(Reading time: 26 - 52 minutes)

துல நடந்த இன்னொரு விஷயம் என்னன்னா அடிக்கடி அந்த கேமிராவை யாரோ டெக்னிகலி கரப்ட் செய்து வச்சுடுவாங்க….எதையும் அதால ப்ராப்பரா ரெகார்ட் செய்ய முடியாதபடி….

என்னை வாட்ச் செய்றவங்க உடனே திரும்ப திரும்ப அதை சரி செய்து வச்சுட்டு இருந்தாங்க…. அதாவது அந்த காமிரால என்ன ரிகார்ட் ஆகுதுன்னு அல்மோஸ்ட் தினமும் என்னை மானிடர் செய்றவன் பார்த்திருக்கனும்…..சோ கல்ப்ரிட் ஆஃபீஸ் கூட டச்ல இருந்தா கண்டிப்பா அந்த கேமிரா அவன் ஏற்பாடாதான் இருக்கனும்…..அதனால அந்த ரூம்ல நம்ம ட்ராமாவ வச்சா கல்ப்ரிட் நம்ம ட்ராமவைப் பார்ப்பானே தவிர அதை அம்மாட்ட போய் சொல்ல முடியாது….. ஆக அம்மாவை பிக்சர்ல இழுக்காம அவனா விஷயத்தை ஹேண்டில் செய்ய ட்ரைப் பண்ணுவான்…..அப்ப அவனை பிடிக்கிறது ஈசின்னு பட்டுது….”

அது ஏற்கனவே வழக்கமா ரிப்பேராகுற கேமிரான்றதால அதோட லென்ஸை மூடிட்டு…ஆடியோ மட்டும் கேப்சர் பண்ற மாதிரி மைக்கை மட்டும் ஓபனா விட்டுறுந்தேன்…..ஆக நம்ம சீன் எதுவும் வெளிய போகாது….நீ அடிச்சதுல இருந்து அகதன் நடிச்சது வரை எதுவும்….ஆனா நடந்த விஷயம் என்னனு வாய்ஸ்ல மட்டும் போகும்….

நான் எதிர் பார்த்த மாதிரியே அந்த ஆடிட்டர் அதை கேட்டுட்டு…..அம்மாட்டயும் போகாமதான் காய் நகர்த்திறுக்கான்……. ஆனா நான் எதிர் பார்த்த இடத்தில் இல்லாம விஜிலா அண்ணிட்ட…

உன் அப்பாட்ட என் அம்மா அப்பா பத்தி இன் அண்ட் அவ்ட் சொன்னேனாலும்….. இந்த ப்ரச்சனையை ஓரளவாதான் சொன்னோம்….இன் அண்ட் அவ்ட் சொன்னா அவங்களுக்கு எப்பவும் நிம்மதி இல்லாம இருக்குமேன்னு…..ஆனாலும் அவங்க உடனே மேரேஜ் இருந்தாலும் சரிதான்னு சொன்னாங்க…..

இருந்தாலும் மேரேஜ் லைஃப்டைம் அக்கேஷன்…..எல்லா வகையிலும் திருப்தியா நடக்கனும்னுதான் நான் 7 டேஸாவது இருக்கட்டும்னு பார்த்தேன்…. அதுவும் அந்த டேஸ்ல மும்பைல உள்ள வீட்டுக்கு போய்ட்டா ஒன் ஆர் டூ டேஸ்ல நானும் நீயும் அங்க இருக்கோம்னு நியூஸ் சர்வென்ட்ஃஸ் வழியா அம்மாக்கு போகும்….வெட்டிங் டேட் ஃபிக்‌ஃஸ் ஆகிட்டு….விசாக்காக அலஞ்சுட்டு இருக்கோம்…தனி தனியாதான் தங்கி இருக்கோம்ன்ற வகையில அம்மா கொஞ்சம் ஈஸியா எடுத்துப்பாங்க…..பெருசா ரியாக்ட் செய்ய மாட்டாங்க….

அதே நேரம் நாம ட்ராமா போட்ட மறுநாள் அதை கேமிரால கேட்டுட்டு அந்த கல்ப்ரிட் நம்ம தேடத் தொடங்குவான்….அம்மாவோட வீட்ல இருக்கோம்ன்றப்ப அவன் மாட்டிக்காம இருக்றதுக்காக அடக்கியே வாசிப்பான்….ஆனாலும் ஒரு வேளை அதிசயத்தில் அதிசயமா உன்னை அப்பவே ரெஸ்க்யூ செய்ய ட்ரைப் பண்ணாலும் தேவையான செக்யூரிடியோட நான் உன் பக்கத்துல இருக்றதால அவன் ப்ளான ஃபாலோ பண்ணி அவனை பிடிக்கலாம்னு நினைச்சிருந்தேன்….

