(Reading time: 4 - 7 minutes)

10. கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - தங்கமணி சுவாமினாதன் 

Koncham periya kuzhanthaigalukkana kathai ithu

குணசேகரன் கோயிலை அடைந்தபோது கோயில் கதவு திறந்தே இருந்தது.உள்ளே நுழைந்தான் குணசேகரன்.

காளியின் முகத்தைப் பார்க்க வேண்டுமானால் அண்ணாந்து பார்க்க வேண்டும்.அவ்வளவு உயரமான சிலை.

உக்கிர காளி என்ற பெயருக்கு ஏற்ப படு பயங்கரமாய் இருந்தது சிலையின் தோற்றம்.ஒரே உடலில் ஒன்பது தலைகள்.பதினெட்டு கரங்கள்.பெரிய பெரிய விழிகள்.நெறிந்த புருவங்கள்.கோரைப் பற்கள்.உக்கிரமான பார்வை.ரத்தம் குடித்ததுபோல் சிவந்தவாய்கள்.சில கரங்களில் பயங்கர ஆயுதங்கள்.சில கரங்களில்

மண்டை ஓடுகள்.சிலவற்றில் அசுரனின் அறுபட்ட கழுத்துகள் ரத்தம் வ்டிவதைப்போல் வண்ணம் பூசப்பட்டு.

மொத்தத்தில் சிலையின் தலை முதல் பாதம்வரை பார்ப்பவரின் மனதில் பீதியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.குணசேகரன் சொன்னது போல் கர்பவதிகள் பார்த்தால் கர்ப்பம் கலைந்துவிடுமோ என்பது போலவே இருந்தது உக்கிர காளியின் சிலை.சிலையின் காலடியில் ஒரு பாத்திரத்தில் ஆட்டின் ரத்தமோ... எருமை மாட்டின் ரத்தமோ செக்கச் செவேலென்று வைக்கப்பட்டிருந்தது.ஒரு வாழை இலையில் சோறுடன் மாமிசத் துண்டுகள் கலவையாய்.அதனருகே ஒரு செம்பில் நீர். சாம்பிராணிப் புகை சூழ்ந்திருந்தது அவ்விடத்தில்.அச்சூழ் நிலைகளையெல்லாம் வைத்துப் பார்த்தால் அப்போதுதான் பூசை முடிந்ததுபோல் தோன்றியது.

குணசேகரன் உள்ளே நுழைந்த பொது அங்கு யாரும் காணப்படவில்லை.அக் கோயிலுக்குப் பூசாரியைத் தவிற யாரும் வருவார்களா என்பது சந்தேகமே.இப்போது பூசாரி கூட அங்கில்லை.ஆண் என்ற போதிலும் அந்த சூழ் நிலை குணசேகரனை கொஞ்சம் அச்சம் கொள்ள வைத்தது.

உள்ளே நுழைந்த குணசேகரன் காளியின் எதிரே போய் நின்றான்.உச்சி முதல் பாதம் வரை காளியின் திரு மேனியைத் தரிசித்தான்.பிறகு கண்களை மூடி கரங்களைக் குவித்து மனதை ஒருநிலைப் படுத்தி..

தாயே காளியம்மா...உன்னை வணங்குகிறேன்..கேட்டவர்க்கு கேட்ட வரம் அளிப்பவளே..எனக்கும் நான் வேண்டியதை.. வேண்டிய வரத்தை அளித்துவிட்டாய் அம்மா..ஹேமாவதியை கண்டவுடனேயே அவளே எனக்கு மனைவியாய் அமைய வேண்டுமென உன்னை வேண்டிக்கொண்டேன்.என் வேண்டுதலை எற்று ஹேமாவதியே எனக்கு மனைவியாக வர வரமளித்தாய்.உன் கருணையே கருணை.நானும் ஹேமாவதியும் பல நூறு ஆண்டுகள் மகிழ்ச்சியாய் வாழ வேண்டும்.நன் மக்களைப் பெறவேண்டும் உன் ஆசியால்...தலைமுறைக்கும் நீயே காவலாய் இருக்க வேண்டுமம்மா என மனமுருக வேண்டினான்.உனக்கு நன்றியம்மா என மனமிளக நன்றி சொன்னான்.

மெல்லக் கண்களைத்திறந்த குணசேகரன் மீண்டும் ஒரு முறை காளியின் திருவுவைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டான்.பின் உடல் முழுதும் நிலத்தில் பட குப்புறப் படுத்து காலகளை நீட்டி முகத்தை நிலத்தில் பதித்து கைகளை தலையின் மேற்புரம் நீட்டிக் குவித்து நமஸ்கரித்தான்.வாய் காளிக்கு நன்றி சொல்லிய படி இருந்தது.அப்படியே இன்னிலையிலேயே நிமிட நேரம் கிடந்தான் குணசேகரன்.

விதி காத்திருந்தது.

திறந்திருந்த கதவின் பின்னால் ஒளிந்து கொண்டிருந்த அந்த மனிதன் வெளியே வந்தான்.கையில் நீளமான கத்தி.பூனைபோல் மெல்ல மெல்ல நடந்து குணசேகரனை நோக்கி நடந்தான்.கண்களை மூடி கால்களை நீட்டி நிலத்தில் குப்புறப்படுத்தபடி நமஸ்கரித்துக்கொண்டு தன் பிரார்த்தனையை தன் நன்றியைக் காளிக்குச் சொல்லிக்கொண்டிருந்த குணசேகரனின் அருகில் வந்து நின்றான்.கணமும் தாமதிக்காது தன் கையிலிருந்த கத்தியால் ஓங்கி ஒரே போடு போட்டான் குணசேகரன் கழுத்தில்.வெண்ணைக்குள் இறங்கும் கத்தியாய் குணசேகரன் கழுத்தில் இறங்கியது அவன் கையில் இருந்த நீண்ட கத்தி.ஒரு முனகல் கூட இல்லாமல் முண்டமானான் குணசேகரன்.அறுபட்ட குணசேகரனின் கழுத்தை பந்தை உதைப்பதுபோல் அம்மனிதன் எட்டி உதைக்க தலை உருண்டு உருண்டு ஓடி ஓடி.. ஆடி ஆடி.. ஓரிடம் சென்று ஆட்டத்தை நிறுத்தி அசையாமல் நின்றது.தலை அறுபட்டு முண்டமாய்க் கிடந்த உடலிலிருந்து ரத்தம் பக் பக் என்று துள்ளித் துள்ளி வெளியே பீய்ச்சியடித்தது.அப்படி ஒவ்வொரு முறையும் ரத்தம் வெளி வரும் போதெல்லாம் முண்டம் முன்னும் பின்னும் துடித்து ஆடியது.பின் ஆட்டத்தை நிறுத்தி அமைதியாகிக் கிடந்தது.

மீண்டும் போய் கதவின் பின்னால் ஒளிந்து கொண்டான் அம்மனிதன்...அக்கொலைகாரன்.விதி சந்தோஷப் பட்டது.அடுத்த நகர்வுக்காகக் காத்திருந்தது.

அடுத்து என்ன செய்யப் போகிறது பாழும் விதி..? அடுத்த வாரம் பார்ப்போமா...? நன்றி...

தொடரும்...

Episode 09

Episode 11

{kunena_discuss:956}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.