(Reading time: 33 - 66 minutes)

"ஹே திவ்யா உன் போனை கொடுடி ப்ளீஸ் அதுல இருக்கற சாங்க்ஸ் எல்லாம் என் மெமரி கார்டுல காப்பி பண்ணிட்டு தரேன்." -மது

"அதுல நெறைய சாங்க்ஸ் இருக்கு. கொறஞ்சது ஒரு 2 மணி நேரமாவது ஆகும். அது வரைக்கும் நான் என்ன பண்றது போர் அடிக்கும்."-திவ்யா

"என் போன்ல நெறைய மைண்ட் கேம்ஸ் இருக்கும் நீ வெளையாடு.உன்னால அவ்வளவு சீக்கிரம் கம்ப்ளீட் பண்ண முடியாது. அதுக்குள்ளையும் நான் கொடுத்தறேன். "-மது

"பார்த்தியா என்னையே நீ கிண்டல் பண்ற. நான் தர மாட்டேன் போ." திவ்யா

"சாரிடி செல்லம் ப்ளீஸ் த கொடு. என் கார்டுல இருந்த சாங்க்ஸ் எல்லாம் கேட்டுட்டேன் பா. "-மது

"சரி இந்தா. உன் போனை கொடு" -திவ்யா

போனில் இருந்து மெமரி கார்டை எடுத்து கொண்டு போனை திவ்யாவிடம் கொடுத்தவள், திவ்யாவின் போனை லப் டாப்பில் இணைத்து தன் வேலையை தொடங்கினாள்.

மிக தீவிரமாக அந்த கேமில் இருந்த புதிரை விடுவிக்க முயற்சி செய்து கொண்டிருந்தவள், ஏதோ ஒரு எண்ணிலிருந்து கால் வரவும் தன்னுடைய போன் என்ற ஞாபகத்தில் கால் அட்டெண்ட் செய்து ஹலோ என்றாள். அழைத்தது சரண். எதிர்நோக்கியிருந்த தன் தங்கையின் குரலுக்கு பதிலாக எதிர்முனையில் இருந்து யாரோ ஒரு பெண் மிக அலட்சியமாக பேசவும் மொபைலை எடுத்து தான் விளித்தது தன் தங்கையை தானா இல்லை வேறு யாரையுமா என்று பார்த்து கொண்டிருக்க, இங்கோ திவ்யாவின் பொறுமை கடந்து விட்டிருந்தது.

“ஹலோ இருக்கிங்களா இல்லையா” - திவ்யா

"ஹலோ, யார் பேசறது?"-சரண்

"ஏங்க போன் பண்ணுனது நீங்க. யாருக்கு போன் பண்றோம்னு கூட தெரியாமயா கால் பண்ணுவிங்க.” என்றவள் எதிர் முனை அமைதியாக இருப்பதை கண்டதும்

"ஹலோ போன் பண்ணுனா பேசணும் அந்த அறிவு கூடவா இல்லை. வேணும்னே எதாவது ஒரு பொண்ணோட நம்பர் கண்டுபிடிச்சு வழியரதுக்கு அப்படினே ஒரு க்ரூப்பே இருக்கும் போல. " என்று படபடவென பொரிய

இங்கே சரணோ, "ஹலோ அடுத்தவங்க போனை திருடிட்டு என்னமோ பெரிய இவங்க மாதிரி பேசறிங்க. மைண்ட் யுவர் வோர்ட்ஸ். நான் நல்ல பாமிலிய்ல இருந்து வர பையன். " என்க, "அப்போ நான் மட்டும் என்ன ஊசிப்போன பாமிலிய்ல இருந்தா வரோம். யாரை பார்த்து திருடின்னு சொன்னிங்க. இது என் போன்" என்றவள் அப்போது தான் அது மதுவின் போன் என்று உறைக்க, அப்படியே வாயடைத்து போனாள்.

