(Reading time: 33 - 66 minutes)

 

"ப்படியா. முக்கியமானவங்கனா ? "மது

"முக்கியமானவங்கனா யாரெல்லாம் ? "-மது

"அப்பாவுடைய க்ளோஸ் பிரெண்ட்ஸ் அண்ட் சம் ரிலேட்டிவ்ஸ்." -சரண்

"பிரெண்ட்ஸ் நா ?" -மது

பாம்பின் கால் பாம்பறியும் என்பதை போல மதுவின் எண்ணம் புரிந்தது சரணுக்கு. இவள் மதியை தேடுகிறாள் என்று உணர்ந்தவுடன் அவன் மணம் தன்னுடைய நண்பனுக்காக உவகை கொண்டது.

"அம்மா தாயே உனக்கு என்ன தான் வேணும் உனக்கு யாரையாவது இன்வைட்

பண்ணனுமா சொல்லு பண்ணிரலாம். வேணும்னா நேரா நானே போயி தூக்கிட்டு வந்தறேன் " சரண்

"உன்னாலே எல்லாம் அந்த பனைமரத்தை தூக்க முடியாது" என்று முணுமுணுத்தாள் மது.

"எதாவது சொன்னியா, ஏதோ பனமரம் அப்படின்னு " சரண்

"ஐயோ ஒண்ணும் இல்ல ஆள விடு " என்று அங்கிருந்து ஓடினாள் மது.

மதியை அழைத்தான் சரண்.

"என்ன மச்சான் எப்படா ஈவினிங் வரும்னு இருக்குமே ?" -சரண்

"அட ஆமாம்ப்பா நானும் கடந்த சில திங்களாக இந்த நாளுக்காக காத்திருந்தேன். நாளும் வந்திருச்சு. ஆனா ஆகப் பொறுத்தவனுக்கு ஆரப்போருக்கலைன்னு ஒரு பழமொழி சொல்வாங்களே அது மாதி இருக்கு என் நிலைமை. என்ன பண்ண " -மதி

"ஐயோ பாவம் இவ்வளவு ஏங்கி போயிருக்க பைய்யனுக்கு நான் ஒரு சின்ன ட்ரிட் தரவா? " -சரண்

" என்னது  ட்ரீட்டா? இல்லைப்பா இப்போதான் சாப்டேன் இனி சாப்ட முடியாது " -மதி

"அடக்கடவுளே இது உன் வயித்துக்கு இல்லை இந்த ட்ரிட்டு உன் மனசுக்கு மச்சான் மனசுக்கு..." -சரண்

......

"சரி சரி முழிக்காத மேடம் உங்களை தேடறா. நீ இந்த பன்க்சனுக்கு வருவியான்னு மேடம் என்னை வளைச்சு வளைச்சு கேட்டாளே நான் சொல்லவே இல்லையே " -சரண்

"ஹேய்ய்ய்ய் அப்படியா உண்மையா " -மதி

"சத்தியமா அது மட்டும் இல்லை உனக்கொரு செல்ல பேரும் வெச்சுருக்கா" -சரண்

"என்னப்பா அது சீக்கிரம் சொல்லு " -மதி

"பனைமரமாமா " -சரண்

"ஹ ஹா ஹா " விழுந்து விழுந்து சிரித்தான் மதி.

"ஹ்ம்ம் இதே சந்தோசத்தோட வலை அசத்த ரெடியா வந்துரு ஈவினிங் பாக்கலாம். " சரண்.

மதியம் சரியாக ஒரு மணிக்கெல்லாம் மதுவின் வீட்டை வந்தடைந்தாள் திவ்யா. உள்ளே செல்ல சிறு தயக்கம். சரணை எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது. அவன் பேச வந்தால் என்ன செய்வது என்று ஒரே குழப்பமாக இருந்தாலும் எத்தனை நேரம் தான் இப்படி வெளியே நிற்க முடியும் என அவள் அறிவு கேள்வி கேட்க மெதுவாக உள்ளே சென்றாள். அவள் உள்ளே வருவதை மேலிருந்து பார்த்த மது ஒஆடிவந்து திவ்யாவின் கைககளை பிடித்து கொண்டாள்.

