(Reading time: 7 - 14 minutes)

09. கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - தங்கமணி சுவாமினாதன் 

Koncham periya kuzhanthaigalukkana kathai ithu

ண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறே தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள் அப்பெண்.

செவ்வாய்ப் பட்டினம் என்ற அந்த சிறிய ஊர் இந்த அரசமாளிகை அமைந்திருக்கும் இவ்வூருக்கு வெகு தொலைவில் இருந்தது.அவ்வூரில் கதிரேசன் செட்டியார் பெரிய தனவந்தர்.வியாபாரி.மிக நேர்மையானவர்.

அவருக்கு சுந்தரேசன் என்ற மகனும் ஹேமாவதி என்ற மகளும் இருந்தனர்.ஹேமாவதி மிகவும் அழகு.பதினெட்டே வயது...அவள் அப்பா அம்மா அண்ணன் மூவருக்குமே செல்லம். அவள் கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும்.அவள் வாழ்வில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

அவ்வூரில் கருப்புசாமி கோயில் ஒன்று இருந்தது.வருடந்தோறும் அக்கோயிலில் பத்து நாட்கள் திரு விழா நடக்கும்.அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாய் திருவிழா காண வருவார்கள்.

பத்து நாட்களும் செவ்வாய்ப் பட்டினமே குலுங்கிப் போகும்.காலை முதல் இரவு வரை விடிய விடிய கேளிக்கைகள் நடக்கும்.ஒரே அமக்களம்தான்.

அப்படித்தான் திருவிழாவில் கலந்து கொள்ள முதல் நாளே அவ்வூருக்கு வந்தான் குணசேகரன்.ஆணழகன்.

பயிற்சி செய்து செய்து வலுவேற்றிய உடல். வல்லவன்.. நல்லவன்...பண்பாளன்.செவ்வாய்ப் பட்டினத்திலிருந்து நாற்பது கல்  தொலைவிலிருக்கும் காசிப்பட்டனம் அவன் ஊர்.சிலம்பாட்டத்தில் தேர்ந்தவன்.

திருவிழாவின் முதல் நாள்.கோயிலில் கூட்டம் கூட்டம் கூட்டமோ கூட்டம்.ஹேமாவதி தன் தோழிகள் புடை சூழ கோயிலுக்கு ஆஜரானாள்.பெரிய வீட்டுப் பெண் என்பதால் அவளுக்கு ஏக மரியாதை.கருப்புசாமி தேரில் புறப்பட அவருக்கு அளிக்கப்படும் முதல் மரியாதையாக சிலம்பாட்டம் ஆரம்பிக்க அதில் கலந்து கொண்டான் குணசேகரன்.சிலம்பாட்டம் ஆடுபவர்களைச் சுற்றி மக்கள் நின்று வேடிக்கைப் பார்த்தனர்.

அவர்களில் ஒருத்தியாய் பெண்கள் பக்கம் தன் தோழியர்களோடு ஹேமாவதி நிற்க அவள் தோள் மீது ஒரு கை விழுந்தது.

சற்றே பின்புரம் கழுத்தைத் திருப்பிப்பார்த்தவள் தீயை மிதித்தவள் போலானாள்.அவள் தோள் மீது கையைப் போட்டபடி அவளை ஒட்டி நிற்க முயன்றான் அவன்.ஊரறிந்த போக்கிரி அவன்...குடிகாரன்..மிக மோசமான் நடத்தை உள்ளவன்.நீண்ட நாட்களாய் ஹேமாவதி மீது ஒரு கண் வைத்திருப்பவன்.அவளை அடைய முயன்று தோற்றவன்.அவன் பெயர் காத்தவராயன்.

தன் தோள் மீது கைவைத்தபடி நிற்கு அவனைப் பார்த்து முதலில் பயந்து போனாள் ஹேமாவதி.அடுத்த நொடி பெண்புலியென சீற்றம் கொண்டவள் பொளீர் என அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.அவளின்

அறையை சற்றும் எதிர்பாராத காத்தவராயன் நிலை தடுமாறிப்போனான்.இந்த காட்சியைக் கண்ட கூட்டம் விக்கித்துப்போய் நின்றது.சிலபேர் இவன் அறை வாங்கி நிற்பதைக்கண்டு கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

அவமானத்தால் கண்கள் சிவக்க கடுங்கோபம் கொண்ட அந்த போக்கிரி அவளைப் பழிவாங்க எண்ணியவனாய் ஹேமாவதியின் மேலாடையைப் பற்றி இழுக்க கத்தினாள் ஹேமாவதி.கூட்டம் மருண்டது.அனைத்தையும் பார்த்தபடி கையில் சிலம்பக் கம்புடன் நின்றிருந்த குணசேகரன் சற்றும் தாமதிக்காது முரடன் காத்தவராயன் மீது பாய்ந்து சிலம்பக் கம்பினால் அவனை நையப் புடைத்தான்.

 ஆக்ரோஷத்தோடு போக்கிரியின் மீது பாய்ந்து தாக்கும் குணசேகரனைப் பார்தபடி நின்றிருந்த ஹேமாவதியின் நெஞ்சுக்குள் அவன் காத்தவராயனை அடிக்கும் ஒவ்வொரு அடிக்குப் பிறகும் கொஞ்சம் கொஞ்சமாய் இறங்க ஆரம்பித்தான்.அடிமனது வரை இறங்கி பின் நெஞ்சு முழுதும் விஸ்வரூபம் எடுத்து நிறைந்தான்.முடிந்தது... காதலில் விழுந்தாள் ஹேமாவதி.

தோய்த்துப் பிழியப்பட்ட துணி என நிலத்தில் கிடந்தான் காத்தவராயன்.மனம் பொருமியது.கருவினான் அவன்.

அவனால் தங்கள் வாழ்வில் எத்தகைய தீங்கு விளையப் போகிறது என்பதை அறியாத ஹேமாவதியும் குணசேகரனும் கண்களும் கண்களும் கலந்து உறவாட நெஞ்சத்தைப் பறிமாரிக்கொண்டனர்.அங்கே ஒரு

காதல் அத்தியாயம் அரங்கேறியது.பாவம் அவர்கள்.

ஹேமாவதி வீடு திரும்புவதற்குள் அவள் சந்தித்த ஆபத்து அவளின் வீட்டுக்கு யாராலோ தெரிவிக்கப்பட பயந்து போன பெற்றோர் அவளை கிட்டத்தட்ட வீட்டுக் காவலில் வைக்க வெளியில் செல்ல முடியாமலும் இன்னும் பெயரைக்கூட தெரிந்து கொள்ளாத காதலனைப் பார்க்க முடியாமலும் தவித்தாள் ஹேமாவதி.

இங்கு இவள் நிலை இப்படி என்றால் குணசேகரனின் நிலைமையும் இப்படியே இருந்தது.தவித்துப் போனான் அவன்.

தோழிகள் மூலம் தூது நடந்தது.ஒருவர் பற்றி ஒருவர் விபரம் அறிந்தனர்.பார்த்துக் கொள்ளாமலே காதல் வளர்ந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.