(Reading time: 30 - 59 minutes)

ந்த இடத்துல அவலன்ச் ரொம்ப காமன்……ஆனா அதை தடுக்றதுக்காக அதுக்குன்னு உள்ள டிபார்ட்மென்ட் பீபுளே …….அங்க பேசஞ்சர் யாரும் வராம ரோடை க்ளோஸ் செய்துட்டு…..செயற்கையா அவங்களே அதுக்குன்னு உள்ள பாம் மூலமா அவலன்சை ட்ரிகர் செய்வாங்க……அதாவது சரியுற மாதிரி இருக்ற பனியை மக்கள் இல்லாத நேரம் இவங்களே பாம் போட்டு சரிய வச்சுடுவாங்க….அப்டின்னா மக்கள் போறப்ப எந்த ப்ரச்சனையும் வராதுல்லையா….அந்த அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடு உள்ள இடம் அது…..அங்க மதியும் ஆன்டியும் போறப்ப அவலன்ச்……அவங்க காரோட அந்த பள்ளத்தாக்குல விழுந்துட்டாங்க…. இன்னைக்கு வரை அவங்க பாடி கிடைக்கலை….. நேச்சுரலா கூட அந்த அவலென்ச் நடந்துறுக்கலாம் தான் ….என்னதான் முயற்சி செய்தாலும் எல்லா நேரமும் மனுஷனால இயற்கையை வெல்ல முடியாது இல்லையா…. ஆனா அதுக்கு முன்னால மதி மேல ரெண்டு ஷூட் அவுட்ன்றது என் மனசுல இருந்ததால எனக்கு எந்த முடிவுக்கும் வர முடியலை…..எப்டியோ மதி லிடி ஆன்டி ரெண்டு பேரும் இப்ப வரை திரும்பலை….

அவங்க ரெண்டு பேரும் இல்லைனு ஆனதும் அடுத்து எனக்கு அங்க இருக்க ரொம்பவுமே ஒரு மாதிரி இருந்துச்சு…… அப்பா எப்பவும் நான் இன்டியால செட்டில்  ஆகனும்னு சொல்லிட்டு இருப்பாங்க……அதனால அந்த டைம்ல எனக்கு இன்டியா வரலாம்னு தோணிச்சு ……இந்த டைம்ல என் ஏஜுக்கு நான் யார்ட்டயும் பெர்மிஷன் வாங்கனும்னும் அவசியம் இல்லையே…. கிளம்பி இந்தியா வந்துட்டேன்…..

இங்க வந்துட்டாலும் எனக்கு  என் அம்மாட்ட போய் நிற்க தோணலை…… அதுவரைக்குமே எனக்கு இன்டியன் சிடிசன்ஷிப்தான்……அதனால இங்க வரவும் UPSC exam ப்ரிபர் ஆகி எழுதி க்ளியர் செய்தேன்… இந்த ஜாப் கிடைச்சுது….

துக்கிடையில் நான் இங்க வந்துட்டேன்னு கூட யாருக்கும் தெரியலை….. 3 இயர்ஸ் ஆகுது நான் இங்க வந்து…..ஒரு ஸ்டேஜ்ல  எனக்கு ஒரு கேஸ் இன்வெஸ்டிகேஷன்காக பயோசி போக வேண்டியதா இருந்துச்சு….. சிட்டி அவ்டர்ல கிடச்ச ஒரு டெட்பாடில இந்த பயோசி எம்ளாயி ஐடன்டி கார்டு கிடச்சுது…… கொஞ்சம் பெக்யூலர் கேஸ் அது…… அது  சம்பந்தமாதான் நான் பயோசி வந்தேன்….

