(Reading time: 8 - 16 minutes)

துவை சந்தித்து விட்டு வந்த இந்த 3 நாட்களாக மதுவும் பல கோணங்களில் யோசித்து பார்த்தவன், தன் மொபைலில் சரணின் என்னை அழுத்தினான்.

"ஹலோ சரண்"

"சொல்லுங்க மதி..என்ன திடீர்னு போன் பண்ணிருக்கிங்க "

"உங்ககிட்ட கொஞ்சம் பேசணுமே, இன்னைக்கு ஒரு 30 மினிட்ஸ் ப்ரீயா இருப்பிங்களா "-மதி

"ஏதாவது பிரச்சனையா " -சரண்

"இல்லை அதெல்லாம் இல்லை..இது கொஞ்சம்...இல்லை இல்லை ரொம்பவே பர்சனல்..நானே முடிவெடுக்க முடியலை. அதான் உங்ககிட்ட கொஞ்சம் பேசலாம்னு நெனச்சேன்" - மதி

"சரி சரி நான் எவனிங் 5க்கு மேல ப்ரீ தான். எங்க மீட் பண்ணலாம்னு சொல்லுங்க.நான் வந்தறேன்." -சரண்

"பக்கத்துல எதாவது காபி ஷாப் இருந்தா அங்கேயே மீட் பண்ணலாம். " -மதி

"சரி அப்போ எங்க ஆபீஸ் பக்கத்துலையே ஒரு காபி ஷாப் இருக்கு. அங்க வந்துருங்க " -சரண்

"சரி நான் ஷார்ப்பா ஒரு 5.15க்கு வந்துடறேன். பய்" என்று போனை வைத்தவன் தன்னுடைய கைகடிகாரத்தை திருப்பி பார்த்தான். நேரம் இப்போது 2.30 என்றது.

தான் பார்க்க வேண்டிய பைல்களை எல்லாம் பார்த்து விட்டு சரியாக 4.45க்கு தன்னுடைய காரை எடுத்துகொண்டு அந்த காபி ஷாப்பை நோக்கி சென்றான் மதிவாணன்.

சரியாக 5 மணிக்கு அங்கே வந்து சேர்ந்த சரணை கைகுலுக்கி நலம் விசாரித்து இரண்டு காப்பிக்கு சொல்லிவிட்டு சற்று நேரம் அமைதியா இருந்த மதியை பார்த்த சரண்"என்ன பேசணும் மதி. தயக்கமில்லாம சொல்லுங்க. என்னை உங்களோட நல்ல பிரெண்டா நெனைச்சுக்கோங்க. யு கேன் ஷேர் எனி திங் வித் மீ " என்றான்.

"தேங்க்ஸ் சரண். உங்களை நல்ல பிரெண்டா நெனைக்க முடிஞ்சதால தான் உங்களை நான் இங்க வர சொன்னேன். ஆனா நான் சொல்ல போற விஷயத்தை கேட்டு சிரிக்கவோ கிண்டல் பண்ணவோ கூடாது. ஒகய்வா ?"-மதி

"ச்சே ச்சே எங்க வீட்டு மாப்பிளை நீங்க உங்களை கிண்டல் பண்ணுவனா? " -சரண்

"மொதல்ல இந்த நீங்க வாங்கவ விடுப்பா" -மதி

"சரி எங்க வீட்டு மாப்பிளை நீ உன்னை கிண்டல் பண்ணுவனா. நீ தைரியமா சொல்ல வந்ததை சொல்லு "-சரண்

"அது...அது வந்து...எல்லாம் உன் சிஸ்டரை பத்தி தான்..."-மதி

"என்னது மதுவை பத்தியா.." -சரண்

"ஆமாம். அது என்னனா..உன் சிஸ்டரை சீக்கிரமா கல்யாணம் பண்ண ஒரு வழி சொல்லு " என்று வெகு வேகமாக சொல்லிக்கொண்டு தலையை குனிந்து கொண்டான் மதி.