"வாடி உனக்காகத்தான் எல்லாரும் வைட்டிங். வா வா" என்று அவள் கை பிடித்து உள்ளே அழைத்து சென்றவள் அங்கே இருந்த தான் வீட்டாரிடம் அவளை அறிமுகபடுதினாள். சரணிடம் அறிமுக படுத்துவாள் என்று எதிர்பார்ப்பில் இருந்த திவ்யாவிற்கு சிறிது படபடப்பாக இருந்தாலும் எல்லோரிடமும் இன்முகத்துடன் வணக்கம் கூறியவளிடம் "ஒரே ஒரு ஆள் தான் மிஸ்ஸிங். என் அன்ன சரண். அவன் ஏதோ கட்டேரிங் ஆளுகளை பாக்க போயிருக்கான். வர லேட் ஆகும். சரி வா எனக்கு ஒரே பசி. உனக்காக தான் வெயிட் பண்ணுனேன்.சாப்பிட போலாம் வா " என்று கையை பிடித்து இழுத்து சென்றாள். திவ்யாவிற்கு சற்று ஏமாற்றமாக இருந்தது சரணை பார்க்க முடியவில்லையே என்று.

மதுவின் அறையில் அவளுக்காக அவளின் அம்மா வாங்கி வைத்திருந்த சோளியையும் அதற்க்கான நகை செட்டுகளையும் பார்த்து அதை மதுவிற்கு வைத்து பார்த்து கொண்டிருந்தாள் திவ்யா.

"மதுக்குட்டி பியூட்டி பார்லரில் இருந்து வரட்டுமான்னு கேக்கறாங்க "என்று மாடிப்படியிலிருந்து வரும்போதே குரல் கொடுத்து கொண்டு வந்தான் சரண் .

வாயிற்கதவிற்கு முதுகை காட்டி உட்கார்ந்திருந்த திவ்யாவிற்கு அடி முதல் நுனி வரை ஒரு சிலிர்ப்பு ஓடியது. இது அவன் குரல். இவனே தான். திரும்பி பார் திரும்பி பார் என மனம் கூவ வேண்டாம் நீ அவனிடம் இருந்து விலக நினைக்கிறாய் திரும்பாதே என அறிவு தடுக்க தன்னுள் போராடிக்கொண்டிருந்தாள்.

இதற்குள் வாயிலை எட்டியிருந்த சரண் அப்போது தான் அங்கே ஒரு பெண் மதுவுடன் அமர்ந்திருப்பதை கண்டான். கண்கள் எல்லாம் அவள் மேலிருக்க வாய் மட்டும் மதுவின் கேள்விகளுக்கு பதில் சொல்லி கொண்டிருந்தது. அவள் தானா இது என்று அவள் முகம் காண மனம் விழைய, அவள் அவன் புறம் திரும்பவேயில்லை. அவன் இதற்க்கு மேல் நிற்பது சரியல்ல என்று தோன்ற, "சரிடா வேற ஏதாவது வேணும்னா கூப்பிடு நான் கீழே இருக்கிறேன் " என்று சொல்லி திரும்ப, திவ்யாவிற்க்கோ ஐயோ போகிறானே என்று இருந்தது.

"அண்ணா ஒரு நிமிஷம் இவ என் ப்ரெண்ட் திவ்யா. திவ்யா இவர் தான் என் அண்ணா சரண். " இவர்கள் இருவரின் மனக் குழப்பத்தையும் தீர்த்து வைத்தாள் மது.

இருவரும் ஒரு சேர திரும்பி ஒருவரை ஒருவர் நோக்கினர். தான் கையை நீட்டினான் சரண். மெதுவாக தான் கையை உயர்த்தி நீட்டியிருந்த அவன் கைகளை பற்றினாள் அவள்.

"ஹாய் " –சரண்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.