(Reading time: 8 - 16 minutes)

04. அனல் மேலே பனித்துளி - ரேணுகா தேவி

Anal mele pani thuli

திவ்யா மதுவையே பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள்.

"என்ன இவ, மேல பாக்கறா, திடீர்னு கீழ பாக்கறா, இத்தன நேரம் காத்துல கோலம் போட்டா, இப்போ சோத்துல கோலம் போடறா...ஐயோ சாமி முடியலப்பா" என்று மனதிற்குள் எண்ணியவள்,"ஹலோ மேடம் என்ன சாப்ட போறயா இல்லையா " என்று கேட்க, மதுவோ அதற்க்கு பதில் சொல்லாமல், "அவனா இருக்குமோ...ச்சே ச்சே இல்லை அவன் அப்போவே கொஞ்சம் கருப்பா  இருந்தான்...ஒரு வேளை அந்த பையனோ.." நெற்றியில் ஒரு விரலால் தட்டி கொண்டு தனக்கு தானே பேசிக்கொண்டிருந்தாள்.

"இவளுக்கு பைத்தியம் கியித்தியம் பிடிச்சிருச்சா..அடியே...ஹலோ...மதுமதீஈஈஈ "என்று மதுவின் தொலை பிடித்து உலுக்கினாள் திவ்யா.

"ஏய் ஏண்டி இப்படி கத்தி பயமுறுத்தற... நிம்மதியா சாப்ட விடறியா,,," -மது .

"யாரு நீ சாப்டுட்டு இருக்க?... முடியலையே இப்பவே கண்ணை கட்டுதே.. நானும் பாக்கறேன் ஊருல இருந்து வந்து இந்த ஒரு மணி நேரமா நானே தான் பேசிட்டு இருக்கேன்... வெளிய போயி டின்னெர் சாப்டலாமானு கேட்டா ஒன்னும் சொல்லல...இங்கயும் நான் தான் புட் ஆர்டர் பண்ணுனேன்.. நீ என்னடான்னா காத்துல கோலம் போடற..தன்னைத்தானே பேசிக்கிற..கூப்டா காது கேக்காத மாதிரி உக்காந்திருக்கற...என்ன வர வழியில எதாச்சும் மோகினி பேய் புடிசிருச்சோ? உன்கூட பேசிட்டு இருந்தா எனக்கே கன்பீஸ் ஆயிடுது லூசு நீயா இல்லை நானான்னு" என்று வடிவேலு ஸ்டைலில் சொன்னாள் திவ்யா.

"இதுல உனக்கு என்ன சந்தேகம் நீதான் லூசு" என்று கூலாக சொல்லியபடி பிரைடு ரைசை எடுத்து சாப்பிட தொடங்கினாள் மது.

"சரி நானே லூசா இருந்துட்டு போறேன். நீ மொதல்ல சந்திராயன் அனுப்பரவள மாதிரி அப்படி என்ன யோசனை பண்ணிட்டு இருந்த அத மொதல்ல சொல்லு." - திவ்யா

"எனக்கு பசிக்குது நான் சாப்டறேன் இப்போ...உன் கேள்விக்கு அப்பறமா பதில் சொல்றேன் " என்றபடி உண்பதில் கவனம் செலுத்துவதை போல அமர்ந்திருந்தவளை முறைத்த திவ்யா, "இத்தன நேரமா காத்துல பேயோட்டும்போது உனக்கு பசிக்கல...நான் என்ன என்னனு கேட்டா பசிக்குது அப்படின்னு பந்தா பண்ற.. பாக்கலாம் டி பாக்கலாம் ...எனக்கும் ஒரு நேரம் வரும் " என்ற படி தன்னுடைய தட்டில் இருப்பதை உன்ன தொடங்கினாள் திவ்யா.

"சரிடி கோவப்படாத...உன்கிட்ட சொல்லாம யார்கிட்ட சொல்ல போறேன்.."என்று ஊரில் கோவிலில் நடந்தவைகளை எல்லாம் (சைட் அடிச்சது ஜொள்ளு விட்டது எல்லாம் கட் பண்ணிட்டு தாங்க ) திவ்யாவிடம் கூறியவள், அவனை அவள் எங்கே முதலில் சந்தித்தாள் என்று யோசனை செய்வதாகவும் கூறினாள் மது.