"ஹே மதி நீ சிரிக்க கூடாதுன்னு சொன்னதான்.. ஆனா என்னால சிரிக்காம இருக்க முடியலையே.."என்று சிரித்தவன் பின் மதுவிடம் "சரி சரி முறைக்காத. நீ விஷயத்தை கண்டினியூ பண்ணு. " -சரண்

"மதுவை நான் பார்த்ததுல இருந்தே என் மனசு முழுக்க அவதான் இருக்கா. என்னடா ஒரு முறை போட்டோவுல பார்த்தான். இன்னொரு முறை நேரா  பார்த்தான் அதுக்குள்ள லவ்வா அப்படின்னு நீ நெனைக்கலாம். ஆனா என்னுடைய இந்த காதல் கிட்டத்தட்ட 6 வருஷம் என் மனசுக்குள்ள இருந்த விஷயம்" என்று தன்னுடைய காதல் தொடங்கிய சூழ்நிலையை சரணிடம் கூறினான்."எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மது என் மனைவி ஆகணும். நான் எந்த அளவுக்கு மதுவை லவ் பண்றனோ அதா மாதிரி அவளும் என்னை காதலிச்சு கல்யாணம் பண்ணனும்.ஆனா அது சீக்கிரம் நடக்கணும்னா எனக்கு உன்னுடைய ஹெல்ப் வேணும். மதுவை நான் அடிக்கடி இல்லைனாலும் அவ இங்க வரும்போதெல்லாம் நான் அவளை மீட் பண்ற மாதிரி ஏதாவது ஒரு சிச்சுவேசன நீ  தான் அமைச்சு தரனும். மது எப்போ வருவா அப்படிங்கற இன்பார்மாசன் எனக்கு முன்னாடியே தெரியனும். அப்பறம் வேற எதாவது எனக்கு ஹெல்ப் வேணும்னா நான் கேக்கறேன். நீங்க இப்போதைக்கு இதை செஞ்சா போதும். மத்ததை நான் பார்த்துக்கறேன். "

ஒரு விஷயம் சொல்லவா மதி, முதல் தடவை உங்களை பார்த்து பேசுனப்போ, நீ என் தங்கைக்கு பெர்சனாலிட்டி, படிப்பு, வேலை அப்பறம் உங்க குடும்பம் இதெல்லாம் வெச்சு ரொம்ப பொருத்தம் அப்படின்னு தான் நெனைச்சேன். ஆனா இப்போ சொல்லவா யு லவ் ஹேர் வெரி மச். என் தங்கையை நிச்சயமா நீங்க நல்ல பார்துக்குவிங்கனு எனக்கு நம்பிக்கை வந்துருச்சு. உங்களுக்கு என்ன ஹெல்ப் பண்ணனும்னு சொல்லுங்க. நா நிச்சயம் பண்றேன்." -சரண்

"எஸ் சரண். எனக்கு தெரியும். உங்க வீட்டுல நீங்க அவளை ஒரு இளவரசி மாதிரி பார்துக்கரிங்கனு. ஷி இஸ் மைன் நவ். இனி அவளை எந்த பிரச்சனையும் நெருங்க விடாம பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு. நீங்க இந்த 22 வருஷமா மதுவை எப்படி பார்துக்க்ட்டின்களோ அதே மாதிரி இன்னும் சொல்லப்போனா அதை விட அதிகமாவே அவளை நான் பார்த்துப்பெனு உங்களுக்கு வாக்கு கொடுக்கறேன்."-மதி

"இதைவிட ஒரு அண்ணன் வேற என்ன எதிர்பார்ப்பான் மதி. ரொம்ப தேங்க்ஸ். இனி நீங்களும் மதுவும் லவ் பண்ண இந்த சரண் தி சாணக்கியன் கொடுக்க போற ஐடியாவை எல்லாம் பார்த்து நீயே ஷாக் ஆயிடுவ" என்று சொல்லி இருவரும் சிரித்தனர்.

இதோ தங்களை நோக்கி விதி சிரிப்பதை அறியாமல் சிரித்து மகிழும் இருவரும், மதி கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும் என்றோ அவளுக்கு காத்திருக்கும் ஆபத்தில் இருந்து அவளை மீட்க முடியாமல் இதோ இதே சரணின் மடியில் கிடந்து தான் கதறப்போகிறேன் என்றோ நினைத்து பார்க்கவில்லை.

 

"பிரெண்ட்ஸ், இந்த முறை ஒரே வாரத்துல ரெண்டு அப்டேட்ஸ் கொடுத்ததாலே இந்த எபி கொஞ்சம் ஷார்ட்டா இருக்கும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. அடுத்த பகுதிய இன்னும் பெருசாவும் விறுவிறுப்பாவும் கொடுக்கறேன். தேங்க்ஸ்."

தொடரும்

Episode 03

Episode 05

{kunena_discuss:945}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.