(Reading time: 7 - 14 minutes)

முடிவுக்கு வந்தது பத்து நாள் திருவிழா.ஒற்றை ஆளாய் விழா பார்க்க வந்தவன் மனம்.. காதல் சுமையால் கனத்துப் போனதால் கன்னியின் வீடு நோக்கிக் கால்கள் நடக்க... வந்து நின்றான் பாவையின் வீட்டு முன்.

யாரோ அன்னியன் என நினைத்து கன்னியின் தந்தை அவனை உள்ளே அழைக்க மகளின் காதல் நாடகம் ஆங்கே அம்பலமானது.

ஆத்திரமடையா தந்தை அவன் குலம் கோத்திரம் குடும்ப பிண்னணி அறிந்து இவன் அழகன் பேச்சில் நல்லவன் வார்த்தையில் பண்பாளன் குணத்தில் குற்றமில்லாதவன் நடத்தையிலும் நல்லவனாகவே இருப்பான் என எண்ணி இருவரின் காதலை ஏற்றுத் திருமணத்திற்கு ஒப்புதல் தர திருமணமும் இனிதே நடந்தேறியது.

மாதங்கள் மூன்று திருவிழா தேர் போல விரைவாய் ஓடியது.குணசேகரனும் ஹேமாவதியும் நகமும் சதையும் போல் புளியம் பழமும் ஓடும் போல் பூவும் மணமும் போல் பாலும் வெண்மையும் போல் செல்போனும் வயசுப் பசங்களையும் போல் இணை பிரியாமல் இன்பம் நுகர்ந்து வாழ்ந்தார்கள்.

மனைவி ஹேமாவதியை அழைத்துக் கொண்டு சொந்த ஊரான காசிப்பட்டனம் செல்ல வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது குணசேகரனுக்கு.தன் எண்ணத்தை மாமனாரிடம் சொல்ல சம்மதம் தெரிவித்தார் அவரும்.

காசிப்பட்டனம் செல்ல நாள் குறிக்கப் பட்டது.மரியாதை நிமித்தமாக.. குணசேகரன்-ஹேமாவதியோடு ஹேமாவதியின் அண்ணன் சுந்தரேசனும் செல்வதாகத் தீர்மானிக்கப்பட்டது.

வீட்டு வாசலில் வந்து நின்றன மாடுகள் பூட்டப்பட்ட கூண்டு வண்டிகள் இரண்டு.முதல் வண்டியில் ஹேமாவதியின் அண்ணன் சுந்தரேசனும் அடுத்த வண்டியில் குணசேகரனும்- ஹேமாவதியும் ஏறி அமர்ந்தனர்.

அவர்களோடு விதியும் ஏறி வண்டியில் அமர்ந்தது.

செப்பனிடப்படாத கரடு முரடான சாலை.மேடும் பள்ளமுமாய் முட்களும் கட்களுமாய் இருக்க .ஆடி ஆடி அசைந்து அசைந்து மிக மெதுவாகச் சென்றன வண்டிகள்.எங்கேயாவது குளமோ ஆறோ கண்களில் தென் பட்டால் வண்டியை நிறுத்திக் கீழே இறங்கி உணவு அருந்தி கால்கை அலம்பி சிறிது நேரம் ஓய்வெடுத்து மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தனர் மூவரும்.

சாலையின் இருபுரமும் ஓங்கி உயர்ந்த மரங்கள்.வண்டிகள் போய்க்கொண்டே இருந்தன.அப்போது வழியில் மரங்களுக்கிடையே தூரத்தில் கோயில் ஒன்று தெரிந்தது.

சட்டென வண்டியை நிறுத்தும்படி வண்டி ஓட்டியைச் சொன்னான் குணசேகரன்.வண்டி நிறுத்தப் பட வண்டியிலிருந்து இறங்கினான் அவன்.அவனோடு கூடவே விதியும் இறங்கியது.

ஹேமாவதி வண்டியிலிருந்து இறங்கிய குணசேகரனைக்  கேள்விக் குறியோடு பார்த்தாள்.

ஹேமாவதி..அழைத்தான் குணசேகரன்..

சொல்லுங்கள் அன்பரே..

ஹேமாவதி.. அதோ பார்..மரங்களுக்கிடையே தூரத்தில் தெரிந்த கோயிலை விரல் நீட்டிச் சுட்டிக்காட்டினான்

ஆம் கோயில் தெரிகிறது...சொன்னாள் ஹேமாவதி..

அது ஒரு காளி கோயில்.மிக சத்தி வாய்தவள் அக்காளி.வேண்டுபவர்க்கு வேண்டியதை வரமாக அளிப்பவள். மிக உக்கிரமானவள்.பார்த்தாலே பயம் தரும் தோற்றமுடைய சிலை வடிவினள்.உனை முதலில் கண்டபோது நீயே எனக்கு மனைவியாக வர வரம் தரவேண்டுமென இக்காளியைத்தான் நான் மனமுருக வேண்டிக் கொண்டேன்.அதுவே நடந்தது இவள் அருளால்.எனவே என் வேண்டுதலை நிறைவேற்றித் தந்த காளியை வணங்கி நன்றி தெரிவித்து வர விரும்புகிறேன் என்றான் குணசேகரன்.

அப்படியாயின் நானும் உம்மோடு வருவேன்...அக் காளியை வணங்க நானும் விரும்புகிறேன்.திருமணமான நாம் இருவருமாய் அவளை வணங்குவதுதானே முறை?என்றாள் ஹேமாவதி.

இல்லை..இல்லை..அவசரமாய் மறுத்தான் குணசேகரன்.இல்லை ஹேமாவதி இது நடுப்பகல்.உச்சி காலம். இவளைப் போன்ற உக்கிரமான தெய்வங்களின் கோயிலுக்கு இன்னேரங்களில் உன்னைப் போன்ற இளம் பெண்கள் செல்லக்கூடாது.அதுவும் இவள் தோறறமே கர்பமும் கலைந்து போகும் அளவுக்கு பயங்கரமானதாய் இருக்கும். எனவே நீ அவ்விடம் வர வேண்டாம் என்றான் தீர்மானமாக.

ஹேமாவதியும் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை.

இவர்களின் உரையாடலைக் கேட்டபடி இருந்த சுந்தரேசன் குணசேகரனோடு தானும் வருவதாகச் சொல்ல இல்லை.. மைத்துனரே..நீங்கள் என்னோடு வருவீராயின் இங்கே ஹேமாவதிக்கு யார் துணையாய் இருப்பர்? நீங்கள் இவளுக்குத் துணையாய் இருங்கள்.இதோ ஒரு நொடியில் நான் போய் காளியை வணங்கி விட்டுத் திரும்பி வருகிறேன் என்றான்.

அவன் சொல்வதிலும் நியாயம் இருப்பதாக எண்ணிய சுந்தரேசன் மறு பேச்சுப் பேசவில்லை.

சுந்தரேசனும் ஹேமாவதியும் அவ்விடமே தங்க.. குணசேகரன் தான் மட்டுமாய் கோயிலை நோக்கி நடந்தான்.

விதியும் அவன் பின்னால் நடந்தது. 

விதி பின்னால் நடந்து வர முன்னால் நடந்து செல்லும் குணசேகரனுக்கு கோயிலில் நடப்பதென்ன..? அடுத்த வாரம் பார்ப்போமா..? நன்றி..

தொடரும்...

Episode 08

Episode 10

{kunena_discuss:956}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.