(Reading time: 33 - 66 minutes)

"ஹை சூப்பர்ணா. ஊருக்கு வர டிக்கெட் அவளுக்கும் சேர்த்து பண்ணிருண்ணா, ஒரு நிமிஷம் இரு அவகிட்ட தரேன்" என்றவள் திவ்யாவிடம் ஓடி "ஹே இந்தாடி அண்ணா லைன்ல இருக்கார். உன்கிட்ட ஏதோ பேசணுமாம். பேசிட்டு கட் பண்ணிரு நான் இன்னும் கொஞ்சம் சாங்க்ஸ் இருக்கு. காப்பி பண்ணிட்டு வந்தறேன்." என்று போனை திவ்யாவிடம் கொடுத்து விட்டு ஹீட்செட்டை காதில் மாட்டி கொண்டு அமர்ந்தாள்.

தயக்கத்துடன் போனை காதில் வைத்தவள் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருக்க, மறுமுனையில் சரணோ, தன்னை சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு "ஹலோ திவ்யா என்னங்க யாருன்னு தெரியாதப்போ படபடனு பேசுனிங்க. இப்போ என்னடான்னா ரொம்ப அமைதியா இருக்கீங்க. " என்றான்,

"இல்லை அப்படி ஒண்ணும் இல்லை ... அது வந்து... சாரி "-திவ்யா

"எதுக்கு" -சரண்

"இல்லை நான் அப்படி பேசிருக்க கூடாது. "-திவ்யா

"தப்பில்லை மது சொன்னா. மெமரி கார்டை வெளிய எடுத்தால நம்பர் தான் டிஸ்ப்ளே ஆயிருக்கும். பேரு வரலை. அப்படின்னு. அப்போ தெரியாத நம்பர்ல இருந்து கால் வந்து அதுவும் யாரும் பேசாம இருந்தா கோபம் வரத்தாம் செய்யும் " என்று சரண் திவ்யாவிற்க்காக அவளிடமே பேச, திவ்யாவிற்கு மெல்லிய புன்னகை தோன்றியது.

"அப்போ என் மேல கோபம் இல்லையே." -திவ்யா

"நிச்சயமாக இல்லை. " சரண்

"தேங்க்ஸ்." -திவ்யா

"நீங்க எனக்கு இப்படி தேங்க்ஸ் சொல்ல கூடாது வேற மாதிரி சொல்லணும் "-சரண்

"என்னது?" ஒரு முறை அதிர்ந்து விழித்தாள் திவ்யா.

மறுமுனையில் சரணின் முகத்தில் இருந்த புன்னகை விரிய,"ஆமாங்க இந்த மாதிரி வாயில எல்லாம் சொல்ல கூடாது. இந்த மாசம் மது பர்த்டே பார்ட்டிக்கு மது கூட நீங்களும் கண்டிப்பா வரணும். அதுதான் நீங்க எனக்கு தேங்க்ஸ் சொல்ற முறை." -சரண்

அப்பாடி என்று மூச்சை இழுத்துவிட்டவள் "இவ்வளவு தானா நான் வேறேன்னவோனு நெனைச்சு பயந்துட்டேன்.கண்டிப்பா வர ட்ரை பண்றேன்" என்றாள்.

"வேற என்ன நெனச்சிங்க " -சரண்

"அது அது ..." திவ்யா

"சரி சரி விடுங்க பரவால.சொல்ல வேண்டாம். ஆனா கண்டிப்பா வரணும் ட்ரை பண்றது எல்லாம் இல்லை. இல்லைனா நீங்க பேசுனத நான் மறக்கவும் மாட்டேன். அண்ட் யுவர் தேங்க்ஸ் வில் நாட் பி அக்செப்டேட். "-சரண்

"சரிங்க வரேன்"  -திவ்யா

"ஓகே அப்பறம் " -சரண்

"ஒண்ணும் இல்லை வெக்கவா " திவ்யா

"சரி. பாப்போம் " என்று கூறி கால் கட் செய்து விட்டு மதிக்கு மது வருவதை அறிவிக்க வேண்டும் என்று கூட தோன்றாமல் கட்டிலில் விழுந்தான் சரண்.

அங்கே திவ்யாவிற்க்கோ கை நடுங்கி கொண்டே இருந்தது. அந்த போனையே பார்த்து கொண்டிருந்தவள், மது எழுவது தெரியவும் அந்த போனை அருகில் இருந்த டேபிளில் வைத்து விட்டு அமர்ந்தாள்.

"என்னடி கேம் விளையாடலையா? ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு? என்ன ஆச்சு ?" -மது

"அ..அது ஒண்ணும் இல்லை ..லைட்டா தலைவலிக்குற மாதிரி இருக்கு. அதான்."-திவ்யா

"சரி இரு நான் கீழ ஆன்டி கிட்ட சொல்லி ஒரு காபி வாங்கிட்டு வரேன்" என்று மது கீழே செல்ல, திவ்யாவிற்க்கும் தன் படபடப்பை மறைக்கவும் குறைக்கவும் சற்று சமயம் தேவைப்படவே, மதுவை தடுக்காமல் கீழே செல்ல விட்டவள், ஒரு பெருமூச்சை விட்டு தன்னை ஆசுவாசப்படுத்தி கொள்ள முயன்றாள்.

"ச்சே ஏன் எனக்கு இப்படி படபடனு இருக்கு. நான் அவரை முதல்ல யாருன்னு தெரியாம கண்டபடி பேசுனேன் தான். ஆனா அதுக்காகவா நான் இப்படி பீல் பண்றேன். நிச்சயமா இல்லை. ஐ தின்க் எனக்குள்ள கொஞ்சம் மனசு டிஸ்டர்ப் ஆயிருக்கு. அதுவும் அவர் கூட பேசுனதுக்கு அப்பறம். இது எல்லாம் சரி இல்லை திவ்யா. கண்ட்ரோல் யுவர் ஸெல்ப். என்னதான் மது என் பெஸ்ட் பிரெண்டா இருந்தாலும் இது நிச்சயம் சரி வராது. தேவை இல்லாம மனசுல நடக்காத ஒரு விஷயத்துக்காக ஆசை பட கூடாது. எங்க பாமிலியும் வசதி தான் ஆனா மது பாமிலி முன்னாடி நாங்க ரொம்பவே சின்னதாதான் தெரிவோம். வேண்டாம். இதை முளையிலேயே கிள்ள வேண்டும்." என்று ஒரு முடிவிற்கு வந்த பின்பும் அவளுள் ஒரு வித ஏமாத்தற உணர்வு படர்வதை அவளால் தடுக்க இயலவில்லை. அதற்குள் மதுவும் காப்பியோடு வர, திவ்யாவிற்க்குமே அது இப்போது தேவையாக இருந்தது.

திவ்யா குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்த மது, "இப்போ எப்படி இருக்கு உன் தலைவலி ?" என்றாள்.

"ஹ்ம்ம் பரவாலை நல்ல இருக்கு" -திவ்யா

"அப்போ ஓகே, அண்ணா உன்கிட்ட என்னோட பர்த்டே பார்ட்டி பத்தி சொல்லிருப்பானே. இந்த முறை நான் ஊருக்கு போகும்போது உனக்கும் சேர்த்து அண்ணாகிட்ட டிக்கெட் போட சொல்லிட்டேன். செம்ம ஜாலியா இருக்கும்ல.எவ்வளவு நாள் ஆச்சு நம்ம ரெண்டு பெரும் ஒண்ணா டிராவல் பண்ணி." என்று மது சந்தோசத்தில் குதூகலிக்க, திவ்யாவோ,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.