திரும்பி மதுவை பார்க்க அவளோ காதில் ஹெட் சேட்டை மாட்டிகொண்டிருந்ததால் அவள் இந்த உரையாடலை கேட்கவில்லை.

அந்த புறம் சரணோ "ஹலோ ஹலோ "என்க , இந்த முறை திவ்யா அமைதியாக "ஒரு நிமிஷம் " என்று சொல்லி அந்த போனை மதுவின் தோளை தட்டி அவளுக்கு கால் என சைகையில் காண்பித்து விட்டு கட்டிலில் சென்று தலையில் கையை வைத்து கொண்டு அமர்ந்தாள்.

ஹலோ என்ற மதுவின் குரலை கேட்ட சரணோ "ஐயோ அப்போ அந்த பெண் யார், அவள் போய்விட்டாளா " என்று எண்ணியபடி "மதும்மா நான் தாண்டா சரண் அண்ணா. "

"சொல்லுங்க அண்ணா " -மது

"இப்போ உனக்கும் முன்னாடி பேசுனது யாரு" -சரண்

"ஒஹ் அது என் ப்ரெண்ட் திவ்யா. நான் சொல்லிருக்கனே. என் ரூம் மேட். என் பெஸ்ட் ப்ரெண்ட். ஏன் என்ன விஷயம் " -மது

"ஒண்ணும் இல்லைடா. ஒரு முக்கியமான விஷயமா தான் கால் பண்ணுனேன். நீ இந்த முறை உன் பர்த்டய்க்கு ஊருக்கு வரயாடா. " -சரண்

"அண்ணா நான் தான் இங்கயே என் ப்ரெண்ட்சொட செலிபிரேட் பண்றேன்னு சொன்னனே. அப்பறம் ஏன் திடீர்னு. " -மது

"இல்லைடா. பெரியம்மா பேசிட்டு இருந்தாங்க. மது இந்த முறை நம்ம கூட அவ பிறந்தநாளுக்கு இருந்தா நல்லா இருக்கும் ஆனா அவ அங்கேயே இருக்கேன்னு சொல்லிட்டா நானும் வற்புருத்தலைன்னு. அதான் நான் உன்கிட்டே கேட்டேன்." என்று சரளமாக புளுகினான்.

மதுவும் சரி இந்த முறை போனால் மீண்டும் அவனை சந்திக்கும் சந்தர்ப்பம் அமையலாம் என தோன்ற, ச்சே என்ன இது அவனுக்காகவா நான் போகணும்னு நெனைக்கிறேன், இல்லை இல்லை என் அம்மாக்காகதான் போறேன். அப்படியே அவனுக்கும் பதில் சொல்லிரலாம் என தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்டு சரி என்று கூறினாள்.

மது இவ்வளவு சீக்கிரம் ஒத்து கொண்டது சரணுக்கு ஆச்சர்யமாக இருந்தாலும் இப்போது அதை பற்றி யோசிக்க கூடிய மனநிலையில் அவன் இல்லை. எப்படியாவது திவ்யாவிடம் பேசிவிட வேண்டுமென எண்ணியது அவன் மனம்.

அங்கே திவ்யாவோ பால்கனியில் நின்று பேசிக்கொண்டிருந்தா மதுவை பார்த்தவள், தன் முகத்திற்கு நேராக விரலை நீட்டி "தேவையா உனக்கு இது திவ்யா. பார்ஸ்ட் எப்பவும் யாரு பேசறா அப்படின்னு தெரிஞ்சுட்டு பேசணும். இப்போ பாரு மது வீட்டுல இருந்து யாரோ பேசிருக்காங்க. மானமே போச்சு. " என்று புலம்பியபடி இருந்தாள்.

சிறிது நேரம் மதுவிடம் பேசிவிட்டு "மது உன் ப்ரெண்டுக்கிட்ட கொஞ்சம் போனை கொடேன். அவங்களையும் உன் பர்த்டே பார்ட்டிக்கு இன்வைட் பண்ணிடறேன். "என்று தயங்கி தயங்கி சொல்ல

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.