(Reading time: 33 - 66 minutes)

பீஸ் சென்று இறங்கியும் இவள் ஒன்றும் பேசவில்லை. திவ்யாவும் சரி அவள் மனதில் ஓடுவதை அவளே குழம்பி ஒரு முடிவிற்கு வரட்டும் என்று விட்டுவிட்டாள்.

மதுவிற்க்கோ இது என்ன இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும் என்னை மறக்காமல் தன்னுடைய ஞாபகத்தில் வைத்திருந்தாரா. ஒரே ஒரு முறை அதுவும் ஒரு 5 நிமிடங்கள் மட்டுமே இருந்த அந்த சந்திப்பு, அதை அவர் மறக்கவில்லையா. மதி அந்த சந்திப்பை மறக்காமல் வைத்திருந்தது அவளுக்கு இதமான ஒரு உணர்வையும் சொல்ல இயலாத ஒரு விதமான படபடப்பையும் கொடுத்தது. அதே சுகமான மனநிலையோடு வேலையை பார்க்க தொடங்கியவள் "ஹெலோ மது உங்களுக்கு அடிபட்டுடுச்சாமே. எங்க அடிப்பட்டுது " என்று அவள் கையை பிடிக்க போன கிரணை கண்டதும் "இந்த வேஸ்ட் லேண்டா, இதுக்கிட்ட யாரு சொன்னா " என்று எண்ணியவள் அவன் கைய பிடிக்க முனைந்த போது படக்கென தன் கையை எடுத்து டேபிளின் அடியில் வைத்து கொண்டாள்.

"பெருசா ஒண்ணும் இல்லை, சின்ன அடிதான். ப்ளீஸ் டோன்ட் மைண்ட். எனக்கு ரொம்ப அர்ஜென்டான ஒரு ப்ராஜெக்ட் வொர்க் இருக்கு. நான் உங்க கிட்ட அப்பறம் பேசறேன்" என்று கூறியவள் அவனின் பதிலை எதிர் நோக்காது தன் வேலையை தொடர்ந்தாள். அருகே இருந்த கேபினில் இருந்த சில பிரெஷேர்ஸ் அவனை கண்டு சிரித்து விட்டு தங்களுக்குள் ஏதோ ரகசியம் பேசுவதை போல "சூப்பர் நோஸ் கட் " என்று கூறியதை கேட்ட கிரணின் முகம் சிறுத்து போனது. "கைய கூட தொட விடாத பெரிய பத்தினியா இவ. என்னையே அவமான படுத்தறியா. துரியோதனனை அவமானபடுத்துன பாஞ்சாலி நிலைமை தான் உனக்கும்" என்று மனதில் கருவிய படி அவளை முறைத்து விட்டு சென்றான்.

மதுவிற்க்கோ சற்று முன் இருந்த அந்த சந்தோசமான உணர்வு குறைந்து விட்டதை போல தோன்றியதோடல்லாமல் தலை வலிப்பதை போலவும் இருக்க,"ச்சே இந்த வேஸ்ட் லேன்ட் கூட எப்போ பேசுனாலும் தலைவலிதான். இதை யாரு இப்போ வர சொன்னா."என்று கிரணை திட்டியபடி திவ்யாவிற்கு ஒரு மெசேஜ் அனுப்பி காண்டீன் வர சொல்லிவிட்டு சென்றாள்.

நிலவு தூங்கும் நேரம்

நினைவு தூங்கிடாது

இரவு தூங்கினாலும்

உறவு தூங்கிடாது

இது ஒரு தொடர் கதை

தினம் தினம் வளர் பிறை...

ஸ்பீக்கரில் பாடலை போட்டுவிட்டு அப்படியே கண்களை மூடி சுவரில் சாய்ந்து கட்டிலில் உட்கார்ந்திருந்தான் மதி. முகத்தில் ஒரு புன்னகை இழையோடிக்கொண்டிருந்தது. கண்களுக்குள் மதுவின் முகம். எங்கே கண்ணை திறந்தால் பறந்து விடுவாளோ என்று கண்களை மூடி பாட்டில் லயித்திருந்தான்.

நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே

வானம் காற்று பூமி இவை சாட்சியானதே

நான் உன்னை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்

நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம்

அவனுக்கு இந்த பாடல் அவனுக்காகவே எழுதியதை போன்று இருந்தது. அவனுக்கும் அவளுக்கும் நிச்சயம் ஏதோ ஒரு பூர்வ ஜன்ம பந்தம் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஏழு வருடங்களுக்கு முன்பு சந்தித்து பேர் என்ன ஊர் என்ன எதுவும் இல்லாமல் இதோ இன்று அதே பெண்ணுடன் தனக்கு திருமணம் கைகூடி வருவது அதுவும் பெற்றோரின் ஆசியுடன்,இது நிச்சயம் கடவுளின் ஆசியே. இந்த ஜன்மத்தில் நீயும் நானும் சேர வேண்டும் என்பது இறைவனின் முடிவு. மனக்கண்ணில் அவனும் அவளும் கைகோர்த்து வளம் வரும் காட்சி ஓட ஒரு ஏகாந்தமான நிலையில் இருந்தவனை எழுப்புவது போல அவனின் போன் ஒலி எழுப்பியது. அந்த கனவில் இருந்து வெளிவர விரும்பாதவனாக அதை எடுக்காமல் அப்படியே தன் எண்ணங்களில் லயித்திருக்க,அந்த போன் அடித்து ஓய்ந்தது. மறுபடியும் அடிக்க ஆரம்பிக்க, "ச்சே கனவுல கூட டுயட் பாட முடியலப்பா " என்று எண்ணியபடி போனை பார்த்தான். சரண் காலிங் என்றது.

"ஒ எதாவது முக்கியமான விஷயமா பண்ணிருப்பான் " என்று எண்ணியபடி கால் அட்டெண்ட் செய்து "ஹலோ மச்சான் சொல்லுங்க " என்றான்.

"என்ன மதி கனவை டிஸ்டர்ப் பண்ணிட்டனா "-சரண்

"ஹிஹிஹி இல்லைப்பா" மதி

"தெரியுது தொடைச்சுக்கொப்பா. ரொம்ப வழியுது. சரி விஷயத்துக்கு வரேன்.  இந்த மாசம் மதுவுடைய பர்த்டே வருது. அந்த டைம் அவளை எப்படியாவது பேசி நான் இங்க வர வெச்சிடுறேன். " - சரண்

"ஒரு நிமிஷம்பா. லாஸ்ட் டைம் நான் கேட்டதுக்கு நீ தான சொன்னா மது இந்த டைம் அவ ப்ரெண்ட்சொட பெங்களுர்லையே செலிபிரேட் பண்ணிக்கிரானு. இப்போ என்னப்பா திடீர்னு "-மதி

"ஹ்ம்ம் ஆமாப்பா, ஆனா இதை விட்டா உங்க பாமிலிய இன்வைட் பண்ண வேற எந்த ஸ்பெசல் இவன்டும் இப்போதைக்கு இல்லை.அவளை நான் பேசி சமாளிச்சுக்கறேன். வீட்டுல பார்ட்டி அரேஞ் பண்றோம். கண்டிப்பா வீட்டுல உங்க பாமிலிய முக்கியமா இன்வைட் பண்ணுவாங்க. சோ இதுக்கும் மேல நீ பிளான் பண்ணிக்கோ. எப்படி மதுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கறதுன்னு யோசிச்சுக்கோ. இதை விட நல்ல சான்ஸ் கெடைக்காது. இதை சொல்லத்தான் கூப்டேன். நீ உன் கனவை கண்டின்யு பண்ணு. நான் மதுக்கு கால் பண்ணி பேசறேன். "-சரண்

"இனி எங்கே கனவு காண. யோசிக்கணும் பா யோசிக்கணும். ஸ்பெசலா என்ன பண்ணலாம்னு யோசிக்கணும். நீ பேசிட்டு அவ ஓகே சொல்லிட்டாலானு எனக்கு கொஞ்சம் இன்போர்ம் பண்ணு." என்று கால் கட் பண்ணிவிட்டு யோசனையில் அமர்ந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.