(Reading time: 15 - 29 minutes)

13. புதிர் போடும் நெஞ்சம் - உஷா

இந்த வாரம் மிகச் சிறிய பதிவாகி விட்டது... ஆனால், அஞ்சனாவையும், ஆர்யாவையும் பேச விட்டு விட்டேன்.. படிச்சு விட்டு சொல்லுங்க தோழமைகளே உங்கள் கருத்துக்களை...

புதிர் 13

காலை நேரம்...  தனது எமாகா RX 100 ஐ நிறுத்தி விட்டு..  பைக் சாவியை விரலில் சுழற்றிக் கொண்டே..

“அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது”,

என்று அன்று எப். எம்.மில் கேட்ட பாடலை தனக்கு மட்டும் கேட்குமளவு வாய்க்குள்ளே இசைத்த படி அலுவலகத்திற்குள் ஆர்யமன் நுழைந்த பொழுதே...

Puthir podum nenjam

காதல் சொன்ன காகிதம் பூவாய் போனது...

வானில் போன தேவதை வாழ்த்து சொன்னது...

ஒரு தத்தை... கடிதத்தை தன் நெஞ்சிக்குள்ளே வாசிக்க..

தனக்குள் ஒலித்த பாடலைத் தொடர்வது போல பாடிய பெண் குரல் இவன் காதுகளை எட்ட... ‘யாரது என் பாட்டுக்கு எதிர் பாட்டு பாடுறது...’,  என்று நிமிர்ந்து பார்க்க...

அங்கோ அஞ்சனா -  பாடும் பாட்டிற்கேற்ப அவள் கால்களும் நடனமாடிக் கொண்டே நடை பயின்ற படி சென்று கொண்டிருக்க.... அதைக் கண்டதும்...

‘அடி நீ தானா அந்த குயில்...’, என்று இவனுக்குள் இருந்த பாடகன் பொங்க...

அதே சமயம் முந்தைய நாள் அனுபவங்கள் அணி வகுக்க...

‘ஹூம் இது குயிலா??? மூட்டைப் பூச்சி!!! இன்னைக்கு என்ன டார்ச்சர் செய்ய காத்திருக்காளோ.....’, என்ற எரிச்சல் மூள.. அவளிடமிருந்து விலக்கிய பார்வை நிலைத்தது மற்றொன்றில்!!!

அதே சமயம் அந்த ஹை சீலிங் கட்டிடத்தில்... மாடி லாபியில் நின்ற கொண்டிருந்த சசியும், முகுந்த்தும் அந்த குரல் கேட்டு.. கீழே பார்த்த பொழுது.. அவர்கள் பார்வை வட்டத்தில் அஞ்சனா வந்து கொண்டிருக்க...

“ஹாய் அஞ்சு”, சசி அழைக்க...

அந்த அழைப்பில்... குரல் வந்த திசையை நோக்கி  வேகமாக மாடியை நோக்கி நிமிர்ந்த அஞ்சனா... இருவரையும் பார்த்ததும் குதுகலமாய்,

“ஹாய் சசி.. ஹாய் செந்தாமரை”, என்று இருவரையும் பார்த்து.. வெறுமனே கையை மட்டும் அசைத்திருக்கலாம்.... கூடுதல் எபெக்ட்டாக  ஒரு துள்ளு துள்ளி அதை செய்ய...

அந்த வழு வழுத் தரையில் இருந்த ஈரம்  இன்னும் உலராமல் இருக்க...  அவள் துள்ளலில் பறந்த கால்கள் தரையிறங்கியது தான் தாமதம்... அதே  வேகத்திலே சறுக்கி செல்ல.. நிலைத் தடுமாறி பின்னால் சாய்ந்தவள்...

இன்று  மண்டை உடையப் போவது உறுதி என்ற பீதியில் கண்களை இறுக மூடிக் கொண்டி, “ஆஆஆஆ”, என்ற கத்திய படியே சறுக...

அவள் எண்ணியது போல நடக்காமல்.... இரு வலிய கரங்கள் தன்னை பிடித்துக் கொள்வதை உணர்ந்ததும்.. இனி ஆபத்தில்லை என்ற நிம்மதி உண்டாகும் பொழுதே தன்னை பிடித்தவனின் மூச்சுக் காற்று  இவள் முகத்தில் மோதியது...

ஏதோ ஆணின் பிடியில்... என்றதுமே அவளுக்குள் இருந்த தற்காப்பு உணர்வோ என்னவோ சட்டென்று அவளை கண் திறக்க வைக்க...

அவள் கண்களில் தெரிந்தது ஆர்யமனின் முகம் - மிக நெருக்கத்தில்! அதுவும்  கண்களை மூடிய படி!!!! அது ஆர்யமன் என்றதும் பாதுகாப்பு உணர்வு மட்டுமே மேலெழ...

‘நான் தான் மண்டை உடைஞ்சிடும்ன்னு கண்ணை மூடினா... இவன் ஏன் கண்ணை மூடிகிட்டு இருக்கிறான்’ - அவளால் அவ்வளவு தான் சிந்திக்க முடிந்தது..

கண்களை மூடி இருந்தவனின் இறுகப் பிடித்த கைகள்... மெல்ல மெல்ல... தன் இறுக்கத்தை தளர்த்தி... பூவைத் தாங்குவது போல மென்மையாக மாறிக் கொண்டிருப்பதை... உணராத.. இல்லை உணர முயலாத அஞ்சனாவோ.. அடுத்த கணமே..

“ஆர்யா!!!! காஞ்சனாவை க்ளோஸ் அப்ல பார்க்க அவ்வளோ பயங்கரமா இருந்ததா? கண்ணை மூடிகிட்டீங்க”, என்று கேட்டுக் கொண்டே எழுந்தரிக்க முயல...

அவள் அழைப்பில்.... அந்த கணம்... தன்னிலை மறந்திருந்தவன் கனவு கலைந்தது போல விழித்து.... பெரிய குற்றம் இழைத்தது போல.. தலையை உலுக்கிக் கொண்டு அவளை தன்னிடம் இருந்து வேகமாக விலக்க... அவன் விலக்கிய வேகத்தில் நிலை தடுமாறிய அஞ்சனாவோ... 

அவன் செய்கையை விளையாட்டாக எடுத்துக் கொண்டு

“காப்பாத்துற மாதிரி வந்து கவுத்தி விடுறீங்க ஆர்யா!”, என்று தன்னை நிலைப் படுத்திக் கொள்ள அனிச்சையாக அவன் தோளைப் பதறினாள்..

அவள் கை பட்டதுமே... தீயைத்  தொட்டது போல... அதை தட்டி விட்டு  தன்னை மொத்தமாக பின்னுக்கு இழுத்தவன் உடல் இறுகியது... அனல் கக்க அவளைப் பார்த்து...

“இந்த தொட்டு பேசுற வேலையெல்லாம் வச்சிக்காதே!!”, பத்திரம் காட்டி உறுமியவனின் சத்தம் நிசப்தமாக இருந்த அந்த கட்டிடத்தில்  எதிரொலித்தது...

திடீரென்று சீறியதாலோ.. இல்லை விலகல் தன்மையோடு அவன் பேசியதாலோ... அஞ்சனாவால் அதை இயல்பாய் எடுத்து கொள்ள முடியவில்லை... அவள் மென் மனம் காயப்பட்டு போக...

அங்கிருந்து விடு விடுவென்று சென்றவனை பின் தொடர்ந்தவள்... சண்டையிடவில்லை, கோபப் படவில்லை, குற்றம் சொல்லவில்லை..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.