(Reading time: 26 - 52 minutes)

16. மனம் கொய்தாய் மனோஹரி - அன்னா ஸ்வீட்டி

Manam koithaai Manohari

நீ இதை என் இடத்துல இருந்து யோசிச்சுப் பாரு மனு….” சொல்லிய மித்ரன் இவனையே பார்த்திருந்த மனோகரியின்  கண்களை ஆழமாகப் பார்த்தான்.

“இன்னைக்கு நிலமையில நமக்கு இதைசெய்தது அந்த ஆடிட்டர்….அவரோட நோக்கம் என்னோட ப்ராபர்டி….அவரோட ப்ளாட்டோட அடிப்படை.. அப்பா எழுதி வச்ச உயில்னு நமக்கு எல்லாம் தெரியும்…..ஆனா அன்னைக்கு நிலமையில எனக்கு என்ன தெரியும்?....

என்னை விரும்புறாங்கிற ஒரே காரணத்துக்காக என் மனுவை யாரோ கொல்ல ட்ரைப் பண்றாங்க…..அந்த கல்ப்ரிட் எதுக்கும் துணிஞ்சவன்….. இதுக்கு முன்னால மதிய வேற இவன் மர்டர் செய்ய டரைப் பண்னிருக்கான்…..அதுல அவன் ஜெயிச்சுறுக்கவும் செய்யலாம்…..எப்டியோ மதி இல்லைனு ஆனபிறகுதான் அவன் தன் வேலைய நிறுத்திறுக்கான்……அதோட அத்தனை வருஷமா எனக்கு எதிரா வேலை செய்றவன்….அவ்ளவுதூரம் என்னோட ஒவ்வொரு விஷயத்தையும் கண்காணிச்சவனும் கூட……..

அவனுக்கு என் மேல என்ன கோபம்னு எனக்கு தெரியாது….நான் என்ன செய்தா அவன் இதை நிறுத்துவானும் எனக்கு தெரியாது….. என்னை லவ் பண்ற பொண்ணோட உயிரைத் தவிர வேற எதையும் அவன் என்ட்ட இருந்து டிமாண்ட் செய்யவே இல்லை….

ஆக அவனை நிறுத்த முதல் வழி உனக்கு என் மேல இஷ்டம் இல்லைனு நான் அவன்ட்ட காமிக்கனும்…..

அடுத்த பாய்ண்ட்…..மதி விஷயத்துல அவன் நேரடியா மர்டர் அட்டெம்ட்னு வயலன்ஸுக்கு போயிருக்கான்….ஆனா உன் விஷயத்துல அவன் முதல்ல நீயாவே விலகி ஓடனும்னுதான் ட்ரைப் பண்ணிருக்கான்…..அப்டின்னா உன் விஷயத்துல உனக்கு எதிரா செய்ற வேலையில அவன் மாட்டிக்க வாய்ப்பு இருக்குன்னு அர்த்தம்…..அதுவும் குறிப்பா இதுல அம்மாவும் ஏதோ வகையில சம்பந்தபட்டிருக்காங்க…..அம்மா கண்டிப்பா மர்டருக்குல்லாம் ஒத்துகிடுற ஆள் கிடையாது…..அதோட உனக்கு எதாவதுன்னா அம்மா அந்த கல்ப்ரிட்டை சந்தேகப் படவும் வாய்ப்பு இருக்கு…..அம்மா கண்ணுல அவன் பெரிய குற்றவாளியா தெரிஞ்சுறக் கூடாதுன்னு அவன் நினைக்கிறான்றதும் உன்னை கிட்நாப் செய்துட்டு ஒன்னும் செய்யாம விட்டுட்டுப் போன விதத்துல புரியுது….

ஆக உன் விஷயத்துல வயலன்ஸ் மர்டர்னு போறது அவனோட கடைசி ஆப்ஷனாத்தான் இருக்கனும்…. .டாக்டிக்கா உன்னை என்ட்ட இருந்து பிரிக்க வழி இருக்ற வரை அவன் மர்டர்ங்கிற முடிவுக்கு வரப் போறது இல்லை….

ஆக அதுக்காகவும் நீ விருப்பமில்லாமதான் என் கூட இருக்கன்னு நான் அவனுக்கு காமிக்கனும்….. உனக்கு விருப்பம் இல்லாம உன்ன நான் அடச்சு வச்சுறுக்கேன்னு அவன நம்ப வச்சா அவன் உன்னை என்ட்ட இருந்து ரெஸ்க்யூ செய்யத்தான் ட்ரைப் பண்ணுவானே தவிர மர்டர்னு போக மாட்டான் இல்லையா?