மதுவை நம்பாத பார்வை பார்த்தாள் திவ்யா.

"என்னடி அப்படி பாக்கற " -மது

"இல்லை என்கிட்டே வேற எதாவது மறைக்கிரயானு பார்த்தேன் " -திவ்யா

"என்ன மறைக்கணும் " -மது

"நீ சொன்னதெல்லாம் சரி தான்..ஆனா சம்மந்தமே இல்லாம உன் முகம் ஏன் இடைல சிவந்துச்சுனு ஒரு சின்ன சந்தேகம்.. "-திவ்யா

"ச்சே ச்சே அதெல்லாம் ஒண்ணும் இல்லை . இந்த ரெஸ்டாரன்ட் லைட்ல அப்படி தெரியுதா இருக்கும் " -மது

"ஹ்ம்ம் இருக்கும் இருக்கும்...அப்பறம் எப்படி...மேடம் கண்டுபிடிச்சிடின்களா "-திவ்யா

"இல்லப்பா, நானும் ஸ்கூல் காலேஜ் மேரேஜ் அப்படின்னு எல்லாம் யோசிச்சிட்டேன். எங்கயும் பார்த்த மாதிரியே இல்லை..."-மது

"நீ ஏன் இவ்வளவு தீவிரமா யோசிக்கிற. இது என்ன அவ்வளவு முக்கியமா? "-திவ்யா

"பின்ன இல்லையா,என் மூளைய அவர் சின்னூண்டு மூளைன்னு சொல்லிட்டார்"-மது

"என்னது அவரா, இவளை கம்மென்ட் பண்றவங்களை இவ இப்படி மரியாதையா எல்லாம் கூப்பிட மாட்டாளே, சரி பாப்போம், பூனை குட்டி வெளிய வந்துதான ஆகணும் " என்று மனதில் எண்ணிய திவ்யா "ஒஹ் உன் தன்மானத்தை தட்டி எழுப்பிடுச்சோ அவர் அப்படி சொன்னதும் ?" என்று மதுவிடம் கேட்டாள்.

"எஸ் நான் நிச்சயமா கண்டுபிடிக்காம விட மாட்டேன். கண்டுபிடிச்சு நெக்ஸ்ட் டைம் பாக்கும்போது அவர்கிட்ட சொல்லுவேன்,பார்த்திங்களா நான் கண்டுபுடிசிடேனு " - மது

"ஓஹ்ஹோ அப்போ நெக்ஸ்ட் எங்க எப்ப பாக்க போறிங்கனு முடிவு பண்ணிடிங்களா?"- திவ்யா

"இல்லையே " -மது

"போன் நம்பர் இருக்கா கூப்பிட்டு சொல்ல உன் கண்டுபிடிப்ப? " -திவ்யா

"இல்லையே "-மது

இவ்வளவு அப்பாவியா இருக்காளே என எண்ணிக்கொண்டே "சுத்தம் அப்பறம் எதுக்காக இப்படி யோசிச்சி உன்னோட இல்லாத மூளையை கஷ்டபடுத்தற..விடு..அது ஞாபகம் வரும்போது வரட்டும்" என்றாள் திவ்யா.

"எனக்கெல்லாம் மூளை இருக்கு..சும்மா சும்மா இல்லாத மூளைன்னு நீ சொல்ற...சின்ன மூளைன்னு அவர் சொல்றாரு. எல்லாரும் என்ன நெனைச்சிட்டு இருக்கீங்க " என்று திரும்பவும் மதியின் பேச்சிற்கே தாவிய மது திவ்யாவிற்கு சற்று வித்தியாசமாகவே தோன்றினாள். ஆனாலும் தானாக அவள் மனதை எதுவும் குழப்ப வேண்டாம் என்று முடிவெடுத்தவள் , இந்த பேச்சை தொடராமல் வேறு பல விஷயங்களையும் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.