அப்பதான் நான் வர்ஷனை மீட் செய்தது……நான் இங்க வந்துறுக்கேன்னே அவனுக்கு அப்பதான் தெரியும்….நான் போலீஸ்னோ இன்வெஸ்டிகேஷன்காக வந்துறுக்கேன்னோ எதுவும் காமிச்சுகலை…… எனக்கு புரிஞ்ச வரை அவன் கொஞ்சம் எமோஷனாகிட்டான்…..நிறைய சாரி கேட்டான் அண்ணா…

சின்ன வயசில இருந்து உன்னை பத்தி பாட்டி தப்பு தப்பா சொல்லி கேட்டே வளந்துட்டோம்…..அம்மா வேற உன்னை அவாய்ட் செய்யவும் உன்ட்ட சேரனும்ங்கிறதே தெரியலை…..அப்பாதான் உன்னைப் பத்தி நல்லா சொல்ற ஒரே ஆள்…..பட் பாட்டி ரொம்ப பயம் காட்டுவாங்க….நீ வந்து எங்க லைஃபயே அழிக்கப் போற மாதிரி…..சின்ன வயசுல சுயமா யோசிக்க தெரியலை……ஆனா சுயமா யோசிக்க தெரிஞ்ச பிறகு உன்னை கான்டாக்ட் செய்ய கூட வழி தெரியலை….

உன்னைப் பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்….அப்டின்னு ரொம்பவே நல்லா பேசினான்…அதோட நான் அவசரமா சுவிஸ் கிளம்பிட்டு இருக்கேன்…..திரும்பி வர்ற வரை பயோசிய….அப்பாவோட நேஷன் க்ரூப்ஸ….வீட்ட கொஞ்சம் பார்த்துக்கோ…..நான் ரொம்ப யார்கூடயும் கான்டாக்ட்ல இருக்க முடியாத மாதிரி இருக்கும் அங்க உள்ள சிச்சுவேஷன் அப்டினு சொன்னான்…

 அங்க உள்ள முக்கியமானவங்க எல்லோரையும் வரச் சொல்லி என்னை அவன் தம்பினும்…. எனக்கு எல்லோரும் கோ ஆப்ரேட் செய்யனும்னு கூட சொல்லிட்டுத்தான் கிளம்பினான்…..நான்  எதுவும்  இல்லாம இருக்கேன்னு நினச்சிறுப்பான் இல்லையா…….என்னை எப்டியாவது எங்க க்ரூப் ஆஃப் கம்பெனிஸுக்குள்ள கொண்டுவர அவன் ப்ளான் செய்றன்னு எனக்கு அப்பவே பட்டுது….

அவன் சொன்னதை வச்சுதான் அடுத்து நான் பயோசி உள்ள ஈசியா வர ஆரம்பிச்சேன்….. யாரும் அடுத்து என்னை நீ யார்…? ஏன் இப்டினு கேள்வி கேட்கவே முடியாதே பயோசில…. ஆனா நான் வந்தது இன்வெஸ்டிகேஷன்காகதான்….. அப்பதான் அங்க அடுத்து ஒரு பொண்னும் காணாம போய்ருக்குன்னு தெரிஞ்சுது…..அதுக்கடுத்து நான் அங்க வர்றப்பதான் உன்னை பார்த்தேன்….”  சொல்லியவன் அந்த சந்திப்பின் நினைவில் சில நொடி லயித்தான்….

அன்று வர்ஷன் ஆஃபீஸ் அறையில் இவன் நின்று கொண்டிருக்கும் போது யாரோ வந்து கதவை தட்டவும்…. வர்ஷன் அலுவலகத்திற்கு வருவதில்லை என்பதாலும்.. தான் அந்த நேரத்தில் அங்கு இருக்கிறேன் என மித்ரன் யாரிடமும்  சொல்லிக் கொண்டு வந்திராததாலேயும்…அலுவலகத்தைப் பற்றி அறிந்தவர் இவனையோ வர்ஷனையோ தேடி அங்கு வர வாய்ப்பில்லை, வந்திருக்கும் நபர் பயோசிக்கு புதியவர்……எதாவது இன்டர்வியூ கேன்டிடேட்டாக இருக்கும்……கொஞ்சம் நெர்வசாக இருக்க வாய்ப்பு….ஆக அந்த நபரை இயல்பாய் உள்ளே வரச் சொல்லி….விளக்கம் கேட்டு, அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல உதவி செய்ய வேண்டும் என எண்ணித்தான், உள்ளே வரச் சொன்னான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.