(Reading time: 30 - 59 minutes)

பெரியம்மா என்ட்ட அதுக்கு கொஞ்சம் முன்னவரை  நல்லாதானே இருந்தாங்க…..நான் அகடமி போன பிறகும் அவங்களை ரொம்ப மிஸ் செய்தேன் தான்….பழைய மாதிரி அவங்களுக்கு என்னை பிடிச்சுடாதான்னு இருக்கும்…… அப்பதான் லிடி ஆன்டி பழக்கம்…. ஒரு ஐடியல் மதரை நான் பார்த்தேன்னா அவங்கட்டதான்…..

வொர்க் லோட்…ஐசோலேஷன்ற வகையில பார்த்தா அகடமி ஹெல்….அது என்னை அஃபெக்ட் செய்யாம பார்த்துகிட்டவங்க மதியும் லிடி ஆன்டியும் தான்…..எனக்கு மனசளவில அம்மான்னா அது லிடி ஆன்டிதான்…என்னை நிறைய வகைல பில்ட் பண்ணது அவங்கதான்……” சிறிது இடைவெளி விட்டவன் மீண்டுமாக

“மதி” என ஆரம்பித்தான். அவன் முகத்தில் ஒருவிதமான புன்னகை….லயிப்பு….

வ என் பெஸ்ட் ஃப்ரென்ட்… என் arch-rival .…லிடி ஆன்டிக்கு என்னை அதிகமா பிடிக்குமா அவளையான்னு எங்களுக்குள்ள எப்பவும் ஒரு பயங்கர காம்படிஷன் இருக்கும்…... என் வொர்ஸ்ட் எனிமியும் அவதான்….அப்டி டீஸ் பண்ணுவா என்னை…..சமயத்துல பாடா படுத்துவா…..ஆனா என்னைப் பத்தி யாரவது அவ முன்னால ஒரு வார்த்தை குறை சொல்லிட்டா போதும் அவங்க காலி….எனக்கு டென்னிஸ் ஓரளவு வருமே தவிர நான் ஒன்னும் இன்டெர்நேஷனல் ப்ளேயர் கிடையாது…..அதனால கோச்சிங் டைம்ல சில நேரம் ரொம்பவுமே ஸ்ட்ரெஸ் ஆகும்……அதே நேரம் எனக்கு ஸ்டடீஸ் பிடிச்சுது…..அப்போ மதிதான் லிடி ஆன்டிய எப்டிலாமோ பேசி கன்வின்ஸ் செய்து ஜிம் அங்கிள்ட்ட சண்டைபோடாத குறையா ஓபனாவே ஆர்க்யூ பண்ணி…..ஸ்கூல் அவர்ஸ எனக்கு எக்‌ஸ்டென் செய்து ப்ராக்டீஸ் அவர்ஸை குறைக்க வச்சா…. இப்டி நிறைய இருக்கும்…“

 அவன் சொல்லிக் கொண்டே போக ….மனதளவில் கடந்த காலத்தைப் பார்த்துக் கொண்டே உணர்வுகளில் அதை சுமந்த வண்ணம் அவன் பேசுகிறான் என்பது மனோவுக்குப் புரிகிறதுதான்.

நினைவுகளில் லயித்த வண்ணம் சொல்லிக் கொண்டே போனவன்…. இப்பொழுது மனைவியின் கண்களைப் பார்த்து “புரியுதுல மனு…..உனக்கு அகதன் கூட எப்டி ரிலேஷன்ஷிப் இருக்கோ அப்டிதான் எனக்கு மதி கூட……மத்தபடி அந்த டாகுமென்ட்ல சொல்லி இருந்த எதுவும் உண்மை கிடையாது….”

‘நம்புறதானே’ என்ற கெஞ்சல் அவன் பார்வையில்…..இத்தனைக்கும் இவள் நம்புகிறாள் என அவனுக்கு நன்றாகவே தெரியும்….நம்பிக்கை இல்லாமலா திருமணம் வரை வந்திருப்பாள்? இருந்தாலும் சூழ்நிலை அப்படி…… அவன் வாயாலயே ‘அவ என் ஃபாஸ்ட்’னு சொல்லி இருக்கிறானே….

மனோ முகத்தில் சின்னதாய் ஒரு ஆறுதல் புன்னகை….

