(Reading time: 30 - 59 minutes)

ண்கள் அவளை விட்டு அகலவில்லை. கையை ஆட்டி அவள் பேசும் விதமும் கண்களில் கொப்பளித்த குறும்பும் அந்த குவிந்த இதழ்களில் குடி கொண்டிருந்த மாறா புன்னகையும் அவனை கொன்றது. தன் வலக்கைவிரல்களை மடக்கி இடது புறம் நெஞ்சில் குத்தி "கொல்றியேடி பொண்டாட்டி" என்று மனதிற்குள் புலம்பினான். ஒவ்வொரு சிறுவனுக்கும் பிரசாதத்தை கொடுத்தவள் தன் முன் தெரிந்த பெரிய கைகளை பார்த்து விட்டு அதிலும் ஒரு கரண்டி பிரசாதத்தை வைத்தாள்.அப்போதும் அந்த கை நகராமல் இருக்க மறுபடியும் ஒரு கரண்டி வைத்தாள்.அப்போதும் அந்த கை நகராமல் இருக்கவும் "சரியான சாப்பாட்டு ராமன் போல" என்று எண்ணி அவள் நிமிர்ந்து அவனை நோக்க , விழி அகலாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான் அவன். அவன் பார்வையில் அவள் முதுகு தண்டில் ஏதோ ஒன்று சில்லென்று ஓடியது.

யாரிவன், நல்லா வாட்ட சாட்டமா ஜெயம் ரவி மாதிரி இருக்கான்...பார்த்தா சாப்பாட்டு ராமன் மாதிரியும் இல்லையே..ஹ்ம்ம் என் முகத்தையே ஏன் இப்படி பட்டிகாட்டான் மிட்டாயி கடைய பார்த்த மாதிரி பாக்கறான் என்று எண்ணியவள், "ஹல்லோ எல்லாருக்கும் ஒரு கரண்டி தான் உங்களுக்கு நான் ஏற்கனவே ரெண்டு கரண்டி பிரசாதம் கொடுத்துட்டேன். கெளம்புங்க " என்று கரண்டியை ஆட்டி பேச, மதிக்கோ அவள் பேசுவதும் செய்வதும் ஏதோ ஸ்லோ மோசனில் செய்வதை போல இருந்தது.தன்னை அவளுக்கு சிறிதேனும் ஞாபகம் இருக்குமா என்று அவனுக்கு இருந்த சிறு சந்தேகம் இப்போது முழுமையாக தீர்ந்து போனது. அவளுக்கு அவனை நிச்சயமாக ஞாபகம் இல்லை என அவனுக்கு புரிந்தது.

"அய்யே இவனுக்கு ஒருவேளை தமிழ் தெரியாதோ இல்லைனா செவிடோ ...ஐயோ பாவம் கடவுள் இவ்வளவு அழகா படிச்சிட்டு கடைசில இப்படி செவிடா படைச்சிருக்க கூடாது "என்று மனதிற்குள் அவனுக்காக வருந்தியவள், அடுத்ததாக ஜாடையில் பேச துவங்க அப்போது அங்கே வந்து சேர்ந்தனர் இருவரின் குடும்பத்தினரும். இவன் அந்த இடத்தை விட்டு நகருவதை போல அவளுக்கு தோன்றவில்லை கண்ணையும் அவளை விட்டு விலக்கவில்லை.

இது சரிபட்டு வராது என்றெண்ணி அவள் தன் தாயின் அருகே சென்றால்.

"மது, இவரு கந்தசாமி, நம்ம மில் ஓனர் சங்க தலைவர். இவங்க அவரோட மனைவி அபிராமியம்மா, இது அவங்க பசங்க விஜய், இவங்க அவருடைய மனைவி சித்ரா, இவரு வெற்றி, இவங்க அவருடைய மனைவி அஸ்வினி" என்று ஒரோருவராக அறிமுக படுத்த எல்லோருக்கும் வணக்கம் சொன்னவள், அடுத்ததாக சண்முகம் சொல்வதற்கு முன்பு கந்தசாமி "இது என்னுடைய கடைசி பையன் மதிவாணன், மதின்னு கூப்பிடுவோம். பாரின்ல MBA முடிச்சிட்டு இங்க எங்களுடைய மில்லை நிர்வாகம் பண்றான் "என்று மதியை காட்டி கூற,

