(Reading time: 30 - 59 minutes)

னு என்னாச்சு மனு?.....இதெல்லாம் முடிஞ்சு போன விஷயம்…..எத்தனையோ வருஷமாகிட்டு….” மித்ரன் இப்போது இவளை ஆறுதல் படுத்த முயன்றான். தன்னை சமனப் படுத்திக் கொண்டு திரும்பவுமாக அவனைப் பார்த்தாள் அவள்.

“சொல்லுங்க…..”

“ எனக்கு விஷயம் கேள்விபட்ட பிறகும் இன்டியா கிளம்பி வர தோணலை….இங்க ஃப்யூனரலே முடிஞ்சிருந்துது……நான் எதுக்கு வர? வந்து என்ன செய்ய? சோ வரலை…. அடுத்து கொஞ்ச நாள்ல என் அக்வ்ண்டுக்கு  ஒரு ஹெவி அமவ்ண்ட் அப்பாவோட ஃபினான்ஸ பார்த்துக்கிற ஃபெர்ம் மூலமா  டெபாசிட் ஆச்சுது……அதுதான் அடுத்து எனக்கு….”

“அப்ப உங்க அம்மா உங்கட்ட அடுத்து பேசவே இல்லையா?” இடையிட்டாள் மனோகரி.

“ஒரு டைம் பேசுனாங்க……இனிமேலாவது கொஞ்சமாவது பொறுப்பா நடந்துக்கோன்ற மாதிரி… இருக்க பணத்தை வச்சு லைஃப்ல செட்லாக பாரு…..இதுக்கு மேல உனக்கு தர இங்க எதுவும் பணம் இல்லைன்ற மாதிரி…. அடுத்து நான் அகடமியவிட்டு காலேஜ் போய்ட்டேன்….நானே அவங்க கூட கான்டாக்ட்ல இருக்க விரும்பலைனு வச்சுகோயேன்…..அவங்க மேல கோபம் வெறுப்பு அப்டின்னுலாம் எதுவும் இல்லை…. .அம்மாக்கு சிச்சுவேஷனை ஹேண்டில்  செய்ய தெரியலைனு தோணுமே தவிர அவங்க மோசம்னு எனக்கு தோணுனது இல்லை….. ஆனா அப்பா இறந்ததை எனக்கு சொல்லனும்னு கூட தோணத அளவுக்கு நான் அங்க யார் மனசுலயும் இல்லைன்றப்ப அதுக்கு மேல அந்த ரிலேஷன்ஷிப்பை எப்டி மெயின்டெய்ன் செய்றதுன்னு எனக்கு தெரியலை….. நான் காலேஜ் போன பிறகு என் கான்டாக்ட் டீடெய்ல்ஸை யாருக்கு கொடுக்கனும்னு கூட எனக்கு  புரியலை…..நானும் மதியும் ஒரே காலேஜ்தான் ஜாய்ன் செய்தோம்…… அப்ப அங்க என்னைப் பார்க்க பெரியம்மா வந்தாங்க……

துக்கு முன்னால ஒரு இன்சிடென்ட் நடந்துச்சு….. அகடமில நான் படிச்சுட்டு இருந்தப்ப இயர்லி ஒன் வீக் வீட்டுக்கு போறதுக்கு பெர்மிஷன் இருக்கும்…..ஸ்போர்ட்ஸ் ஸ்கூல் இல்லையா வர்க் அவ்ட் ஷெட்யூல் டிஸ்டர்ப் ஆகிடக் கூடாதுன்னு அவளவுதான் ஹாலிடேஸ் இருக்கும்…..

அந்த டைம் பெரியம்மா ஒவ்வொரு வருஷமும் அவங்க வீட்டுக்கு கூப்டுவாங்க….நான் போனதில்ல.. எனக்கு அங்க போறதைவிட…. லிடி ஆன்டி அந்த டைம் எங்கயாவது ட்ரிப் போவாங்க….அவங்க கூட போறதுதான் பிடிச்சுது…. ஆன்டி அங்கிள் நான் மதி எல்லோரும் சேர்ந்து போவோம்….

 ஒரு சில டைம் நான் அப்பா கூட இன்டியாவும் வந்திருக்கேன்…..அப்டி ஒன் வீக் ட்ரிப்லாம் அப்பா சொல்றப்ப பெரியம்மா ஈசியா சரின்னு சொல்லிடுவாங்கதான்….அப்பதான் அந்த மும்பை வீடு எனக்கு பழக்கம்…..அங்க ஸ்டே பண்ணிருக்கோம் அப்பாவும் நானும்…..

