(Reading time: 26 - 52 minutes)

சி இ ஓ ரூம்க்கு சி ஓ வைப் பார்க்க வந்தவ நீ….அங்க என்னைப் பார்க்கவும் சி இ ஓ ன்னு தான நினச்சிருப்ப…..? ஆக நான் நேஷன் க்ரூப்ஸ் வாரிசுன்னு உனக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்….. உன் இடத்துல யார் இருந்தாலும்…..என்னை அவங்களுக்கு பிடிக்கவே இல்லாமல் இருந்தாலும்…..அந்த இடத்துல அந்த வெறுப்பை காமிச்சுகிட்டு இருக்க மாட்டாங்க……சாந்தமா விலகிப் போயிருப்பாங்க…. என் சோ கால்ட் ஃபேமிலி பேக்ரவ்ண்டுக்கு என்ட்ட மோத பயப்படுவாங்க……உனக்கும் இத்தனைக்கும் என் மேல பயம் இருந்தாலும் உன் முகத்தில நீ வெறுப்பை அப்டியேத்தான் காமிச்ச……

அடுத்த நம்ம மீட்டிங்…..அந்த ஃபர்ஸ்ட் டே ட்ரெய்னிங் …… நான் உனக்கு அங்க ரிபோர்டிங் ஹெட்….எல்லார் முன்னாலயும் நீ என்னை என்ன சொன்ன? பொறுக்கின்னு உன் மனசுக்கு பட்டதை அப்படியே சொன்ன….”

“…………”

“பொதுவா காரியம் ஆகனும்றதுக்காக….ப்ரச்சனை ஆகிடக் கூடாதுங்குறதுக்காக…..ஏன் கர்டசிக்காக கூட… பிடிக்கலைனாலும் அதை வெளிய காமிச்சுகாம போறவங்கதான் அதிகம்….ஆனா நீ அப்டி கிடையாது…. நான் கவனிச்ச வரைக்கும் சின்னதா அடுத்தவங்கள அப்ரிசியேட் செய்யனும்னா கூட நீ அதுவும் உண்மையா இருக்கனும்னு நினைக்ற டைப்… அடிப்படையில உனக்கு எந்த சூழல்லயும் எத்தனை பயமே இருந்தாலும் கூட உண்மைய அப்படியே முகத்துல காட்ற குணம்…..”

“சோ நான் உண்மையா இருக்றதுக்கு தான் இந்த பனிஷ்மென்ட் தந்தீங்க போல…?”  கோபம் குறைந்து வந்திருந்தாலும் மனோவின் குரலில் குத்தல் நிறையவே இருந்தது.

“என்ன மனு நீ? எனக்கு உன்ட்ட ரொம்ப பிடிச்ச விஷயங்கள்ல இந்த உண்மைய நேசிக்ற உன்னோட இந்த குணமும் ஒன்னு….”

“…….”

“நாங்க எப்படி யோசிச்சோம்னா…..உன் நேச்சர்க்கு நீ விஷயத்தை புரிஞ்சிட்டு….இந்த ட்ராமாக்கு ஓகே பண்ணி கல்யாணத்துக்கும் சரின்னு சொல்லிடுவ….. அடுத்தும் ஃபோர் ஃபைவ் டேஸ்….ஏன் ஒன் வீக் வரைக்கும் ஹேண்டில் பண்ணிடுவ…..ஆனா அது மாசக் கணக்கா தொடர்றப்ப உனக்கு இந்த போலித்தனம் ஸ்ட்ரெஸ் ஆகும்…. அடுத்தவங்க முன்னால தன் இமேஜ்காக எப்பவும் முகமூடியோட இருக்ற சராசரி மனுஷங்களுக்கு இது வேற…..ஆனா உனக்கு அப்டி இல்லை…. ஒவ்வொரு நொடியும் நீ நீயா இருக்க முடியாதுனா நீ எப்டி இருப்ப?

ஆனா அதே நேரம் அகதன்ட்ட சொல்லி உன்ட்ட மட்டும் சொல்லலைனா உனக்கு கண்டிப்பா கோபம் வரும்…..அதுக்கான காரணத்தை நான் சொல்றவரைக்கும் நீ கண்டிப்பா என்ட்ட முகத்த தூக்கிகிட்டுதான் இருப்ப…. என்னதான் உனக்கு என்னை பிடிச்சா கூட நானே உன் பக்கதுல வந்தாலும் விலகித்தான் போவ….மத்தபடி உனக்கு அது  நடிக்கிற அளவுக்கு ஸ்ட்ரெஸ் ஆகும்னு சொல்ல முடியாது…..