மது கை குவித்து வணக்கம் சொன்னாலும் அவள் மனமோ அவனை அர்ச்சித்து கொண்டிருந்தது."களவாணி பய...ஒன்னும் பேசாம முழிச்சு முழிச்சு மொட்டை கண்ணை வெச்சு சைட் அடிச்சிட்டு இருந்தியா ..பாரு இப்போ கூட கொஞ்சம் கூட அறிவில்லாம இத்தன பேரு முன்னாடி மறுபடியும் சைட் அடிக்கிறான்.மவனே நீ தனியா சிக்குவயில்ல...உன்னை கவனிச்சுக்கிறேன்" என்று வசை பாடியவள் எங்கே இவன் சைட் அடிப்பதை தன் குடும்பத்தினர் யாரும் பார்க்கிறார்களோ என அவர்களை பார்க்க அவர்களோ அதிமுக்கிய விஷயம் போல ஏதோ ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தனர்.

"இவங்கெல்லாம் என்ன நான் ஒருத்தி இருக்கறதையே மறந்துட்டாங்க போலே" என்றே எண்ணியவாறு அவள் அவன்புறம் திரும்ப, அவனோ அவள் எப்போது இந்தப்புறம் தன் பார்வையை திருப்புவாள் என காத்திருந்தவனை போல அவளை நோக்கி கண் சிமிட்டி சிரித்தான். படக்கென்று அவன் புறம் இருந்து தன் பார்வையை திருப்பியவள்,"லூசு லூசு சரியான மங்குனி அமைச்சரா இருப்பான் போல...இப்படி பப்ளிக் ப்ளேஸ்ல கண்ணடிக்கிறான்." என்று திரும்பவும் அவனை வசை பாடியவள் தன் தாயின் அருகில் சென்று நின்று கொண்டாள். அவன்புறம் அவள் திரும்பவேயில்லை.

எல்லோரும் அங்கிருந்த மண்டபத்தின் கீழ் அமர்ந்து பேசிகொண்டிருக்க, சித்ராவும் அஷ்வினியும் அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டனர்.

அவளின் படிப்பு வேலை பொழுதுபோக்கு என எல்லாவற்றையும் கேட்டு கொண்டிருக்க இவளுக்கோ மனமெல்லாம் மதியை சுற்றியது அவளறியாமலே.

"இப்பவும் இங்க தான் பார்த்துட்டு இருக்கானோ"என்று எண்ணியவள் மெதுவாக அவன்புறம் யாரும் அறியா வண்ணம் திரும்பி பார்க்க அங்கே அவனோ மதுவின் தந்தையிடம் தீவிரமாக எதற்கோ பதில் சொல்லி கொண்டிருந்தான். சற்று ஏமாற்றமாகவே உணர்ந்தாள் மது.அதன் பிறகு அவள் இருமுறை அவனை திரும்பி பார்த்த போதும் அவன் ரகுவிடமும் சரணிடமும் பேசிகொண்டிருந்தான். அதன் பிறகு அவன்புறம் திரும்பவில்லை மது.

மணி 8.30ஐ தொட்டிருந்தது. எல்லோரும் கிளம்பலாம் என எழுந்திரிக்க, அபிராமி அம்மாள் வந்து மதுவின் நெற்றியில் குங்குமம் இட்டு அவள் தலையில் பூவை வைத்தார். அவரின் காலில் விழுந்த மதுவை "தீர்க்காயிசொட தீர்க்க சுமங்கலியா நீடூழி வாழனும் தாயி" என வாழ்த்தினார். பின் அனைவரும் அவளிடமும் அவள் குடும்பத்தாரிடமும் விடை பெற்று செல்ல, எல்லோரும் மதிக்கு தனிமை கொடுத்து முன்னே சென்றனர்.

அதுவரை அவளையே பார்த்து கொண்டிருந்த மதி, அவளின் அருகே சென்று "அப்போ நான் கெளம்பட்டுமா " என அவள் கண்களை நோக்கி கேட்க, ஒரு நிமிடம் அவளால் அவன் பார்வையை விட்டு தன் பார்வையை நகர்த்த முடியவில்லை. வலுக்கட்டாயமாக தன் பார்வையை திருப்பியவள், அவனை தான் திட்ட வேண்டும் அவன் மேல் தான் கோபமாக இருக்கிறோம் என்பதை கஷ்டப்பட்டு ஞாபகபடுத்திகொண்டு "ஆளை பாரு நல்லா வாட்ட சாட்டமா அழகா வளர்ந்தா போதுமா அறிவு வேணாம். அப்படியே பப்ளிக்கா எல்லார் முன்னாடியும் என்ன தைரியம் இருந்தா என்னையவே சைட் அடிப்பிங்க" என்று சரமாரியாக வசை பாட,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.