(Reading time: 30 - 59 minutes)

வன் அனுமதி கிடைக்கவும் முதல் நொடி முகம் மட்டும் நீட்டிப் பார்த்துவிட்டு பின் முழுதாய் உள்ளே வந்தவள் இந்த மனோஹரி…. அந்த நொடி எட்டிப் பார்த்த அவளது ரோஜா மொட்டு முகமோ…..அந்த பாலுண்ட கண்களோ….அல்லது இப்பொழுதெல்லாம் அவன் பார்க்க தவிர்க்கும் அவளது இதழ்களோ…. பார்க்க தவிக்கும் அவள் முழு உருவமோ… அவன் மனதில் அப்போது படவே இல்லை……. அவள் உடை அழகோ உருவ நேர்த்தியோ….எதுவும் அவன் கருத்தில் பதியவே இல்லை….. ஐந்தரைஅடி உயர செல்லுலாய்ட் பொம்மை போல் அவளிருக்கிறாள் என்பதெல்லாம் உரைக்க கூட இல்லை…

அவளைப் பார்த்த அந்த நொடி இவனுக்கு உள்ளுணர்வில் தெள்ள தெளிவாக பட்டது ஒன்று ….இது இவன் வாழ்க்கையின் மிக முக்கியமான நொடி என்பதே…..அவளை உள்ளே வரச் சொன்னவன் உயிருக்குள்  உரைக்கிறது இவள் மிக மிக முக்கியமானவள் இவனுக்கு….இவனவள்…. என்று….. இதுவரையும் காதல் பற்றியோ  கல்யாணம் குறித்தோ எதைப் பற்றியும் பெரிதாக நினைத்துப் பார்த்தவன் இல்லை மித்ரன்….….அதுவும் படு நிச்சயமாக இன்னும் சில வருடங்களுக்கு அதைப் பற்றி யோசிக்க கூட தேவை இல்லை என அசைக்க முடியாத நம்பிக்கையில் இவன்  இருந்த நேரம்….இவளைக் கண்டதும் இப்படி ஒரு நிகழ்வு.

அவளைப் பார்த்த அந்த நேரத்திற்குப் பின்  அவளிடம் இவன் இயல்பாய் இருப்பதாய் காண்பித்துக் கொள்ளவே இவனுக்கு ஏக எஃபெர்ட் எடுக்க வேண்டி இருக்க….. அவளோ இவனை எதிரடையாய் ஏன் எதிரியாய் பார்த்தாள். ஆமாம் இவனைப் பார்க்கவும் அவள் முகத்தில் வெறுப்பு…எச்சரிக்கை உணர்வு…..கசப்பு…என…

அவளைப் பற்றி இவன் எதையும் தெரிந்து கொள்ளும் முன் ஃபைலை பிடிங்கிக் கொண்டு ஓடியும் விட்டாள்…..

மித்ரன் எப்போதுமே மேன் ஆஃப் இன்ஸ்டிங்க்ட்…அவன் உள்ளுணர்வு சோடை போனதில்லை….லாஜிகலி பார்க்கையில் அவள் இவனை தவிர்த்து ஓடிச் சென்ற விதத்திற்கும்…அதுவும் அவளைப் பற்றி எதுவும் தெரியும் முன் அவளை இழக்கிறேனே என்ற உணர்வில் வெளியேறியவளை ஓடிச் சென்று  இவன் கை பிடித்து நிறுத்திய செயலுக்கும் மீண்டும் இவன் இருக்கும் இடத்திற்கு அவள் திரும்ப வர சாத்தியமே இல்லை என்று இவனுக்கு புரிகிறது தான்.

ஆனாலும் அவள் என்னவளாய் இருந்தாள் திரும்பி வருவாள் என நினைக்க முடிந்தது அந்நேரம்.

அடுத்து அவள் ஆஃபர் லெட்டர் வாங்கியது தெரியவும்……அவனால் திட்டம் போடாமலெல்லாம் இருக்க முடியவில்லை….

“லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்னா எப்டி இருக்கும்னு எனக்கு தெரியாது மனு……ஒரே நொடியில ஒருத்தங்க இமோஷனாகி இந்த பொண்ணை கல்யாணம் செய்யனும்னு நினைக்க முடியும்னு எனக்கு இப்பவுமே தோணலை……உன்னைப் பார்க்கவும் இவதான் என்னோடவன்னு எனக்கு தோணுனது கண்டிப்பா எமோஷனல் தாட் கிடையாது…..நீ என்னைப் பார்த்து அவ்ளவு வெறுப்பா விலகிப் போயிருக்க……எனக்கானவளா இருந்தா மட்டும் நீ என்ட்ட திரும்பி வந்தா போதும்னு தான் அன்னைக்கு நான் ப்ரே பண்ணேன்….. திரும்பவும் வந்த….. அப்றம் நான் பயோசி வர ஆரம்பிச்சது மெயின்லி உனக்காகன்னு ஆகிட்டு……

நான் அதுவரை பயோசியோட எந்த மேனேஜ்மென்ட் ரோல்லயும் தலையிட்டது கிடையாது…..அதோட உள்ள நடப்பது எல்லாமே பயாலஜிகல் ரிசர்ச்……எனக்கும் பயாலஜிக்கும் எப்பவுமே ஏக தூரம்….. ஆனா உன்னை மீட் பண்ணனுமே…..அதுக்காகத்தான் உங்க பேட்சுக்குன்னு அந்த ட்ரைனிங்கே டிசைன் செய்தேன்…. நான் ட்ரெய்னிங் எடுக்கனும்னா என்ன எடுக்க முடியும்? அதான் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்னு டாபிக் வச்சுகிட்டேன்….”

அவன் சொல்லிக் கொண்டு போக முறைக்க முயன்றவளின் பார்வை முழுதுமாய் வெற்றி பெறாமல் சிந்திவிடாமல் அடக்கப்பட்ட சிரிப்பாக முடிவடைகிறது எனில்…. ‘அடப்பாவி என்ன ஒரு திட்டுத்தனம் ‘ என சொல்ல நினைத்த உதடோ “திருடா” என்பதோடு நின்று போகிறது…. அதில் ஒரு செல்லம் கொஞ்சல் தொனி இருந்தது என்பது அடுத்த விஷயம்

கண் சிமிட்டினான் அவன். “நான் என்ன செய்ய முடியும்னு சொல்லு……எனக்கு உன் மேல இன்ட்ரெஸ்ட் இருக்குதுனு டேட்டிங்க்கா உன்னை கூப்ட முடியும்?”

“ஓ அப்டி வேற நினைப்பு இருந்துச்சா?”

“சே சே….எனக்கு என் கன்னம் மேலலாம் ரொம்ப அக்கறைதாங்க மனு மேடம்….உங்க கையாலதான்னாலும் அடி வாங்குற ப்ளான்லாம் எதுவும் இல்லை….”

“ஓஹோ…..அப்றம் அன்னைக்கு திட்டம் போட்டு வாங்கினீங்களே அது என்னவாம்?” இவளை அகதனை காட்டி மிரட்டுவதைப் போல் ட்ராமா போட்ட அந்த நேரத்தில் இவள் மித்ரனை அறைந்தாள்தானே அதைக் குறிப்பிட்டாள் இவள்….

என்னதான் இலகுவாய் கேட்க நினைத்தாலும் மனது அப்படி எல்லாம் இலகுவாகி வர ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறது மனோவுக்கு….. ‘என்ன காரணமா இருக்கட்டுமே அன்னைக்கு அவன் என்ன விஷயம்னு அவட்ட சொல்லியிருக்கனும்தானே….’

“அது….மனுப் பொண்ணு சாரிடா….உன்ட்ட டீடெய்லா சொல்றேன் உனக்கே புரியும் ப்ளீஸ்மா….” அவன் கெஞ்ச ‘அறையும் வாங்கிட்டு சாரியும் கேட்கிறதைப் பாரு’ என மனம் செல்லமாய் அவனுக்காக சிணுங்கினாலும் அதை அவனிடம் சொல்ல இஷ்டபடவில்லை அவள் சுயம்.

“ம்… சரி சொல்லிட்டு இருந்தீங்களே அதை சொல்லுங்க….” சொன்னதை தொடர்ச்சியாய் சொல்ல எடுத்துக் கொடுத்தாள் பெண்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.