(Reading time: 30 - 59 minutes)

வலுடன் வாசலையே எதிர் நோக்கி நின்றிருந்த மங்களத்தையும் சிவ சண்முகத்தையும் கண்டவள் ஓடி சென்று அவர்கள் இருவரின் தோளிலும் சாய்ந்து கொண்டாள். "அம்மா எப்படி இருக்கீங்க, அப்பா எப்படி இருக்கீங்க…  என்னமா சாப்டறதே இல்லையா... ஸ்லிம் ஆயிட்டிங்களே...என்ன டயெட்டா" என்று கண்ணடிக்க, "போக்கிரி போதும் வாசல்லையே நின்னு பேசுனது…உள்ள எல்லாரும் உனக்காக வைடிங்" என்று கூறி உள்ளே அழைத்து சென்றார் மங்களம்.

உள்ளே நுழைந்து எல்லாரிடமும் நலம் விசாரித்து செல்லம் கொஞ்சி கொண்டிருந்தவள் சட்டென ஏதோ ஞாபகம் வர, "ஆமா என்கூட வந்த வானரங்க எங்க" என்று கேட்க, "ஏன் மகாராணி சொல்ல மாட்டிங்க, பெரிய இவளாட்டம் எறங்கி நீ பாட்டுக்கு உள்ள வந்துட்ட...உன்னோட மூட்டை முடிச்சை எல்லாம் யாரு தூக்குவா " என்றபடி அந்த பெரிய பேகை உள்ளே கொண்டு வந்தான் சரண்.அவன் பின்னேயே மதுவுடைய கைப்பையை மேலே சுற்றி கொண்டே வந்தான் ரகு.

மது ஓடி சென்று அவர்களிடம் இருந்து தன் பேகுகளை பிடுங்கி கொண்டு “வானரம்னு சொன்னது சரியா இருக்கு எப்புடி சுத்திட்டு வரான் பாரு, ஓகே ஓகே எல்லாரும் இப்போ இங்க வந்து உக்காருங்க... சரசு.. சரசு ... நீயும் வா"  என்று எல்லோரையும் ஹாலில் அமர வைத்தவள், அந்த பெரிய டிராலி பேகை திறந்து ஒரொரு கவராக எடுத்து வெளியே வைத்தாள்.

"அம்மா, மோகனா சித்தி, லலிதா சித்தி இந்தாங்க இது உங்க 3 பேருக்கும்..." என்று ஆளுக்கொரு கவரை கையில் கொடுத்தாள்.

இளம் சிவப்பு, க்ரீம் கலர், இளம் நீலம் என மூன்று வேறுவேறு வண்ணங்களில் ஒரே போன்ற பாட்டர்னில் டிசைனர் புடவைகள்.

அதே போல மூன்று கவர்களை எடுத்து தன் தந்தையர் மூவரிடமும் கொடுத்தாள். அதில் மூவருக்கும் ஒரே போன்ற செமி பார்மல் வேர் என்று சொல்லகூடிய மூன்று பார்ட்டி வியர் டைப் ஷர்ட்டுகள்.

"சரசு இந்தா இது உனக்கு..."என்று இளம் மஞ்சள் நிறத்தில் ஒரு அனார்கலி சுடிதாரை அவளுக்கு கொடுத்தாள்.

நன்றி சொன்ன சரசுவிடம் "நோ சோக பீலிங்க்ஸ்… வெளிய நம்ம டிரைவர் அண்ணா இருப்பாருல... அவரை கொஞ்சம் வர சொல்லு... ஓடு ஓடு" என்று அவளை விரட்டிய மது அவளையே பார்த்து கொண்டு நின்ற சரணிடமும் ரகுவிடமும் திரும்பினாள்"என்ன முழிக்கிறிங்க.. என்னையே கிண்டல் பன்னுனிங்கல்ல...அதனால உங்களுக்கு ஒன்னும் கிடையாது... நான் இந்த மாதிரி வாங்கிட்டு வந்துருப்பெனு தெரிஞ்சிருந்தா என்னை கிண்டல் பண்ணிருக்கவே மாட்டிங்கல்ல...சரி பரவால இப்பவும் ஒன்னும் கொறஞ்சு போகல... சின்னதா தோப்பு கரணம் போட்டு ஒரு சாரி சொன்னா கொடுக்கறேன்" என்றபடி கைகளை கட்டி நின்றாள்.

அவர்கள் வீட்டில் எப்போதும் இது போன்ற கலாட்டாக்கள் சகஜம் என்பதால் எல்லோரும் புன்னகைத்தபடி பார்க்க, பாலசண்முகம் "ஹ்ம்ம் அதான் பாப்பா சொல்றாள்ள போடுங்க தோப்பு கரணம் " என்று சொல்ல

சரணும் ரகுவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து விட்டு "ஐயோ எங்க பாசமலரே உன்னை நாங்க கிண்டல் பண்ணுவமா ...இல்லைடா இனிமேல் பண்ண மாட்டோம்...சாரி சாரி "என்று சரணும் ரகுவும் தோப்பு கரணம் போடுவது போல செய்ய,

"ஹ்ம்ம் சரி சரி ...எங்கே ரெண்டு பேரும் உங்க கைய நீட்டுங்க என்று சொல்லி இருவர் கையிலும் ஒரு பாக்சை வைத்தாள் மது.

அதில் இருந்த வாட்சை எடுத்து பார்த்து விட்டு, "சூப்பெர்டா " என்று சொல்லி தங்கள கையில் கட்டியிருந்த வாட்சை கழற்றி விட்டு இதை கட்டி கொண்டனர்.

அதற்குள் உள்ளே நுழைந்த டிரைவரிடம் அவருக்கும் அவர் மனைவிக்கும் எடுத்திருந்த உடைகளை கொடுத்தாள்.

எல்லோரும் மனம் நிறைந்திருந்தது. எல்லாரும் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர்.

மங்களமும் சிவசண்முகமும், தங்கள் மகள் இது வரை ஒரு குழந்தை என்று எண்ணி கொண்டிருந்ததற்கு மாறாக இன்று அவளுடைய உழைப்பில் தங்களுக்கு என்று வாங்கி வந்திருக்கும் பொருளை பெருமையுடனும் நெகிழ்ச்சியுடனும் பார்த்திருந்தனர்.

பாலசண்முகமும் மோகனாவும் சக்திசண்முகமும் லலிதாவும் ,இந்த பெண் தன் தாய் தந்தைக்கு இணையாக தங்களையும் நேசிக்கிறாள் மதிக்கிறாள் என்பது அவர்களுக்கு ஒருவித நிறைவையும் சந்தோசத்தையும் கொடுத்தது.

சரணும் ரகுவும் குறும்பு பெண்ணாகவே பார்த்திருந்த தங்கள் சகோதரியின் பொறுப்புணர்ச்சியையும், எல்லோருக்கும் எதாவது வாங்கியவள் தனக்கென்று ஒன்றும் வாங்கததையும் கண்டு அந்த குடும்பத்தாரிடம் அவளுக்கு உள்ள அன்பின் அளவை கண்டு மகிழ்ந்திருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.