இன்டியா வர்றப்பலாம் சென்னைல எங்க வீட்டுக்கும் கூட்டிட்டு வருவாங்கதான் அப்பா….ஆனா நான் வர்றப்ப வீட்ல அம்மா தவிர யாரும் இருக்க மாட்டாங்க…..வர்ஷன் இன்பா யாருமே…… நான் அவங்களை அப்பப்ப அப்பா காமிக்ற ஃபோட்டாலதான் பார்த்திறுக்கேன்…. அம்மாவும் எது பேசுனாலும் பட்டும் படாமலுமா பேசுவாங்க…. பயங்கரமா போராயிடும்….ஒரு ஸ்டேஜ்ல எனக்கு இங்க வர்றதைவிட லிடி ஆன்டி கூட போறதுதான் பிடிச்சுது….அதனால அடுத்து நான் ரொம்ப வரவும் இல்லை….

நான் ஒவ்வொரு டைம் பெரியம்மா வீட்டுக்கோ இல்லை இன்டியாக்கோ வரமாட்டேன்னு சொன்னப்பலாம் பெரியம்மா அம்மாட்ட நான் எதோ உலக மகா பாவம் செய்ய டூர் போற மாதிரி சொல்லி வச்சிருக்காங்க….. என்னை அப்யூஸ் செய்றதா பெரியம்மா மேல கம்ளயிண்ட் ஆச்சுது இல்லையா அதிலிருந்து அவங்களால ஈசியா மனசளவில வெளிய வர முடியலை போல….

அம்மாவைப் பொறுத்தவரை அப்பா என்னைப் பத்தி நல்லதா சொல்றது எல்லாம் என் தப்பை மறைக்க அவங்க சொல்ற நொண்டி சமாதானம்…… செல்லம் கொடுத்து என்னை கெடுக்கிறது அது…..அவங்க அக்கா சொல்றது தான் அக்மார்க் உண்மை… ஏன்னா அக்காவுக்குத்தான் தன் மேலயும் தன் மகன் மேலயும் உண்மையான பாசம்…. இதுல என் ஏஜ் கூட கூட என் சின் லிஸ்ட்டும் அதுக்கு ஏத்த மாதிரி பெருசாகிட்டு….

இந்த சூழ்நிலைலதான் பெரியம்மா என்னைப் பார்க்க காலேஜ் வந்தது….. வீட்டுக்கு வந்து போய் இருன்னு சொன்னாங்க…..நான் டைம் கிடைக்கிறப்ப வர்றேன்னு முடிச்சுட்டேன்….அப்ப அவங்க என் கூட மதிய பார்த்திருப்பாங்க போல…. அவங்கதான் முதல்ல அவளைப் பத்தி வீட்ல போய் தப்பா சொன்னது போல….. அடுத்து ஒரு ஸ்டேஜ்ல நான் அவளை மேரேஜ் செய்யப் போறதா சொல்லிருக்காங்க…..இதெல்லாமே இப்ப இன்வெஸ்டிகேஷன்ல தான் தெரிஞ்சுது…..அப்போ ஒன்னுமே தெரியாது…..

அதுக்கடுத்து இங்க ரெண்டு டைம் உங்க அப்பா வீட்ல அன்னைக்கு ஆச்சுதுல்லயா ஷூட் அவுட்….பக்கத்து பில்டிங்ல இருந்து சூட் செய்றது அது மாதிரி மதி மேல நடந்துச்சு….ரெண்டு டைமும் ஜஸ்ட் மிஸ்…. அப்போ எங்களால என்ன நடக்குதுன்னு கூட கெஸ் செய்ய முடியலை…..ஆனா அடுத்து அது கன்டின்யூ ஆகலை….

அடுத்து ஒன் இயர்ல மதியும் லிடி ஆன்டியும் கனடால கூட்னி பாஸ்னு ஒரு இடம் இருக்கு…..அதுல போறப்ப அவலன்ச்ல அவங்க காரோட மிஸ்ஸிங்….. அஃபீஷியலி டெத்னு கவர்மென்ட்ல இருந்து சொல்லிட்டாங்க…..பட் இன்னுமே கூட அவங்க பாடி எதுவும் கிடைக்கலை….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.