(Reading time: 33 - 66 minutes)

விழியே விழியே உனக்கென்ன வேலை

விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை

தூது சொல்லடி மெதுவாக நீ

தூது சொல்லடி மெதுவாக

இளம் தோழ்களிலே அசைந்தாடட்டுமா

நெஞ்சைக் கேட்டு சொல்லடி சுவையாக

நெஞ்சைக் கேட்டு சொல்லடி சுவையாக

மதுவிற்கு தன்னுடைய வாழ்த்து தான் முதலாக இருக்க வேண்டும் என்ற ஆசை மதிக்கு. ஆனால் சரண் மற்றும் மதியின் பெற்றோர் அவனை அவசரப்பட்டு அது போல செய்ய வேண்டாம். அவள் எண்ணம் அறியாமல் இவ்வாறு செய்தால் பின் அது குழப்பத்திலேயே கொண்டு விடும் என்று பலவாறாக சொல்லி அவனை நிறுத்தி வைத்தனர்.

அதிகாலையிலேயே மங்களம் மதுவை எழுப்பி குளித்து வர செய்து அவளுக்காக எடுத்திருந்த பட்டு புடவையை உடுத்தி அவள் பெயரில் கோவிலில் ஏற்பாடு செய்திருந்த அர்ச்சனையை முடித்து விட்டு வந்தனர். தொடர்ந்து அழைத்த நண்பர்களுக்கெல்லாம் அவர்களுடைய வாழ்த்துகளுக்கு நன்றி கூறி விட்டு கீழே சென்றாள்.

மாலை பார்ட்டிக்கான முன்னேற்பாடுகளை குறித்து விவாதித்து கொண்டிருந்தனர். இவளுக்கு மதி வருவானா, அவனுடைய குடும்பமும் அழைக்க பட்டிருக்கிறதா என அறிய வேண்டும். ஆனால் யாரிடமும் நேரடியாக கேட்க முடியாது. என்ன்ன செய்யலாம் என்று யோசித்தபடி அவர்கள் அருகில் வந்து அமர்ந்தாள். தான் அருகில் அமர்ந்த மதுவின் தலையை பாசமாக வருடினார் அவளின் சித்தப்பா பாலசன்முகம். அவரை நோக்கி புன்னகைத்தவள், "என்ன பேசிட்டு இருக்கீங்க சித்தப்பா " என்று கேட்க,

"ஒன்னும் இல்லாம ஆல்மோஸ்ட் எல்லா வேலையும் முடிஞ்சுது. பைனல்  வெரிபிகேசன் அவ்வளவு தான்" என்று பதிலளித்தார்.

யாரிடம் கேட்பது என்று யோசித்தவள் மொபிலை எடுத்துகொண்டு சரண் ரூமிற்குள் செல்வதை கண்டவள் "ஹ்ம்ம் இவனை புடிச்ச இன்போர்மேசன் வந்துரும் " என்று எண்ணிய படி அவனின் பின்னால் சென்றாள். அவனோ உள்ளே சென்று கதவை அடைத்து கொண்டான்.

"ஹ்ம்ம் இவன் ஏன் உள்ள போயி லாக் பண்ணிக்கிட்டான் அப்படி யாருக்கு இவன் கால் பண்ணப்போறான் " என்று எண்ணிய படி அவனுக்காக வெளியே காத்திருக்க, உள்ளே சரணோ, மதுவின் மொபைலில் இருந்து தான் திருடிய திவ்யாவின் எண்ணிற்கு அழைத்தான்.

ஏதோ புது எண்ணாக இருக்கவும் யாராக இருக்கும் என்று யோசித்தபடி எடுத்தாள்.

" ஹலோ " -திவ்யா

......

"ஹலோ யாருங்க "  -திவ்யா

"நான் தான் " என்ற ரகசிய குரல் அவள் காதில் விழ, அந்த குரலை கண்டறிய அவளுக்கு ஒரு நொடி கூட தேவைப்படவில்லை. வயிர்ற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்க தொடங்கியது. எவ்வளவு மூடி வைத்தாலும் காதல் என்பது பூ மணம் போல காற்றில் பரவி விடும். அவள் மனதிற்கு அவள் போட்டிருந்த கடிவாளங்களும் பூட்டுகளும் இத்தனை நேரம் எத்தனை பலம் வாய்ந்தவை என்று அவள் கருதினாலோ அத்தனை பலவீனமானது என்று அவன் குரல் கேட்ட நொடியில் புரிந்து கொண்டாள் திவ்யா. தன்னுடைய மனக்கட்டுப்பாடு இவ்வளவு தானா இவரின் ஒரு வார்த்தை என் மனதை சாய்க்க முடியுமா என்று அவளுக்கு ஆச்சர்யமாகவும் வேதனையாகவும் இருந்தது. அவள் ஒன்று உணரவில்லை தன்னுள் முழுதாய் நிறைந்தவனிடம் கட்டுபாடுகளை காட்ட எந்த பெண்ணாலும் இயலாது என்பது.  அவளிடம் எந்த பதிலும் இல்லாமல் போகவே தான் குரல் தெரியவில்லையோ என்று எண்ணிய சரண் மறுபடியும்

"நாந்தாங்க, சரண், மதுவுடைய அண்ணன். " என்றான்.

"ஹ்ம்ம் சொல்லுங்க " -திவ்யா

"நீங்க உங்க வீட்டுல எல்லாரும் வரிங்க தான " -சரண்

"இல்லை நான் மட்டும் தான் வரேன். அப்பாக்கும் அம்மாக்கும் கொஞ்சம் வேலை இருக்கு. " -திவ்யா

"நான் வேணா வந்து பிக்கப் பண்ணிக்கவா "-சரண்

"இல்லை வேண்டாம். நானே வந்தறேன். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் அப்பறம் பேசறேன். வைக்கட்டுமா" என்று அவனின் பதிலை கூட எதிர்பாராமல் அழைப்பை துண்டித்து விட்டு அங்கே அமர்ந்தவளுக்கு எப்படி இவனிடமிருந்து விலகிப்போக போகிறோம் என்று புரியவில்லை.

சரணுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும் அவள் வருவாள் என்ற எண்ணமே மகிழ்ச்சியை தந்தது. இதற்க்கு முன் அவன் திவ்யாவை சிறுமியாக கண்டிருக்கிறான் மதுவை பள்ளியில் கொண்டு விட செல்லும்போது. இன்று அவளை காண போவதே அவனுக்கு ஆனந்தத்தை கொடுத்தது. எப்படியாவது இன்று என் மனதை அவளுக்கு உணர்த்தி விட வேண்டும் என்று எண்ணி கொண்டான்.

வெளியே வெகு நேரமாக காத்திருந்து பொறுமை இழந்த மது கதவை தட்ட தொடங்கினாள்.

"டேய்ய் சரண் அண்ணா உள்ள யார்கிட்ட கடலை போடறே. சீக்கிரம் கதவை திற." -மது

கதவை திறந்தவன் "அம்மா தாயே நாங்க யார்கிட்டயும் கடலை போடலை உள்ள வா.. என்ன விஷயம் " என்றான்.

"ஒண்ணும் இல்ல. சும்மாதான்." -மது

"ஒண்ணும் இல்லையா? உன்னை பத்தி எனக்கு தெரியாத எலி ஏன் ஆத்தோட போகுது, என்ன மேட்டர் ?" -சரண்

"யாரெல்லாம் வராங்க இன்னைக்கு ஈவினிங்?" –மது

"ரொம்ப முக்கியமானவங்களை மட்டும் தான் அலைச்சிருக்கு "-சரண்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.