(Reading time: 33 - 66 minutes)

05. அனல் மேலே பனித்துளி - ரேணுகா தேவி

Anal mele panithuli

மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்

முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்

அது மலரின் தோல்வியா இல்லை காற்றி ன் வெற்றியா

கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும் ,

சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும் ,

அது கல்லின் தோல்வியா இல்லை உளியின் வெற்றியா ?

காதல் விதைபோல மௌனம் மண்மூலம்

முளைக்காதா , மண்ணை துளைக்காதா ?

பனிகுடங்கள் மெல்ல உடைந்துவிட்டால்

உயிர் ஜனிக்கும் , உயிர் ஜனிக்கும் ,

மௌன குடங்கள் மெல்ல உடைந்துவிட்டால் ,

காதல் பிறக்கும் , காதல் பிறக்கும்

நாணல் காணமல் , மூடல் கொண்டாலும்

நனைக்காத , நதி நனைகாதா ?

கமலம் நீரோடு , கவிழ்ந்தே நின்றாலும்

திறக்காதா , கதிர் திறக்காதா ?

காலையில் எழும்போதே டென்சனில் தொடங்கி இதோ இப்போது வரை அந்த டென்சனில்லயெ ஓடி கொண்டிருந்தாள் மது. எப்போதும் நேரம் கடத்தும் திவ்யாவோ இன்று கிளம்பி ரெடியாக இருந்தாள்.

கைப்பையை எடுப்பது பின்பு ஏதோ மறந்து விட்டது என திரும்பவும் அதை திறப்பது,அங்கே இங்கே என அந்த அறைக்குள் ஓடி எதயாவது எடுத்து அந்த பையில் வைத்துவிட்டு கிளம்புவது மறுபடியும் ஏதோ மறந்து விட்டது என திரும்பவும் அதை திறப்பது. இதையே கடந்த முப்பது நிமிடங்களாக செய்து கொண்டிருந்தாள் மது. ஒரு ஓரமாக சேரில் உட்கார்ந்து தூங்கி வழிந்து கொண்டிருந்தாள் திவ்யா. ஏதோ சத்தம் கேக்கவும் நிமிர்ந்து உட்கார்ந்தவள்

"கெளம்பிட்டியாடி... மேடம் இன்னைக்கு ஆபீஸ்க்கு வருவிங்களா இல்லை லீவா? கொஞ்சம் சொன்னிங்கனா நானாவது கெளம்புவேன்" -திவ்யா

"நீ வேற ஏண்டி..என்னமோ அதிசயமா நீ இன்னைக்கு சீக்கிரம் எழுந்திரிசிட்டே நான் லேட்டா எழுந்துட்டேன். அதான் இப்படி" -மது

"ஹ்ம்ம் நான் எங்க எழுந்துருசேன். தூங்குனாதான எழுந்திரிக்கனும். எங்க தூங்க விட்ட. நீயும் தூங்கல என்னையும் தூங்க விடல. அமாம். தெரியாம தான் கேக்கறேன். அப்படி எந்த கோட்டைய பிடிக்க மேடம் நைட் புல்லா அந்த நைட் லாம்ப லொட்டு லொட்டுனு அமுக்கிட்டு இருந்த. நான் தூங்கவே இல்லை. கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தா மேடம் அப்படியே லைட்ட எரிய விட்டுட்டு தூங்கிட்டிங்க.. நான் தான் கோட்டானாட்ட முழிச்சிட்டு இருந்து இதோ இப்போ உக்காந்து தூங்கிட்டு இருக்கேன். இன்னைக்கு ஆபீசெக்கு போயி நான் வேலை செஞ்ச மாதிரிதான்." -திவ்யா

"இல்லேன்னா மட்டும் வேலை செய்ற மாதிரி தான் பேசற" -மது

"ஏண்டி பேச மாட்ட, ஆமாம் அப்படி என்ன யோசிச்ச..அந்த மதிய எங்க மீட் பண்ணுனேன்னு யோசிச்சேன்னு மட்டும் சொன்ன மவளே நீ செத்த."-திவ்யா

"அதெல்லாம் அப்பறம் பேசிக்கலாம் வா வா நன் ரெடி டைம் ஆச்சு போலாம். " என்று பேச்சை மாற்றி கிளம்பியவளை குறுகுறுவென பார்த்தபடி வந்தாள் திவ்யா.

