(Reading time: 33 - 66 minutes)

"து ஏதாவது சொல் ப்ளீஸ் " என மதி கூறிய வேளையில் "மது சீக்கிரம் வா,எல்லாரும் உனக்காக காத்திருக்காங்க" என மங்களம் கூப்பிடுவது கேட்கவும் அவனிடம் கண்களாலேயே விடை பெற்று வெளியே ஓடினாள் பெண்ணவள்.

மது, மதியை பார்த்து கொண்டே கேக் வெட்டியதையும் அவளின் கன்ன சிவப்பும் கண்களிலும் முகத்திலும் தெரிந்த அளவிட முடியாத மகிழ்ச்சியும் கண்ட திவ்யாவிற்கு ஏதோ நடந்திருக்கிறது என்று புரிந்தது. மதுவிற்கு காதலின் இந்த பாரம் அது இன்பமானதாகவே இருந்தாலும் அதை சுமக்க இயலவில்லை. யாரிடமேனும் சொல்ல துடித்தது அவள் மனது. அந்த நிகழ்ச்சி முடியும் வரை மதுவுக்கும் மதிக்கும் தனிமை என்பது கிடைக்கவில்லை. மதியின் காதலை அறிந்த மது சந்தோசவானில் மிதந்தாள் என்றால் மதுவின் பதில் கிடைக்காமல் மதியோ அவளின் விழிகளின் மொழிகளை வாசிக்க முயன்றான்.

இவர்கள் இருவரின் விழிகளின் மொழி பரிமாற்றத்தை கண்டு கொண்டனர் சரணும் திவ்யாவும்.

இருவரின் வாயால் இதை கேட்காமல் இதை உறுதி படுத்த வேண்டாம் என பொறுமை காத்தனர். எல்லோரும் விடை பெற்று செல்ல விழியாலேயே மதிக்கு விடை கொடுத்தாள் மது.

"திவ்யா நான் உங்க அப்பாட்ட பேசிட்டேன். இன்னைக்கு நைட் நீ என்கூட ஸ்டே பண்ணறேன்னு . வா வா ரூம்ல போயி கிப்ட் எல்லாம் பாக்கலாம்." என்ற மது திவ்யாவையும் இழுத்து கொண்டு மேலே ஓடினாள் அவளுக்கு மதியின் பரிசு என்ன என்பதை காணும் ஆவல்.

அவளையே அமைதியாக பார்த்திருந்தாள் திவ்யா. எல்லா பரிசுகளையும் ஓரமாக வைத்து விட்டு மதி கொடுத்த அந்த கவரை எடுத்தாள். மெல்ல அதற்க்கு வலிக்கும் என்பதை போல பிரித்தவள் அதில் இருந்த பரிசை பார்த்து விழிவிரித்து அசைவற்று அமர்ந்தாள்.

"அப்படி என்ன பார்க்கிறாள் இவள் " என்று எட்டி பார்த்த திவ்யாவிர்க்குமே ஆச்சர்யமாக இருந்தது. இவ்வளவு ஆழமானதா மதியின் காதல் என.

ஒரு அழகான வேலைப்பாடுடன் கூடிய பிரேமிற்குள் ஒரு ஓவியம். இல்லை இல்லை ஒரு காவியம்.

ஒரு இளைஞன் கீழே விழுந்து கிடக்க ஒரு அழகிய யுவதி அவனின் காயத்திற்கு மருந்திடுகிறாள். அவன் கண்கள் அவளையே நோக்கியிருக்க அவளோ அவனின் காயங்களை சரி செய்வதில் முனைப்பாயிருக்கிறாள். இதில் இருவரையும் வியக்கவைத்தது அதில் இருந்த அந்த பெண்ணின் தோற்றம். அந்த அறையில் அவளின் அந்த பதினாறாம் பிறந்த நாளில் எடுத்த புகைப்படத்தில் இருந்த மதுவை பிரதி எடுதததை போல இருந்தது அந்த ஓவியம். அவள் அன்று அணிந்திருந்த ஆடை, அவளின் முக பாவங்கள், என ஒவ்வொன்றும் நேரில் அப்பெண்ணை நிற்க வைத்து வரைந்தது போல. எத்தனை ஆழமாக அவன் மனதில் அவளின் உருவம் பதிந்திருந்தால் இப்படி அவனால் வரைய இயலும்.

மதி கண்களில் நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. அதை கண்டு அதிர்ந்த திவ்யா, "மது என்ன ஆச்சு ஏன் அழற " என்று அவள் அருகே நெருங்கி அமர, திவ்யாவின் கழுத்தை கட்டிக்கொண்டு கதறினாள் மது.

"திவ்யா ஐ லவ் ஹிம் ஐ லவ் மதி. அவர் இல்லாம இனி என்னாலே வாழவே முடியாது. ஐ லவ் ஹிம் " என அதையே திரும்ப திரும்ப சொல்லி விசும்பி அழும் தான் தோழியின் முதுகை தடவினாள் திவ்யா.

"இன்னைக்கு உன்கிட்ட பிரபோஸ் பண்ணுனாரா?" என்று அமைதியாக திவ்யா கேட்க , அவளிடமிருந்து விலகி மெதுவாக ஆம் என்பதை போல தலையை ஆட்டினாள் மது.

"நீ சரி சொல்லிட்டியா" -திவ்யா

"இல்லை" -மது

"ஏன் நீ அவரை இந்தளவுக்கு காதலிக்கும் பொது ஏன் சொல்லல " திவ்யா

"இல்லை நான் அவரை இந்த அளவுக்கு நேசிக்கிறேனு எனக்கே இப்போதான தெரிந்தது " என்று அப்பாவியாக கூறிய தோழியை புன்னகையுடன் பார்த்தவள், "பைத்தியக்காரி இப்போவாச்சும் சொல்லிடு" என்றாள்.

"இல்லை திவ்யா. ஐ வில் சர்ப்ரைஸ் ஹிம்." என்றாள் மது.

"வேணாம் மது. நீ இப்போவே அவருக்கு உன் காதலை சொல்லு " -திவ்யா

"இல்லை நான் என் காதலை சொல்வது அவருடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்க வேண்டும். அவரின் கண்களும் என் கண்களும் கலக்க எங்கள் இதயம் கலக்க வேண்டும் " என்று கூறியவள் அந்த ஓவியத்தை எடுத்து தான் நெஞ்சோடு சேர்த்து அணைத்தாள்.

ஆனால் அவள் அறியவில்லை இனி அவளால் அவனை பார்க்கவும் முடியாது தன்னுடைய காதலை அவள் சொல்லவும் முடியாது என்று. விதி போட போகும் ஆட்டம் என்ன…..காத்திருப்போம்...

"பிரெண்ட்ஸ் கொஞ்சம் நீளமான எபிசொட். ப்ளீஸ் உங்க கம்மேண்ட்ஸ் ஷேர் பண்ணுங்க. "

தொடரும்

Episode 04

Episode 06

{kunena_discuss:945}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.