முகம் பார்க்காமல் திரும்பி வந்தான்.

"அடியே என் செல்ல பொண்டாட்டி எப்போ நீ இங்க வருவ... காத்திருக்கறது இவ்வளவு கஷ்டம்னு எனக்கு தெரியலையே...இப்போ கஷ்டப்படறேன். டேய் மதி இப்போவே இப்படினா இனி போக போக உன் கதி அதோ கதி தாண்டா மதி "என்று சிரித்த படி மதுவின் நினைவோடு ஆபீசுக்கு கிளம்பினான்.

தொடரும்

Episode 02

Episode 04

{kunena_discuss:945}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.