எப்டினாலும் அவன் மும்பைல நாம இருக்கோம்னு கண்டு பிடிச்சு நம்மை மானிடர் செய்ய ஆரம்பிக்க மறுநாளே வந்து நிக்க முடியாதுன்னு தான் …..உனக்குன்னு ஜுவல் ஆர்டர் கொடுக்க உன்னையும் கூட்டிட்டுப் போனேன்….அதுக்கு அடுத்த நாள்ள இருந்து உன்னை அவ்ளவு ஈசியா இன்னும் சில மாசம் வெளியன்னு எங்கயும் கூட்டிட்டுப் போக முடியாதோன்ற நிலை….

அப்பதான் இன்பாவைப் பார்த்தோம்….அவ பேச்சுக்கு இடையில் ஏதேச்சையா அப்பா உயில் பத்தி சொன்னா…. அதுவும் மேரேஜ் ஆன பிறகு சொத்து கைக்கு வரும்னு அப்பா எழுதிறுக்காங்கன்னு சொன்னா…. அப்பா டெத் சடன் டெத்….எதிர் பார்க்காததும் கூட…..அதனால அப்பா உயிலே எழுதிறுக்க மாட்டாங்க……அப்பாவோட முதல் வைஃபோட பிள்ளைங்கன்னு  வர்ஷனுக்கும் இன்பாக்கும்…. வைஃப்ன்றதால அம்மாக்கும் ப்ராபர்டி அதா போயிருக்கும்…..நான் சட்டப்படி அடாப்ஷன் கொடுக்கபட்ட பையன் இல்லையா அதனால எனக்குன்னு எதுவும் வந்திறுக்காதுனு தான் அதுவரைக்கும் நான் புரிஞ்சு வச்சிறுந்தது….அதனால நான் அதை கண்டுகிட்டதும் இல்லை….

ஆனா அப்பா ரொம்பவும் ப்ரின்சிபிள்ட் மேன்…..அதோட எப்ப அவங்களுக்கு எது ஆனாலும்…ஏன் ஆக்சிடென்ட் ஆகிட்டா கூட எனக்கு யாருமில்லாமலும் போயிருவாங்க… எதுவும் இல்லாமலும் போயிரும்னு அவங்களுக்குள்ள ஒரு தவிப்பு இருந்திருக்குது…… அதனால அப்பவே உயில் எழுதி வச்சிருக்காங்க….. இதை எனக்கான உயில்ல இப்பதான் பார்த்தேன்….

அப்பா உயில் எழுதி இருக்காங்கன்னு இன்பா மூலம் தெரிஞ்சதுமே நிச்சயம் அப்பா எனக்கும் கண்டிப்பா ப்ராபர்டில பங்கு கொடுத்துறுப்பாங்க…… வர்ஷன் இன்பா மாதிரி எனக்கும் மேரேஜுக்கு பிறகு அது வர்ற மாதிரி இருக்கும்னு எனக்கு புரிஞ்சிட்டு…..

அப்பாக்கு அம்மா எனக்கு பங்கு கொடுக்றதுன்ற வகையில நியாயமா நடந்துக்க மாட்டாங்க… அந்த பாட்டி சொல்லிட்டா போதும் எல்லாத்தையும் வர்ஷனுக்கும் இன்பாவுக்கும் தூக்கி கொடுத்துடுவாங்கன்னு  தெரிஞ்சிருக்கும்…அதனால எனக்கான பங்கு பத்தி அம்மா கைல பொறுப்ப அப்பா ஒப்படச்சிறுக்க மாட்டாங்க…. வேற யாராவது நம்பிக்கையான ஆளா தான் பார்த்திறுப்பாங்க…அங்க இருந்து தான் இந்த ப்ரச்சனை வருதா இருக்கும்னு வரைக்கும் என்னால கெஸ் செய்ய முடிஞ்சுது….

அதே நேரம் இன்பா தூரத்துல ஒரு பொண்ணைப் பார்த்துட்டு பேச்சை நிறுத்தினா…..அவ வழியா என்னை இன்பா மீட் செய்த விஷயம் உடனே அம்மாட்ட போயிடும்ன்ற மாதிரி அவ ஹிண்ட் செய்தா……அப்டின்னா அந்த பொண்ணு அம்மாவுக்கு ரொம்ப க்ளோஸா இருக்கனும்னு பட்டுது…..அந்த பொண்ணு தார்கிகா அப்பாவோட நேஷன் க்ரூப்ஸின் மொத்த ஆடிட்டிங்கும் பார்த்துக்கிற மாசிரனோட பொண்ணுனு ஏற்கனவே தெரியும்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.