ஆயிரம் வார்த்தைகளை விட சில தருணங்களில் ஒரு மௌனமும் அதோடு சேர்ந்த ஒரு பார்வையும் கோடி விஷயம் சத்தமின்றி சொல்லக் கூடும். அப்படிப்பட்ட ஒரு நொடி அது.

 மெல்ல கை நீட்டி எப்போதும் சற்று கலைந்த வண்ணம் நிற்கும் அவன் முன் நெற்றி முடிக்கற்றையை சின்னதாய் அளைந்தாள் மனைவி. அவளது அடுத்த கையை எடுத்து தன் இருகைகளுக்கு நடுவில் பத்திரப் படுத்திக் கொண்டான் அவன்.

“தேங்க்ஸ் மனு…. ஏன் அவள என் ஃபாஸ்ட்னு சொன்னேன் தெரியுமா…..? எனக்கு கடந்த காலத்துல இருந்த ஃபேமிலினா அது மதியும் லிடி ஆன்டியும்தான்…..அவங்க ரெண்டு பேருமே இப்ப உயிரோட இல்லை….” அவன் அமைதியாகத்தான் அதைச் சொன்னான் மனோவுக்குத்தான் தூக்கி வாரிப் போடுகிறது….

அதிர்ந்து போய் அவனைப் பார்த்தவள் கரம்… தன்னைப் பற்றி இருந்த அவனது கையை அழுத்தமாய் பற்றுகிறது….

உள்ளுக்குள் வேதனையின் இழைகள் தெரிந்தாலும் அதன் மீதாக ஒரு சிறு புன்னகையும் பரவி இருக்கிறதுதான் அவன் முகத்தில்….

“ப்ச்….எப்டி எப்டியோ போய்ட்டு…..17 இயர்ஸ் வரை அகடமில தான் இருந்தோம் நானும் மதியும்…......அப்றம் அங்கேயே பக்கதுல காலேஜ் ஜாய்ன் செய்தோம்….. இருந்தாலும் வீக் என்ட் லிடி ஆன்டி வீட்டுக்கு ஓடிப் போய்டுவோம்…..

ம்….இதுக்கு இடையில முக்கியமான விஷயம்……நான் அகடமில ஃபைனல் இயர்ல இருக்றப்பதான் அப்பா இறந்து போனது…..எனக்கு யாரும் விஷயத்தை சொல்லவே இல்லை….எப்டியோ மறந்துட்டாங்க…. ”

 உணர்ச்சி நீக்கிய குரலில் யாரையும் குற்றம் சொல்லா தொனியில் அவன் அதைச் சொல்லில் கடந்து  போக.. மனோ ஓர் ஆழ்ந்தெடுத்த மூச்சின் மூலம் தன்னைத்தான் ஆசுவாசப் படுத்திக் கொள்ள முயல்கிறாள். காதில் விழுந்த விஷயத்தில் மூச்சடைக்கிறதே……

“வாட்????” என ஆரம்பித்தவள் “என்னப்பா? அதெப்டி? ஏன்? என்ன ஆச்சு?” என தொடர்ச்சியாக பரிதவித்தாள்.

“அது…அப்பா மட்டும் தானே அகடமில என் கூட கான்டாக்ட்ல இருந்தாங்க……அதனாலயோ என்னமோ….. அப்பா டெத் ஒரு அன்எக்‌ஸ்பெக்டட் ஒன்….வீட்ல எல்லோருக்கும் அது ரொம்ப ஷாக்கா இருந்திருக்கும்….. எப்டியோ…..மிஸ் செய்துட்டாங்க…..த்ரீ டேஸ்க்கு பிறகு மதி அப்பா அவட்ட பேசுறப்ப அவங்க சொல்லித்தான் எங்களுக்கு விஷயம் தெரியும்….. அப்பா பத்தின நியூஸ்ன்றதால டீவில வந்துது போல…. அதைப் பார்த்துட்டு மதி அப்பா விசாரிச்சாங்க…..”

அவன் இன்னும் விஷயத்தை விவரிக்கும் தொனியில்தான் தொடர்கிறான்….ஆனால் மனோதான் தாங்க முடியாதவளாய் ஒருகையால் தன் இரு கண்களை மூட…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.