ஞாபகம் இருக்கா……அந்த கிட்நாப் ட்ராமால வர்ஷன் ரூமை விட்டு நாம வெளிய வரவும் ஒரு நிமிஷம் அழுதியே……உன்னையையும் நடிக்க வச்சுட்டேன்னுதான அழுத அப்ப….அதே இது மும்பைல வச்சு என்னதான் என்ட்ட முகத்தை திருப்பிகிட்டு இருந்தாலும் ரிலாக்‌ஸா தானே இருந்த….ஏன்னா ரியலா இருக்றது நிம்மதி… அதான்…..” மித்ரன் விளக்க அவனை ஒரு நொடிப் பார்த்த மனோ

“எப்டித்தான் இது அந்த ஆடிட்டரோட வேலைனு கண்டு பிடிச்சீங்க? “ என அடுத்த கேள்விக்குப் போனாள். அவனது விளக்கத்தை ஏற்றாளா இல்லையா என எதையும் அவள் சொல்லவில்லை என கவனித்துக் கொண்டாலும் மித்ரன் அவள் கேள்விக்கே பதில் சொல்ல முனைந்தான்.

“அம்மாவுக்கும் கல்ப்ரிட்டுக்கும் ஆஃபீஸுக்கும் எதோ லிங்க் இருக்குன்னு தெரியுமில்லையா அதனால ஆஃபீஸ்லதான் ட்ராமா செட் செய்யனும்னு முடிவு செய்திருந்தேன்…..அதிலயும்  உன்னை மிரட்டுற மாதிரி செட் செய்தனே அந்த ரூம்….

உண்மையில் அந்த ரூம் அண்ணாவோட பெர்சனல் ரூம்…..அண்ணி கொஞ்சம் முன்னால வரை பயோசில வர்க் பண்ணிருக்காங்க……பயோசி  ஒரு பயாலாஜிகல் ரிசர்ச் சென்டர்….சோ அங்க டைமிங்க் முன்ன பின்ன இருந்திருக்கு….நிறைய நாள் லேட் ஆகுற டைம்ல அந்த ரூமை அண்ணி கூட தங்குறதுக்கு வர்ஷன் யூஸ் செய்துறுக்கான்…..

அடுத்து நான் வரவும் சில காரணத்துக்காக அங்க தங்க ஆரம்பிச்சேன்…. அப்ப என்னை மானிடர் செய்றதுக்கா இருக்கும்….அந்த ரூம்லயும் கொண்டு வந்து கேமிரா ஃபிக்‌ஸ் செய்தாங்க ஆஃபீஸ் ஆட்கள்…..  அதுக்கு அம்மா அப்பவே ரொம்ப ஸ்ட்ராங்கா ரியாக்ட் செய்தாங்க…..இப்பதான் செய்றீங்களா…இல்ல வர்ஷன் இருக்கப்பவே இப்டிதான் செய்துட்டு இருந்தீங்களா….? என்ன இருந்தாலும் என் பையனோட பெர்சனல் ரூம்ல போய் எப்டி கேமிரா செட் பண்ணுவீங்க?ன்னு கோபபட்டு…. அஃபீஷியலி அதுக்கு யார்லாம் அப்ரூவல் கொடுத்துறுந்தாங்களோ அத்தனை பேரையும் வேலையவிட்டு போக சொல்லிட்டாங்க….எப்டியும் வர்ஷனோட ரூம் இல்லையா…..எப்டியோ பயந்துட்டாங்க போல….

அடுத்து  கேமிராவை எடுத்தாச்சுன்னு ஆஃபீஸ்ல இருந்து அஃபீஷியலா ரிப்போர்ட் போயிருந்தது….. ஆனாலும் கேமிராவை எடுக்கலை…..

எனக்கு வேற ஒரு காரணத்துக்காக கேமிரா தேவைப் பட்டுது… அதானால நானும் அதை அப்டியே விட்டு வச்சிருந்தேன்….. அதோட நான் இன்வெஷ்டிகேஷன்க்கு வந்திறுக்க மாதிரி தோண கூடாதுன்னு இந்த காமிரா பத்தி எனக்கு தெரிஞ்ச மாதிரியே காட்டிகலை…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.