சரி இது எதுவும் வேண்டாம்…. நான் எதாவது ட்ராமா பண்ணி உனக்கு என்னை பிடிக்கலை அதனால ப்ரேக் அப் செய்துட்டோம்னு காமிச்சுட்டு…..கல்ப்ரிட்டை கண்டு பிடிச்சு ப்ரச்சனைய சால்வ் செய்துட்டு உன்னை வந்து மேரேஜ் செய்துக்கலாம்னு யோசிச்சா…..

என்னதான் இவங்க இப்ப பிரிஞ்சுட்டாலும் என்னைக்குனாலும் இவங்க சேர்ந்துக்க சான்ஸ் இருக்கு….இப்ப இந்த மித்ரன் அம்மாவும் இந்த பொண்ணை நான் என்ன செய்தாலும் என்னை சந்தேகப் பட மாட்டாங்க……ஏன்னா அவங்க தான் ஏற்கனவே பிரிஞ்சுட்டாங்களே…..என்ன இருந்தாலும் இவன் பாதையில அந்த பொண்ணு இல்லையேன்னு நினைப்பாங்க…..அதனால சேஃபர் சைடுக்கு இந்த பொண்ணை ஃபினிஷ் செய்துடலாம்னு நினைச்சுட்டான்னா??

 மதிக்கு செட் பண்ண மாதிரி ஒரு ஆக்சிடென்ட் எதாவது ப்ளான் செய்துட்டான்னா?..... மதிக்கும் எனக்கும் டிவோர்ஸ் ஆகிட்டுன்னு நியூஸ் வீட்டுக்கு போன பிறகும் அவளுக்கு ஆக்சிடெண்ட் நடந்துறுக்குதானே…… ஆக உன்னை நான் லவ் பண்றேன்னு என் அம்மா நினைக்கிற வரைக்கும்தான் அந்த கல்ப்ரிட் வயலன்ஸ் மர்டர்னு போகாம இருக்க சான்ஸ் இருக்கு…….. அதுக்கு பிறகு அவன் என்ன வேணும்னாலும் செய்யலாம்….. ஆக ப்ரேக் அப் ட்ராமா ஆட வழி இல்லாம போய்ட்டு…

அதோட  மதிபா மர்டர் அட்டெம்ட்டே இன்னும் சால்வ் ஆகலை……யாரு கல்ப்ரிட்டா இருக்க முடியும்னு க்ளூ கூட இல்லை……அதுவும் 6 வருஷமா…. அதில் இந்த கல்ப்ரிட்டை நான் ட்ரேஸ் செய்துட்டு வர இன்னும் எத்தனை வருஷம் ஆகுமோ….? ப்ரேக் அப் ட்ராமன்னு ப்ளான் செய்தா…..அது வரைக்கும் உன்னை நான் வெயிட் பண்ண சொல்லனும்…..பாதுகாக்கவும் செய்யனும்…..

கல்ப்ரிட்டைக் கண்டுபிடிக்க இன்னும் ஒரு 6 வருஷம் ஆகும்னு எடுத்துக்கிட்டா கூட…. 6 வருஷமா ஒருத்தரை ஒருத்தர் பார்க்காம பேசாம நாம வெயிட் பண்ண ரெடியாவே  இருக்கோம்னு வச்சுகிட்டாலும்…..இன்னும் 6 வருஷம் கழிச்சுதான் உனக்கு மேரேஜ்னா உன் அம்மா அப்பாக்கு அது எப்டி இருக்கும்?

 அதோட ஒவ்வொரு நொடியும் 6 வருஷமா உனக்கு எந்த வகையில ஆபத்து வருமோன்னு நாம சேஃப்டிக்காக பயந்துட்டு வேற இருக்கனும்…. உனக்கான அத்தனை சேஃப்டி மெஷர்ஸும் நான் தான் செய்றேன்னு அந்த கல்ப்ரிட்டுக்கு தெரியாம வேற  செய்யனும்….. இது நடைமுறையில எவ்ளவு சாத்தியமில்லாத விஷயம்….. சின்னதா அந்த கல்ப்ரிட்டுக்கு டவ்ட் வந்தாலும்…..அவன் என்ன செய்வானோ? அதுவும் 6 வருஷத்துல இது சால்வ் ஆகிடும்னு எந்த நிச்சயமும் கிடையாது…. ஆக நடைமுறையில் இது எந்த வகையிலும் சாத்தியபடாத ப்ளான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.