"ச்சே இன்னைக்கு சுத்தமா டைம் சரி இல்லைன்னு நெனைக்கிறேன்.ஒரு ஆட்டோவும் இல்லையே ஸ்டாண்டுல" திவ்யா

"சரி பொலம்பாத.வா பஸ் சட்டத் கொஞ்சம் தூரம் தான. அங்க போனா ஆட்டோ கெடைக்கும் இல்லைனாலும் பஸ்ல போயிடலாம். இங்க நின்னு டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்" என்று கூறி கொண்டே வேகமாக எதிர்புறம் திரும்பியவள் அங்கு சைக்கிளில் வந்த சிறுவனை கவனிக்காமல் சைக்கிளில் இடித்து கீழே விழ, அந்த சிறுவன் பயத்தில் சைக்கிளை கீழே போட்டு விட்டு "சாரி தீதி சாரி . டோன்ட் டெல் மை மாம். ப்ளீஸ் ஷி வில் நாட் கிவ் மீ சைக்கிள் ப்ளீஸ் ப்ளீஸ் " என்று கெஞ்ச, "பார்த்து திரும்ப கூடாதா மது, பாரு கையில காயம் ஆயிடுச்சு என்று தன் கைகுட்டையால் அவளுடைய கையில் இருந்த மண்ணை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தாள் திவ்யா.

"மெதுவாடி..இட்ஸ் ஓகே மா. யு லீவ் ப்ரோம் ஹியர்." என்று அந்த சிறுவனிடம் சொல்லியவளின் பார்வை மதுவின் கைகளை துடைத்து கொண்டிருந்த திவ்யாவின் மேல் நிலைக்க,"உன்னை கூட வெச்சுக்கிட்டா கூடவே ஒரு பார்ஸ்ட் எய்ட் பாக்ஸ்சும் வெச்சுக்கணும் போல " என்று திட்டியவாறே அவளது காயத்தை துடைத்து கொண்டிருந்த திவ்யாவின் பேச்சை கேட்டதும் அவளுக்கு சர்வமும் புரிந்து போனது. மனத்திரையில் இவளால் அடிபட்டு கீழே விழுந்த அந்த இளைஞனின் முகமும் அந்த நாளும் நினைவுக்கு வர, அந்த இளைஞன் யாரென்று புரிந்து போக ஒரு மெல்லிய புன்னகை தோன்றியது மதுவின் முகத்தில்.

அவளின் முகத்தை பார்த்த திவ்யா,"கீழ விழுந்ததுல தலைல எதாவது அடிபட்டுடுச்சா. கையில காயம் ஆயிருக்கு ஒரு இன்ஜெக்சன் போட்டுட்டு போயிடலாம்னு சொன்னா அதை கவனிக்காம சிரிக்கிற. இந்த உலகத்துலைய அடிபட்டதுக்கு சிரிக்கிற முதல் ஆள் நீதாண்டி " என்றாள்.

"ஹ்ம்ம் ஆமாம் அப்படியே இருக்கட்டும் வா அங்க ஒரு ஆட்டோ இருக்கு. சின்ன காயம் தான் ஹோச்பிடல் ஒன்னும் போக வேண்டாம் ஆபீஸ் போகலாம் வா " என்று திவ்யாவிடம் கூறியவள், அங்கிருந்த மருந்து கடையில் ஒரு பிளாஸ்டர் வாங்கி காயத்தில் ஒட்டி கொண்டு ஆட்டோவை நோக்கி செல்ல வேறு வழியின்றி திவ்யாவும் அவள் பின்னே சென்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.